வெளியீட்டுக்கு தயாராகும் டாப் 4 சப்-காம்பேக்ட் எஸ்யூவி-க்கள்
- வரவிருக்கும் டாடா சப்காம்பாக்ட் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
- உற்பத்திக்குத் தயாரான மஹிந்திரா விஷன் எஸ் கான்செப்ட் 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள்- மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் ஆகியவை 2026ஆம் ஆண்டில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளன. இது தொடர்பான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த நிறுவனங்கள் தங்களது சப்-4 மீட்டர் மாடல் வரிசையை விரிவுபடுத்தத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் மாருதி சுசுகி நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட Fronx-ஐ ADAS சூட் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் புதிய சப்-காம்பாக்ட் SUV (ஸ்கார்லெட் என்ற குறியீட்டுப் பெயர்) அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா விஷன் S கான்செப்ட்டின் உற்பத்திக்குத் தயாரான மாடலை அறிமுகப்படுத்தலாம். இது ஸ்கார்பியோ குடும்பத்திற்குள் நிலைநிறுத்தப்பட்ட ஒரு சப்-காம்பாக்ட் எஸ்யூவி-ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் பேயோன் காம்பாக்ட் கிராஸ்ஓவர் வெளியீடும் 2026-இல் திட்டமிடப்பட்டுள்ளது.
மாருதி Fronx ஃபேஸ்லிஃப்ட்
புதுப்பிக்கப்பட்ட மாருதி Fronx பலமுறை சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. இந்த காம்பாக்ட் கிராஸ்ஓவர் ADAS ஆப்ஷனுடன் வரும் என்பதை புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன. இது சுசுகியின் அடுத்த தலைமுறை 48V சூப்பர் எனி-சார்ஜ் (SEC) ஹைப்ரிட் பவர்டிரெயினைக் கொண்ட நிறுவனத்தின் முதல் மாடலாகவும் இருக்கலாம்.
டாடா ஸ்கார்லெட்
வரவிருக்கும் டாடா சப்காம்பாக்ட் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், டாடா ஸ்கார்லெட் ஒரு மோனோ-கோக் சேசிஸை அடிப்படையாகக் கொண்டதாகவும், சியரா எஸ்யூவி-இல் இருந்து பல வடிவமைப்பு அம்சங்களை பகிர்ந்து கொள்ளும் என்றும் கூறப்படுகின்றன. ஸ்கார்லெட் மாடலில் டாடா கர்வ்-இல் உள்ள 1.2L மற்றும் நெக்சானின் 1.2L டர்போ பெட்ரோல் என்ஜின்களுடன் வழங்கப்படலாம்.
மஹிந்திரா பேபி ஸ்கார்பியோ
உற்பத்திக்குத் தயாரான மஹிந்திரா விஷன் எஸ் கான்செப்ட் 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து 2027 இல் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும். இறுதி மாடல் அப்சைடு டவுன் L-வடிவ ஹெட்லேம்ப்கள், ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் அப்சைடு டவுன் L-வடிவ டெயில் லேம்ப்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் பனோரமிக் சன்ரூஃப், டூயல் ஸ்கிரீன், 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் வழங்கப்படலாம்.
ஹூண்டாய் பேயோன்
மாருதி Fronx மற்றும் டாடா பன்ச் ஆகியவற்றிற்கு ஹூண்டாய் நிறுவனத்தின் பதிலாக பேயோன் காம்பாக்ட் கிராஸ்-ஓவர் இருக்கும். இது முற்றிலும் புதிய உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 1.2L TGDi பெட்ரோல் என்ஜினைக் கொண்ட முதல் ஹூண்டாய் கார் ஆக இருக்கும். இது கிரெட்டாவின் 1.5L டர்போ பெட்ரோல் என்ஜினை விட மிகவும் கச்சிதமான மற்றும் எரிபொருள் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.