null
நான் ஃபார்ம் அவுட்டில் இருக்கிறேனா? - சூர்யகுமார் யாதவ் விளக்கம்
- நேற்றைய போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- இந்தாண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். குறிப்பாக இந்தாண்டு சூர்யகுமார் யாதவ் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவரின் இந்தாண்டு சராசரி 15 ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில், நேற்றை போட்டியின் வெற்றிக்கு பின்பு பேசிய சூர்யகுமார் யாதவ், "நெட் பயிற்சியின் போது நான் நன்றாகவே பேட்டிங் செய்து வருகிறேன். என் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்தையும் நான் முயற்சி செய்கிறேன். நான் ரன்களை அடிக்க முயற்சித்து வருகிறேன். நான் ஃபார்ம் அவுட்டில் இல்லை. அவுட் ஆஃப் ரன்ஸ் தான். மீண்டும் ரன்கள் குவிப்பேன்" என்று தெரிவித்தார்.