கிரிக்கெட் (Cricket)

சையத் முஷ்டாக் அலி கோப்பை: ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்ற ஜார்க்கண்ட்

Published On 2025-12-15 03:12 IST   |   Update On 2025-12-15 03:14:00 IST
  • டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
  • முதலில் ஆடிய ஜார்க்கண்ட் அணி 20 ஓவரில் 181 ரன்கள் எடுத்தது.

புனே:

சையத் முஷ்டாக் அலி கோப்பையின் நடப்பு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில், புனேவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட், மத்திய பிரதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஜார்க்கண்ட் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான இஷான் கிஷன் 30 பந்தில் 5 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 63 ரன்கள் குவித்தார்.

மத்திய பிரதேச அணி சார்பில் வெங்கடேஷ் அய்யர் 3 விக்கெட்டும், திரிபுரேஷ் சிங் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து, 182 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மத்திய பிரதேச அணி களமிறங்கியது.தொடக்க ஆட்டக்காரர் ஹர்ஷ் கவாலி 61 ரன்னில் அவுட்டானார்.

ஹர்பிரீத் சிங் பாட்டியா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். கடைசி வரை வெற்றிக்கு போராடினார்.

இறுதியில், மத்திய பிரதேச அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் ஜார்க்கண்ட் அணி திரில் வெற்றி பெற்றது.

ஜார்க்கண்ட் அணி தான் ஆடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

Tags:    

Similar News