சினிமா
சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `விஸ்வாசம்' படத்தின் கதை பற்றிய தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், படத்தில் நயன்தாராவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாம். #Viswasam #AjithKumar
நயன்தாரா முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிப்பதைவிட தனி கதாநாயகியாக நடிப்பதையே அதிகம் விரும்புகிறார். அவருக்கு முன்னணி கதாநாயகர்களுக்கு இணையான மார்க்கெட் உருவாகி இருப்பதே இதற்கு காரணம்.
தற்போது விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என்று முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இந்த 3 படங்களிலுமே நயன்தாராவுக்கு அந்தந்த படங்களின் கதாநாயகர்களுக்கு சமமான வேடம் என்கிறார்கள். விஸ்வாசம் படத்தில் அஜித்குமார் ஊருக்கு அடங்காத தாதாவாக நடிக்கிறார். அவருக்கு திருமணம் செய்துவைத்தால் மாறிவிடுவார் என்று திட்டமிடும் அவர் நண்பர்கள் தாதா என்பதை மறைத்து பக்கத்து ஊரை சேர்ந்த நயன்தாராவை திருமணம் செய்து வைக்கின்றனர். அஜித்தின் உண்மை முகம் தெரிந்ததும் அவரை பிரியும் நயன்தாரா தனியாக வசிக்கிறார்.
சொந்தமாக தொழில் செய்யும் நயன்தாராவுக்கு ஒரு பெரிய சிக்கல் வருகிறது. அதில் இருந்து அஜித் அவரை எப்படி காப்பாற்றி ஒன்று சேர்கிறார்கள் என்பதே கதையாம். அஜித்துக்கு நிகராக நயன்தாராவுக்கு காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன என்கிறார்கள். #Viswasam #AjithKumar #Nayanthara