சினிமா செய்திகள்
null

45- திரைவிமர்சனம்

Published On 2026-01-01 15:43 IST   |   Update On 2026-01-01 15:43:00 IST
அர்ஜுன் ஜன்யாவின் இசை படத்திற்கு பெரிய பலம்.

சாப்ட்வேர் இன்ஜினீயரான ராஜ் பி. ஷெட்டி, தனது தாய் மற்றும் காதலி கௌஸ்துபா மணி உடன் அமைதியான நடுத்தர வர்க்க வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஒரு நாள், ஹெல்மெட் அணியாமல் போன் பேசிக்கொண்டே பைக் ஓட்டும் போது, தவறுதலாக ரோஸி என்ற கருப்பு நாயை மோதிவிடுகிறார். அந்த நாய் இறந்து விடுகிறது.

அந்த நாய்க்கு உரிமையாளரான உள்ளூர் தாதா உபேந்திரா, இந்த சம்பவத்தால் கோபமடைந்து ராஜ் பி. ஷெட்டியை உடனடியாக தண்டிக்காமல், 45 நாளில் உன்னை கொன்று விடுவேன் என்று கூறி அனுப்பி விடுகிறார்.

இறுதியில் ராஜ் பி. ஷெட்டி 45 நாட்களை எப்படி கடந்தார்? தாதா உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டியை கொன்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் வினய் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஜ் பி. ஷெட்டி, தனது கதாபாத்திரத்தை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். பயம், குழப்பம், குற்ற உணர்ச்சி மற்றும் மனமாற்றம் ஆகிய உணர்வுகளை அளவோடு வெளிப்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார். அவரது நடிப்பு கதைக்கு நம்பகத்தன்மையை சேர்க்கிறது.

ராயப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ள உபேந்திரா, திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். வெளிப்படையாக ஒரு தாதாவாக தோன்றினாலும், அவரது கதாபாத்திரத்தின் பின்னணி வெளிப்படும் போது அது மேலும் ஆழம் பெறுகிறது.

சிவண்ணா என்ற கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார், கதைக்கு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளார். ஆன்மீகமும் மனிதநேயமும் கொண்ட இந்த கேரக்டரில், அமைதியான நடிப்பை வழங்கியுள்ளார். ராஜ் பி. ஷெட்டி வழிகாட்டியாகவும் பாதுகாவலராகவும் அவர் தோன்றும் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

கதாநாயகியாக நடித்துள்ள கௌஸ்துபா மணி, குறைந்த காட்சிகளிலேயே தனது கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்கம்

கர்மா, வாழ்க்கை, மரணம், விதி போன்ற கருத்துகளை மையமாக கொண்டு இயக்கி இருக்கிறார் இயக்குனர் அர்ஜுன் ஜன்யா. தத்துவக் கருத்துகளை நேரடியாக சொல்லாமல், கதை ஓட்டத்தின் வழியே எடுத்துச் சொல்வது பாராட்டுக்குரியது.

சில இடங்களில் மெதுவாக நகர்ந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதை படத்தை தொடர்ந்து பார்க்க தூண்டுகிறது. ஒரு மனிதன் செய்த தவறுக்குப் பிறகு அவன் எதிர்கொள்ளும் மனப்போராட்டம், கர்மாவின் தாக்கம் மற்றும் வாழ்க்கையின் மதிப்பு ஆகியவற்றை மையமாக கொண்டு உருவான ஒரு வித்தியாசமான திரைப்படமாக அமைந்துள்ளது.

இசை

அர்ஜுன் ஜன்யாவின் இசை படத்திற்கு பெரிய பலம்.

ஒளிப்பதிவு

சத்யா ஹெக்டேவின் ஒளிப்பதிவு பல இடங்களில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.

ரேட்டிங்- 3/5

Tags:    

Similar News