null
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: கடைசி நேரத்தில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்தியா
- இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 179 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- இங்கிலாந்து அணி தரப்பில் ரெஹான், பஷிர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
விசாகப்பட்டினம்:
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. ரஜத் படிதார் முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆனார். மேலும் முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். ரோகித் சர்மா 14 ரன்களிலும், அடுத்து வந்த சுப்மன் கில் களம் 34 ரன்களிலும் ஷ்ரேயஸ் அய்யர் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெய்ஸ்வால் தனது 2-வது சதத்தை விளாசினார்.
ஜெய்வாலுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடிய ராஜத் பட்டிதார் 32 ரன்னில் பரிதாபமாக ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அக்ஷர் படேல் (27) மற்றும் பரத் (17) கட் ஷாட் ஆட முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் பஷிர், ரெஹான், 2 விக்கெட்டும் ஆண்டர்சன், டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பர்றினர். ஜெய்ஸ்வால் 170 ரன்களுடனும் அஸ்வின் 5 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
ஆட்ட நேர முடிவில் இந்திய அணி வீரர்கள் தேவையில்லாமல் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு அவுட் ஆனது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.