சினிமா செய்திகள்

'தல'யின் ரேஸ் டைரி... 'Racing Isn't Acting' ஆவணப்பட க்ளிம்ஸ் வீடியோ!

Published On 2025-12-22 15:43 IST   |   Update On 2025-12-22 15:43:00 IST
  • ஆவணப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.
  • சமீபத்தில் அஜித் "GENTLEMAN DRIVER OF THE YEAR 2025" விருது வாங்கினார்.

நடிப்பு, கார் ரேஸ், குடும்பம் என தன்னை ஒரு பிஸியான வாழ்க்கைக்குள்ளேயே வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் குட் பேட் அக்லி. இப்படம் ரூ.300 கோடி வசூலித்தது. அதனைத்தொடர்ந்து கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய குழுமூலம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பந்தயங்களில் பங்கேற்று இந்தியாவை பெருமைப்படுத்தி வருகிறார். அதில் கொஞ்சம் இடைவெளி கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்தினருடனும் நேரம் செலவிட்டு வருகிறார். இந்நிலையில் அஜித்தின் இந்த கார் ரேஸிங் பயணம், ஆவணப்படமாக வெளிவர உள்ளது. இதனை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். 

'Racing Isn't Acting' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அஜித் "GENTLEMAN DRIVER OF THE YEAR 2025" விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Full View


Tags:    

Similar News