சினிமா செய்திகள்

ராமர், சீதை வேடத்தில் நடிக்க ரன்பீர் கபூர், சாய்பல்லவிக்கு எதிர்ப்பு

Published On 2024-06-24 02:30 GMT   |   Update On 2024-06-24 02:30 GMT
  • ரன்பீர் கபூரை ராமராக கற்பனை செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
  • சாய்பல்லவி முகத்தில் சீதை சாயல் கொஞ்சமும் இல்லை.

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சாய்பல்லவி இந்தியில் தயாராகும் ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்கிறார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் ஏற்கனவே வலைத்தளத்தில் கசிந்து வைரலாகிறது. சீதை கதாபாத்திரத்துக்கு சாய்பல்லவி பொருத்தமானவர் இல்லை என்று ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது மீண்டும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் லட்சுமணனாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் சுனில் லாஹ்ரி கூறும்போது,"அனிமல் படம் பார்த்த பிறகு அதில் நடித்திருந்த ரன்பீர் கபூரை ராமராக கற்பனை செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

சீதை வேடத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். ஆனால் அவரது முகத்தில் சீதை சாயல் கொஞ்சமும் இல்லை. எனவே சீதையாக அவர் எப்படி நடிக்கப் போகிறார் என்று எனக்கு புரியவில்லை. சாய்பல்லவி நடித்த படங்களை நான் இதுவரை பார்க்கவில்லை. அவர் முகத்தில் தேவதைக்குரிய லட்சணங்கள் இல்லை'' என்றார். சுனில் லாஹ்ரி கருத்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News