கார்

இ விட்டாரா முதல் மினி கூப்பர் வரை... விரைவில் இந்தியா வரும் புது கார் மாடல்கள்..!

Published On 2025-12-01 11:10 IST   |   Update On 2025-12-01 11:10:00 IST
  • வருகிற 10-ந்தேதி கியா நிறுவனம் இரண்டாம் தலைமுறை செல்டோஸ் மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது.
  • இது 7-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனுடன் வரும் என்று தெரிகிறது.

2025-ம் ஆண்டு இறுதி மாதம் இன்று பிறந்துள்ளதால் பல புதிய மாடல்களுடன் இந்த ஆண்டு நிறைவு பெற உள்ளது. அதன்படி இம்மாதத்தில் வரவிருக்கும் மின்சார மற்றும் பெட்ரோல், டீசல் மாடல்கள் குறித்து பார்ப்போம்.

மாருதி சுசுகி இ விட்டாரா – டிசம்பர் 2

மாருதி சுசுகி தனது முதல் முழு மின்சார மாடலான இ விட்டாராவை நாளை (டிச.2) இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இ விட்டாரா காரில் Y-வடிவ DRLகள், கனெக்டெட் டெயில் லேம்ப் உள்ளன. சர்வதேச சந்தைகளில், இந்த மாடல் ADAS, 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சரவுண்ட் லைட்கள் போன்ற அம்சங்கள் உள்ளன.

டாடா ஹேரியர், சஃபாரி - டிசம்பர் 9

வருகிற 9ஆம் தேதி டாடா மோட்டார்ஸ் ஹேரியர் மற்றும் சஃபாரி பெட்ரோல் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சியரா எஸ்.யூ.வி.யுடன் புதிய பெட்ரோல் என்ஜின்கள் அறிமுகமானதைத் தொடர்ந்து இந்த மாடல்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஹேரியர் மற்றும் சஃபாரி இரண்டும் 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மோட்டாருடன் வரும் என தகவல்.

கியா செல்டோஸ் - டிசம்பர் 10

வருகிற 10-ந்தேதி கியா நிறுவனம் இரண்டாம் தலைமுறை செல்டோஸ் மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது. வரவிருக்கும் செல்டோஸ், புதுப்பிக்கப்பட்ட டெல்லூரைடைப் போலவே, கியாவின் சமீபத்திய டிசைன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மினி கூப்பர் கன்வெர்ட்டிபிள் - டிசம்பர் 2025

மினி இந்தியா நிறுவனம் புதிய கூப்பர் கன்வெர்ட்டிபிள் மாடலை டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளது, இருப்பினும் சரியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த மாடலில் 201 hp பவர், 300 Nm டார்க் உற்பத்தி செய்யும் 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இது 7-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனுடன் வரும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News