சினிமா செய்திகள்
null

`தக் லைஃப்' படத்தில் அசோக் செல்வன்?

Published On 2024-05-27 10:04 GMT   |   Update On 2024-05-27 10:13 GMT
  • நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
  • நாயகன் திரைப்படத்திற்கு பிறகு கமலை வைத்து மணி ரத்னம் தக் லைஃப் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தனக்கான கதையை தேர்ந்தெடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றவர் அசோக் செல்வன்.

அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான போர் தொழில் திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் சபாநாயகன், ப்ளூ ஸ்டார் போன்ற படங்களும் வெற்றி பெற்றன.

அதைத் தொடர்ந்து அசோக்செல்வன் நடிப்பில் பொன் ஒன்று கண்டேன் ஓடிடி திரைப்படமாக வெளியானது. அடுத்ததாக எமக்கு தொழில் ரொமான்ஸ் திரைப்படத்தில் நடித்து வெளியாக தயாராகவுள்ளது.

நாயகன் திரைப்படத்திற்கு பிறகு கமலை வைத்து மணி ரத்னம் தக் லைஃப் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் திரிஷா, சிம்பு, மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் ஜெயம் ரவி கதாப்பாத்திரத்திற்கு மாற்றாக அசோக் செல்வன் நடிக்கவுள்ளதாக தகவல் பரவியது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் அசோக் செல்வன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், "உண்மையான மறக்கமுடியாத நாட்கள், அதிசயங்களும் நடக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். கமல் நடிப்பில் வெளியான சத்யா படத்தின் ரீமேக்கில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிப்பது கூடுதல் தகவலாகும்.

இதன் மூலம் அசோக் செல்வன், தக் லைஃப் படத்தில் தான் நடிக்கப் போவதை தெரிவித்துள்ளார் என்று ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருவதோடு அசோக் செல்வனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News