Q சீரிசை அப்டேட் செய்த ஆடி... என்னென்ன ஸ்பெஷல்..?
- கியூ5-ல் 269 பி.எஸ். பவரையும், 370 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும்.
- 10.1 இன்ச் டச் ஸ்கிரீனுடன் கூடிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
ஆடி இந்தியா நிறுவனம், சிக்னேச்சர் வரிசையில் கியூ3, கியூ3 ஸ்போர்ட் பேக் மற்றும் கியூ5 ஆகிய லிமிடெட் எடிஷன் கார்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த 3 கார்களிலும் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றுள்ளது.
இந்த என்ஜின் கியூ3, கியூ3 ஸ்போர்ட்பேக் ஆகியவற்றில் அதிகபட்சமாக 190 பி.எஸ். பவரையும், 320 நியூட்டன் மீட்டர் டார்க்கை வெளிப்படுத்தும். கியூ5-ல் 269 பி.எஸ். பவரையும், 370 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும்.
புதிய கியூ3 மாடலில் 18 இன்ச் வி-ஸ்போக் அலாய் வீல்கள், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 30 நிறங்களை கொண்ட ஆம்பியன்ட் லைட்டிங், 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, 10.1 இன்ச் டச் ஸ்கிரீனுடன் கூடிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
கியூ5 மாடலில் 19 இன்ச் அலாய் வீல்கள், 3 ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 30 நிறங்களை கொண்ட ஆம்பி யன்ட் லைட்டிங், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூப், 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.