சிஎஸ்கே அணியின் நீண்டநாள் சாதனையை முறியடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- கொல்கத்தா அணியின் சுழலில் சிக்கி பெங்களூர் 123 மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
- 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2023 16-வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 9-வது போட்டியில் கொல்கத்தா நைட் டைர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டுப்ளெசிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 204 ரன்களை குவித்தது. இதனையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி ஆடியது.
கொல்கத்தா அணியின் சுழலில் சிக்கி பெங்களூர் 123 மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் மற்றும் சுயாஷ் ஷர்மா ஆகியோ இணைந்து 9 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்னதாக 2012-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
இந்த சாதனையைத் தான் வருண் சக்கரவர்த்தி (4 விக்கெட்டு), சுயாஷ் ஷர்மா (3 விக்கெட்டு), சுனில் நரைன் (2 விக்கெட்டு) ஆகியோர் சேர்ந்து மொத்தமாக 9 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 9 விக்கெட்டுகள் (2023)
சென்னை சூப்பர் கிங்ஸ் - 8 விக்கெட்டுகள் (2012)
சென்னை சூப்பர் கிங்ஸ் - 8 விக்கெட்டுகள் (2019)
சென்னை சூப்பர் கிங்ஸ் - 8 விக்கெட்டுகள் (2019)