கார்

மின்சார கார்கள் பதிவு 88 சதவீதம் உயர்வு

Published On 2026-01-03 07:36 IST   |   Update On 2026-01-03 07:36:00 IST
  • 2023-ம் ஆண்டில் 73 ஆயிரத்து 280 மின்சார கார்கள் பதிவு செய்யப்பட்டன.
  • இந்திய மின்சார கார் சந்தையில் வின்பாஸ்ட், டெஸ்லா ஆகிய புதுமுகங்கள் நுழைந்துள்ளன.

விடை பெற்றுச் சென்ற 2025-ம் ஆண்டில் மின்சார கார்களுக்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு அதிகமாக காணப்பட்டது. முதல்முறையாக ஒரே ஆண்டில், பதிவு செய்யப்பட்ட மின்சார கார்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.

அதாவது, 1 லட்சத்து 69 ஆயிரத்து 854 மின்சார கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2024-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 90 ஆயிரத்து 525 கார்களுடன் ஒப்பிடுகையில், இது 88 சதவீதம் அதிகம். 2023-ம் ஆண்டில் 73 ஆயிரத்து 280 மின்சார கார்கள் பதிவு செய்யப்பட்டன.

அதிகம் வாங்கப்பட்ட மின்சார கார்களில் டாடா குழுமத்தைச் சேர்ந்த நெக்சன், பஞ்ச், டியாகோ ஆகிய மாடல்கள், தொடர்ந்து முதலிடம் பெற்று வருகின்றன. இந்திய மின்சார கார் சந்தையில் வின்பாஸ்ட், டெஸ்லா ஆகிய புதுமுகங்கள் நுழைந்துள்ளன. வின்பாஸ்ட் கார்கள் 825-ம், டெஸ்லா கார்கள் 225-ம் பதிவு செய்யப்பட்டன.

Tags:    

Similar News