கிரிக்கெட்

அபாய கட்டத்தை தாண்டிய மயங்க் அகர்வால்- முதலில் என்ன சொன்னார் தெரியுமா?

Published On 2024-01-31 16:25 GMT   |   Update On 2024-01-31 16:25 GMT
  • இந்த சம்பவம் குறித்து மயங்கின் மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
  • மயங்கின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் தற்போது ரஞ்சி தொடரில் விளையாடி வருகிறார். கர்நாடக அணி கேப்டனான மயங்க் அகர்வால் தனது அணியினருடன் டெல்லி புறப்பட விமான நிலையம் சென்றார். அணியினருடன் விமானத்தில் ஏறிய மயங்க் அகர்வாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

விமானத்தில் இருந்த படி சில முறை அவர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்தில் இருந்து அவசரஅவசரமாக வெளியேறிய மயங்க் அகர்வால் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவரு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மயங்க் அகர்வாலின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மயங்க் அகர்வால் குணமடைய வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி என எக்ஸ் தளத்தில் தனது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

அதில், நான் இப்போது நன்றாக உணர்கிறேன். மீண்டு வர தயாராகி வருகிறேன். குணமடைய வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி. பிரார்த்தனைக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி, அனைவருக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.

இருப்பினும், இந்த சம்பவம் குறித்து மயங்கின் மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். விமானத்தில் அமர்ந்திருக்கும் போது தண்ணீர் என்று தவறாக நினைத்து மயங்க் அந்த திரவத்தை தனக்கு முன்னால் குடித்ததாக மேலாளர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேற்கு திரிபுரா எஸ்பி கிரண் குமார் கூறுகையில், மயங்கின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News