கிரிக்கெட்

3 பந்து வீச்சாளர்களை எதிர் கொள்ள கஷ்டப்பட்டேன்- மனம் திறந்த ஏபிடி வில்லியர்ஸ்

Published On 2023-07-04 06:28 GMT   |   Update On 2023-07-04 06:28 GMT
  • கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஏபிடி வில்லியர்ஸ் அறிமுகமானார்.
  • சில சமயங்களில் அடி வாங்கினாலும் ரஷித்கான் கம்பேக் கொடுக்கும் தன்மையை கொண்டவர்.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அனைவரும் அழைக்கப்படுகிறார். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 19000-க்கும் மேற்பட்ட ரன்களையும் 47 சதங்களையும் குவித்துள்ளார்.

இந்நிலையில் தனது கேரியரில் 3 பந்து வீச்சாளர்களை எதிர் கொள்ள கஷ்டப்பட்டதாக ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-


2006-ல் முதல் முறையாக நான் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது ஷேன் வார்னே பெரிய சவாலை கொடுத்தார். குறிப்பாக நுணுக்கங்களை தாண்டி தம்முடைய பெயராலேயே அவர் பெரிய அச்சுறுத்தலை கொடுத்தார். மறுபுறம் அனுபவமின்றி இருந்த நான் அந்த சமயத்தில் அவரிடம் மிகவும் தடுமாறினேன்.அதன் பின் வயது அதிகரிக்கும் போது அனுபவமும் அதிகரித்தது.

ஆனால் அதற்கு நிகராக பும்ரா போன்ற புதிய பவுலர்கள் மிகப் பெரிய சவாலை கொடுத்தனர். ஏனெனில் அதிக போட்டியை கொடுத்த அவர் எப்போதும் பின் வாங்காமல் உங்களது முகத்துக்கு நேராக சவாலை கொடுப்பார்.

அதே போல் ரஷித் கான் எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமான ஒருவர். சில சமயங்களில் அடி வாங்கினாலும் அவரும் கம்பேக் கொடுக்கும் தன்மையை கொண்டவர்.

அவர் ஓவரில் நான் ஒருமுறை 3 சிக்சர்களை அடித்தேன். ஆனால் அவர் அடுத்த பந்திலேயே என்னை அவுட்டாக்கினார். அந்த வகையில் அவர்களைப் போன்ற பவுலர்கள் நான் எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமாக உணர்ந்தேன். அதனால் அவர்கள் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது.

என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News