கிரிக்கெட் (Cricket)

அந்த இந்தியர்தான் எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்- அமெரிக்கா அணியின் கேப்டன்

Published On 2026-02-03 14:08 IST   |   Update On 2026-02-03 14:08:00 IST
  • இந்திய அணியின் முன்னாள் கேப்டன்தான் என மோனங்க் படேல் கூறியுள்ளார்.
  • அமெரிக்க அணியின் கேப்டன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

மும்பை:

20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதையொட்டி 5 நாட்கள் பயிற்சி ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் மும்பை டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் இந்திய 'ஏ' அணி, அமெரிக்காவுடன் மோதியது. முதலில் பேட் செய்த இந்திய 'ஏ' அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்தது. தமிழக வீரர் என்.ஜெகதீசன் 104 ரன்களும் (55 பந்து, 11 பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் ஆயுஷ் பதோனி 60 ரன்களும் (26 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர்.

பின்னர் ஆடிய அமெரிக்க அணி 19.4 ஓவர்களில் 200 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 'ஏ' அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் நாளை மோதுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தான் என அமெரிக்க அணியின் கேப்டன் மோனங்க் படேல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அணியின் கேப்டன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News