அல்லு அர்ஜுனை சந்தித்த லோகேஷ் கனகராஜ்... அடுத்த சம்பவம் ரெடி
- இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளது.
- ‘இரும்புக் கை மாயாவி’ கதையில் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'புஷ்பா-2' படத்தை தொடர்ந்து இயக்குநர் அட்லி இயக்கத்தில் சயின்ஸ்பிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இப்படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளது தற்போது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக நேற்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜுனை சந்தித்து பேசி இப்படத்தை உறுதி செய்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு தொடங்கி 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சூர்யாவுக்கு சொன்ன 'இரும்புக் கை மாயாவி' கதையில் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.