கார்

முன்பதிவில் அசத்தும் டாடா டியாகோ EV - எத்தனை யூனிட்கள் தெரியுமா?

Update: 2022-11-24 10:09 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2022 டிகோர் EV மாடல் இந்திய சந்சதையில் அறிமுகம் செய்யப்பட்டது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனம், டாடா டியாகோ EV 20 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை பெற்று இருப்பதாக அறிவித்து இருக்கிறது. கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய டாடா டியாகோ EV எலெக்ட்ரிக் ஹேச்பேக் காரை அறிமுகம் செய்தது. இதன் முன்பதிவு அக்டோபர் 10 ஆம் தேதி துவங்கியகது.

இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ EV மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது. இந்த விலை காரை முதலில் முன்பதிவு செய்யும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும். முன்பதிவு துவங்கிய முதல் நாளே காரை வாங்க சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டாடா டியாகோ EV மாடலை முன்பதிவு செய்தனர் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருந்தது.

புதிய டாடா டியாகோ EV மாடலின் வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்க இருக்கிறது. இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2020 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்த நெக்சான் EV மாடல் இந்தியாவில் தொடர்ந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. இதைத் தொடர்ந்து நெக்சான் EV மேக்ஸ், டிகோர் EV ஃபேஸ்லிஃப்ட் மற்றும் டியாகோ EV போன்ற மாடல்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்து வருகிறது.

இந்திய சந்தையின் எலெக்ட்ரிக் பயணிகள் வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 89 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. முன்னதாக தனது 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு இருந்தது. வரும் ஆண்டுகளில் மேலும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய டாடாட மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

Tags:    

Similar News