கார்

642கிமீ ரேஞ்ச், 2.5 நொடிகளில் 100கி.மீ. வேகம்... வேற லெவல் போர்ஷே கார் அறிமுகம்

Published On 2025-11-21 14:48 IST   |   Update On 2025-11-21 14:48:00 IST
  • இந்த வேரியண்ட் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டும்.
  • இரண்டு மாடல்களும் டூயல் மோட்டார் AWD சிஸ்டம் கொண்டுள்ளன.

போர்ஷே நிறுவனம் தனது மின்சார கார் சீரிசை விரிவுபடுத்தியுள்ளது. போர்ஷே கயென் எலெக்ட்ரிக், சில தசாப்தங்களுக்கு முன்பு வந்த முதல் கயென் காரைப் போலவே மிகவும் கவர்ச்சிகரமானது. டெய்கான் மற்றும் மக்கான் EV போலவே, கயென் EVயும் எண்ணிக்கையில் மிகையானது.

இந்தியாவில் புதிய போர்ஷே எலெக்ட்ரிக் கார் விலை ரூ.1.75 கோடி மற்றும் டர்போ வெர்ஷன் ரூ.2.25 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் சக்திவாய்ந்த டர்போ டியூனில், இது 1156hp பவர் மற்றும் 1500 Nm டார்க் உருவாக்குகிறது. மேலும் பூஸ்ட் மோடில் 2.5 நொடிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை எட்டும். ஸ்டான்டர்டு வேரியண்ட் 440hp பவர், 835Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த வேரியண்ட் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டும்.



இரண்டு மாடல்களும் டூயல் மோட்டார் AWD சிஸ்டம் கொண்டுள்ளன. மேலும், அளவில் பெரிய 113kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகின்றன. இது முழு சார்ஜ் செய்தால் 642 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும். மேலும் 400 kW வரை ஃபாஸ்ட் சார்ஜ் வசதியும் கொண்டுள்ளது. இது "வயர்லெஸ் சார்ஜிங்" உடன் வரும் முதல் போர்ஷே கார் ஆகும்.

Tags:    

Similar News