டி20-யில் அதிக சதம்: விராட் கோலியை பின்னுக்குத் தள்ளினார் டேவிட் வார்னர்
- விராட் கோலி 9 சதங்கள் அடித்தார்.
- டேவிட் வார்னர் 10 சதங்களுடன் அவரை முந்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் சிட்னி தண்டர்- சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் சேர்த்தது.
தொடக்க வீரராக களம் இறங்கிய அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அபாரமாக விளையாடி 65 பந்தில் 110 ரன்கள் விளாசினார். இது டி20 கிரிக்கெட்டில் அவரின் 10-வது சதமாகும். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளினார். விராட் கோலி 9 சதங்கள் அடித்துள்ளார்.
கிறிஸ் கெய்ல் 22 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். பாபர் அசாம் 11 சதங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சிட்னி சிக்சர்ஸ் ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி சதத்தால் (42 பந்தில் 100) 17.2 ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.