கார்

எங்க டிரெண்ட்-ஏ வேற... அக்டோபரில் மாஸ் காட்டிய மாருதி சுசுகி..!

Published On 2025-11-17 15:05 IST   |   Update On 2025-11-17 15:05:00 IST
  • மாருதியின் புதிய விக்டோரிஸ் எஸ்யூவி 10,409 யூனிட்கள் விற்பனையான நிலையில் கிராண்ட் விட்டாராவை 13,496 யூனிட்களை விற்பனையானது.
  • மாருதி அடுத்த மாதம் இந்தியாவில் இ விட்டாரா மாடலை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது எஸ்யூவி மாடல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாகன உற்பத்தியாளர்களும் எஸ்யூவி மாடல்கள் மீது தனி கவனம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், மாருதி நிறுவனம் கடந்த அக்டோபர் மாத வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில், அக்டோபர் 2025 இல் அதிகம் விற்பனையான மாருதி சுசுகி மாடல் டிசையர் காம்பாக்ட் செடான் ஆகும். இதில் 20,791 யூனிட்கள் விற்பனையாகின. இது 20,087 யூனிட்கள் விற்பனையான எர்டிகாவையும், 18,381 யூனிட்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்த வேகன்ஆர் காரையும் முந்தியுள்ளது.

உண்மையில், இரண்டாவது மாதமாக டிசையர் மாடல் மாருதி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காராக இருக்கிறது.

அதன்படி 15,547 யூனிட்களை விற்பனை செய்த ஸ்விஃப்ட் மாடலுடுடன் ஒப்பிடும்போது இது 20,038 யூனிட்களை விற்றது. மாருதியின் புதிய விக்டோரிஸ் எஸ்யூவி 10,409 யூனிட்கள் விற்பனையான நிலையில் கிராண்ட் விட்டாராவை 13,496 யூனிட்களை விற்பனையானது.



புதிய மாதம் தொடங்கிய அதே நேரத்தில் மூன்று கோடி விற்பனை மைல்கல்லை எட்டியதால், அக்டோபர் மாதம் மாருதி சுசுகிக்கு ஒரு பெரிய மாதமாக அமைந்தது. ஜிம்னிக்கு ஏற்றுமதி மைல்கல்லையும் எட்டியுள்ளது, ஜப்பான் மொபிலிட்டி எக்ஸ்போவில் எட்டு புதிய எஸ்யூவிகளை அறிவித்தது. மேலும் Fronx FFV மற்றும் விக்டோரிஸ் பயோகியாஸ் வேரியண்ட் என இரண்டையும் காட்சிப்படுத்தியது.

மாருதி அடுத்த மாதம் இந்தியாவில் இ விட்டாரா மாடலை அறிமுகப்படுத்தவுள்ளது. இ விட்டாரா மாடல் மூன்று வேரியண்ட்கள், இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் மற்றும் ஒரே ஒரு FWD ஆப்ஷனில் வழங்கப்படும்.

Tags:    

Similar News