சினிமா

சர்கார் படத்திற்கு எதிராக வழக்கு - நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் பதிலளிக்க உத்தரவு

Published On 2018-07-09 08:07 GMT   |   Update On 2018-07-09 08:07 GMT
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. #Sarkar #Vijay
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் போஸ்டர்களில் விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. இதற்கு சமூகநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து சுகாதாரத்துறை மூலமாக விஜய், முருகதாஸ் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பேரில் அந்த போஸ்டர்கள் நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர்களின் சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டன. 

இந்த நிலையில், சர்கார் படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில் சர்கார் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சியை விளம்பரப்படுத்தியதாக படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பு நிறுவனம் சென்னை அடையார் புற்றுநோய் மையத்திற்கு தலா ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 



மேலும் மத்திய, மாநில அரசுகள், நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Sarkar #Vijay

Tags:    

Similar News