வேற லெவல் அப்கிரேடுகள்... புதிய தலைமுறை டெல்லூரைடு மாடலை அறிமுகம் செய்த கியா..!
- முன்பக்க பம்பரில் ஆல்-பிளாக் நிறம் மற்றும் இரண்டு வெளிப்படும் ஆரஞ்சு நிற டோ-ஹூக்குகள் உள்ளன.
- பின்புறத்தில் நீளமான எல்இடி டெயில்-லைட்டுகள் மற்றும் கியா லோகோ, டெல்லூரைடு எழுத்துக்களுடன் கூடிய எளிய டெயில்கேட் வழங்கப்பட்டு இருக்கிறது.
கியா நிறுவனத்தின் 2ஆம் தலைமுறை டெல்லூரைடு மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. டெல்லூரைடு என்பது கியாவின் முதன்மையான ஐசி என்ஜினால் இயங்கும் எஸ்யூவி மாடல் ஆகும். இது சர்வதேச சந்தையில் ஹூண்டாய் பாலிசேட் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
புதிய டெல்லூரைட்டின் வெளிப்புறம், 2022ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட முதல் தலைமுறை மாடலை விட முற்றிலும் புதிதாக காட்சியளிக்கிறது. இப்போது, டெல்லூரைடு எஸ்யூவி-யின் வடிவமைப்பு, கார்னிவல், சோரெண்டோ மற்றும் ஸ்போர்டேஜ் போன்ற புதிய கியா கார்களுடன் ஒற்றுப் போகும் வகையில் காட்சியளிக்கிறது.
இது செவ்வக கூறுகளுடன் கூடிய ஆல்-பிளாக் நிற கிரில் கொண்டுள்ளது. ஹெட்லைட் ஹவுசிங் நீளமாகவும் அதில் செங்குத்தாக இரண்டு டைலைட் ரன்னிங் லைட்கள் (DRLகள்) டர்ன் இன்டிகேட்டர்களாகவும் இயங்கும் படி பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்பக்க பம்பரில் ஆல்-பிளாக் நிறம் மற்றும் இரண்டு வெளிப்படும் ஆரஞ்சு நிற டோ-ஹூக்குகள் உள்ளன.
மேலும், பின்புறத்தில் நீளமான எல்இடி டெயில்-லைட்டுகள் மற்றும் கியா லோகோ, டெல்லூரைடு எழுத்துக்களுடன் கூடிய எளிய டெயில்கேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பின்புறம் சுத்தமாக தெரிகிறது. மறுபுறம், பின்புற பம்பரில் முன்பக்கத்தில் உள்ள அதே ஆரஞ்சு நிற டோ ஹூக்குகள் உள்ளன.