கார்

543 கி.மீ. ரேஞ்ச் வழங்கும் புது எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்த மாருதி சுசுகி

Published On 2025-12-03 10:57 IST   |   Update On 2025-12-03 10:57:00 IST
  • இந்திய சந்தைக்கான இ விட்டாரா மாடலிலும் 49 kWh மற்றும் 61 kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படலாம்.
  • புதிய இ விட்டரா மாடல் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 543 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என WLTP சான்று பெற்றுள்ளது.

மாருதி சுசுகி தனது முதல் முழு மின்சார வாகனமான இ விட்டாராவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடலுக்கான உற்பத்தி ஆகஸ்ட் 2025 இல் குஜராத்தில் உள்ள நிறுவனத்தின் ஹன்சல்பூர் ஆலையில் தொடங்கியது. மேலும் முதல் கட்டமாக செப்டம்பர் மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டது.

புதிய இ விட்டாரா, மாருதி சுசுகியின் EVX கான்செப்ட்டில் இருந்து அதன் வடிவமைப்பைப் பெறுகிறது. கான்செப்ட் காரின் பெரும்பாலான வடிவமைப்பு அதன் உற்பத்தி மாடலிலும் காணப்படுகிறது. இந்த எஸ்யூவி Y-வடிவ DRLகளுடன் ஆங்குலர் ஹெட்லேம்ப் கிளஸ்டர்களைப் பெறுகிறது. அதே நேரத்தில் வீல் ஆர்ச், முன் மற்றும் பின்புற பம்பர்கள் மற்றும் கதவுகளின் கீழ் கிளாடிங்கின் விரிவான பயன்பாட்டையும் கொண்டுள்ளது. கனெக்ட்டட் டெயில் லைட்களும் வழங்கப்பட்டுள்ளன.

கேபினுக்குள், வேறு எந்த மாருதி மாடலிலும் காணப்படாத புதிய கேபின் வடிவமைப்பை இ விட்டாரா கொண்டு வருகிறது. டேஷ்போர்டில் ஃபிரீ ஸ்டான்டிங் டிஸ்ப்ளே உள்ளன. அம்சங்களை பொறுத்தவரை, ஆட்டோ-டிம்மிங் இன்னர் ரியர்-வியூ மிரர், 2-ஸ்போக் ஃபிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், 10.25-இன்ச் டிஜிட்டல் ஸ்கிரீன், 10.1-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆம்பியன்ட் லைட்டிங், நான்கு ஸ்பீக்கர்கள் மற்றும் கீலெஸ் என்ட்ரி போன்ற தொழில்நுட்பங்களுடன் வருகிறது.

மேலும் 19-இன்ச் வீல்கள், 10-வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பவர்டு டிரைவர் இருக்கை, இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம், முன்புறத்தில் வென்டிலேட்டெட் இருக்கைகள், வயர்லெஸ் போன் சார்ஜிங், ஃபாக் லைட்டுகள் கொண்டிருக்கிறது.



இந்திய சந்தைக்கான இ விட்டாரா மாடலிலும் 49 kWh மற்றும் 61 kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படலாம். இதன் பேஸ் மாடலில் உள்ள மோட்டார் 142 bhp பவர் மற்றும் 192.5 Nm டார்க் வெளிப்படுத்தும் என்றும் டாப் எண்ட் மாடல் 172 bhp பவர் வெளிப்படுத்தும்.

புதிய இ விட்டரா மாடல் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 543 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என WLTP சான்று பெற்றுள்ளது. புதிய இ விட்டாரா மாடல் இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் மற்றும் மஹிந்திரா BE 6 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த மாடல் மாருதி நிறுவனத்தின் நெக்சா டீலர்ஷிப் மூலம் விற்பனைக்கு வருகிறது.

Tags:    

Similar News