கார்
பெயர் மாற்றத்துடன் XUV700 Facelift காரை வரும் ஜனவரியில் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டம்
- XUV 700 மாடல் கார்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றது.
- புதிய XUV 700 மாடல் காரில் பெரும்பாலான வடிவமைப்பு மாற்றங்கள் இருக்கும்
மஹிந்திரா நிறுவனம் XUV 700 மாடல் கார்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையொட்டி XUV700 Facelift காரை வரும் ஜனவரியில் அறிமுகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய XUV 700 மாடல் காரில் பெரும்பாலான வடிவமைப்பு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், XUV700 என்ற பெயரை XUV7XO என மாற்றி வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் இருக்கும் என்றும் இந்த என்ஜின் 182 ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.