கார்

ரூ.1.55 லட்சம் வரையிலான சலுகை... மஹிந்திராவின் மாஸ் சம்பவம்

Published On 2025-11-26 09:02 IST   |   Update On 2025-11-26 09:02:00 IST
  • BE6 கார் 6 வேரியண்ட்களும், XEV 9E கார் 5 வேரியண்ட்களிலும் கிடைக்கின்றன.
  • பொது இடங்களில் இலவச சார்ஜிங் சலுகை ஆகியவை அடங்கும்.

மஹிந்திரா நிறுவனத்தின் XEV 9E, BE6 ஆகிய மின்சார கார்கள், கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டன. இந்த கார்களின் ஓராண்டு கொண்டாட்டத்தை ஒட்டி இந்த மாதத்துக்கான தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்தக் கார்களுக்கு ரூ.1.55 லட்சம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 7.2 கிலோ வாட் ஏசி பாஸ்ட் சார்ஜர், ரூ.30 ஆயிரம் மதிப்பிலான உதிரி பாகங்கள், கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.25 ஆயிரம், எக்சேஞ்ச் அல்லது லாயல்டி போனஸ் ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் மதிப்பில், பொது இடங்களில் இலவச சார்ஜிங் சலுகை ஆகியவை இதில் அடங்கும். எனினும், குறிப்பிட்ட டீலர்கள் தரப்பில் மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும். அதிலும் முதல் 5 ஆயிரம் முன்பதிவுகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை எனவும், டிசம்பர் 20-ந் தேதி வரை முன்பதிவு செய்யலாம் எனவும் நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

BE6 கார் 6 வேரியண்ட்களும், XEV 9E கார் 5 வேரியண்ட்களிலும் கிடைக்கின்றன. BE6 ஆரம்பவிலை சுமார் ரூ.18.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் விலை ரூ.26.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். XEV 9E காரின் ஆரம்ப விலை சுமார் ரூ.21.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). டாப் எண்ட் மாடல் ரூ.30.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

இந்த எலெக்ட்ரிக் கார்களை முழுமையாக சார்ஜ் செய்தால், வேரியண்ட்களுக்கு ஏற்ப 556 கிலோமீட்டர் (59 கிலோவாட் ஹவர் பேட்டரி) முதல் 682 கிலோமீட்டர் தூரம் (79 கிலோவாட் ஹவர் பேட்டரி) வரை செல்லலாம் என `ARAI' அமைப்பு சான்றளித்துள்ளது.

Tags:    

Similar News