கிரிக்கெட்

சிஎஸ்கே வெற்றிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் profile-யை மாற்றிய ஜடேஜா

Update: 2023-05-30 08:16 GMT
  • சென்னை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
  • போட்டி முடிந்த பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அகமதாபாத்:

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. முடிவில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்த போட்டியில் 'டாஸ்' ஜெயித்த சென்னை கேப்டன் டோனி, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தது.

அடுத்து விளையாடிய சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட டென்ஷனுக்கு மத்தியில் இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார். முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்ததால் நெருக்கடி அதிகரித்தது. கடைசி 2 பந்தில் 10 ரன் தேவையாக இருந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார்.சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்ததோடு கோப்பையை உச்சிமுகர்ந்தது. போட்டி முடிந்த பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் profile-யை மாற்றியுள்ளார். அதில் ஜடேஜாவை டோனி தூக்கியது போல உள்ள புகைப்படத்தை தனது profile-லில் வைத்துள்ளார். லீக் போட்டிகளில் ஜடேஜா அவுட் ஆக வேண்டும் என குரல் கொடுத்த ரசிகர்களை கையெடுத்து கும்பிட வைத்து விட்டார் ஜடேஜா என்றால் மிகையாகாது.

Tags:    

Similar News