search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
    • படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகின்றன.

    நடிகர் விஜயின் 68-வது படமான 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்' (G.O.A.T.) படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

    ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'விசில் போடு' கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. இதையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு சினிமாவில் 17 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்ட நிகழ்ச்சியில் 2 -வது சிங்கிள் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22- ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5- ந்தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இதனால் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரி, கேரளா மற்றும் மாஸ்கோவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. மேலும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

    சென்னை விமான நிலையத்திற்கு மாஸ்க் அணிந்து வந்த நடிகர் விஜயை கண்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் மோகன் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்துள்ளார்.
    • கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்தவர் நடிகர் மோகன். 1980-க்களில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகர் மோகன், இடையே படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு "ஹரா" என்ற படத்தில் நடித்துள்ள மோகன், விஜய் நடிப்பில் உருவாகி வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" படத்திலும் நடித்துள்ளார். நடிகர் மோகன் இன்று (மே 9) பிறந்தநாள் கொண்டாடுகிறார். 

    இந்த நிலையில் நடிகர் மோகனுக்கு கோட் படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

     


    வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடிகர் விஜய், மோகன், பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
    • மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள்.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. இத்தேர்வில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

    அதே போல் இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தேர்வில் பெற்று பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள்.

    அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக்குவித்து வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம்வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

    விரைவில் நாம் சந்திப்போம்!

    இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

    கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பரிசுகளையும் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கியுள்ளது.
    • தேர்தல் முடிவு வெளியான பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். கட்சியின் கொள்கைகளை அறிக்கை வாயிலாக வெளியிட்டிருந்தார்.

    2026-ம் ஆண்டு சட்ட சபை தேர்தல்தான் கட்சியின் இலக்கு என அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்துக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு செயலி மூலம் நடந்து வருகிறது. இதுவரை புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கியுள்ளது.


    விஜய் தற்போது 'தி கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படத்துக்காக கடந்த சில நாட்களாக மயிலாப்பூரில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் விஜய் டப்பிங் பேசி முடித்துள்ளார்.

    இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ந் தேதி வெளியாக உள்ளது. தேர்தல் முடிவு வெளியான பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட உள்ளது.

    அடுத்த மாதம் (ஜூன்) 22-ந் தேதி விஜய் பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அன்று கட்சியின் மாநாட்டை மதுரையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • 19 வருடங்களுக்கு பிறகு சச்சின் மீண்டும் வெளியாவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.
    • `சச்சின்' படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து திரைக்கு கொண்டு வர ஏற்பாடு.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

    ஏற்கனவே ரஜினியின் பாட்ஷா, பாபா, கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான், சூர்யாவின் வாரணம் ஆயிரம், தனுசின் யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த வரிசையில் விஜய்யின் கில்லி படமும் தமிழ்நாடு முழுவதும் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டு தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் ரூ.25 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. வில்லு படமும் வெளியாக இருக்கிறது.

    இந்த நிலையில் விஜய் நடித்த `சச்சின்' படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன.

    `சச்சின்' படம் 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் திரைக்கு வந்தது. இதில் விஜய் ஜோடியாக ஜெனிலியா நடித்து இருந்தார்.

    இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் டைரக்டு செய்ய, கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார்.

    'சச்சின்' சிறந்த காதல் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு அதிக நாட்கள் ஓடி நல்ல வசூல் பார்த்தது. அப்போது அப்படத்துடன் ரஜினியின் 'சந்திரமுகி' கமல்ஹாசனின் `மும்பை எக்ஸ்பிரஸ்' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளிவந்தன. 19 வருடங்களுக்கு பிறகு சச்சின் மீண்டும் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடப்பதாக புதிய அப்டேட்.
    • விஜய், சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் மகிழ்ச்சியில் திளைத்துப்போய் உள்ளனர்.

    லியோவை தொடர்ந்து `தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (`THE GOAT') படத்தில் நடித்து வருகிறார் விஜய். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

     இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பதாக கூறப்பட்டாலும், கோட் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி பற்றிய அப்டேட் இதுவரை வெளியாகவில்லை.

    சென்னை, கேரளா, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள கோட் படத்தின் படப்பிடிப்பு தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது.

     இந்நிலையில் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடப்பதாக புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. கிளைமேக்சில் 15 நிமிடங்கள் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும், இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் விஜயும், சிவகார்த்திகேயனும் இணைந்து நடிப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    ஏற்கனவே கேப்டன் விஜயகாந்த் ஏஐ டெக்னாலஜி மூலம் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியானது.

    இந்நிலையில், கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக வெளியான தகவலால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் அதிர்ச்சியிலும், மகிழ்ச்சியிலும் திளைத்துப்போய் உள்ளனர்.

    இதனிடையே, அமரன் படப்பிடிப்பை முடித்துவிட்ட சிவகார்த்திகேயன், தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'எஸ்கே 23'படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜூன் 22 - ந் தேதி விஜயின் 50 -வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
    • வில்லு" படம் ஜூன் 21- ந் தேதி 'ரீ-ரிலீஸ்' செய்யப்படுகிறது.


    பிரபல நடிகர் விஜய் நடிப்பில் 2009 -ம் ஆண்டு வெளியான படம் 'வில்லு'. இப்படம் அதிரடி நகைச்சுவைப்படமாகும். பிரபு தேவா இயக்கியுள்ளார்.இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை நயன்தாரா , பிரகாஷ் ராஜ் , வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர்.




    இப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீபிரசாத்  இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் - வடிவேலு காமெடி படத்துக்கு வலு சேர்த்து இருந்ததால் "வில்லு" திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.

    இந்நிலையில் விஜய்யின் 'கில்லி' படம் ரீ ரிலீஸாகி தமிழ்நாட்டில் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது.



    இதை தொடர்ந்து வருகிற ஜூன் 22 - ந் தேதி விஜயின் 50 -வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு 'வில்லு" படத்தை ஜூன் 21- ந்தேதி அன்று 'ரீ-ரிலீஸ்' செய்யப்படும் என ஜங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லியோ படத்திற்கு அடுத்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • படத்தின் பாடலான 'விசில் போடு' பாடலின் லிரிக் வீடியோவை தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட்டனர்.

    லியோ படத்திற்கு அடுத்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான 'விசில் போடு' பாடலின் லிரிக் வீடியோவை தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட்டனர். இப்பாடலை மதன் கார்கி வரிகளில் விஜய் பாடியுள்ளார்.

    "பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா ? கேம்பைன்ன தான் தொறக்கட்டுமா? என்ற வரிகளில் பாடல் தொடங்குகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், விஜயின் அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டம் போல் காணப்படுகிறது.

    பாடல் வீடியோவின் கடைசியில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆடிய நடனம் மிக எனர்ஜிடிக்காக இருந்தது.

    பாடல் வெளியான 24 மணி நேரத்திற்குள் 25.5 மில்லியன் வியூஸ்களை யூடியூபில் கடந்தது. தென்னிந்திய சினிமாக்களில் 24 மணி நேரத்திற்குள் அதிக பார்வைகளை கொண்ட பாடலாக பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற "அரபிக் குத்து" பாடலை தற்போது விசில் போடு பாடல் குறைந்த நேரத்தில் அதிக வியூஸ்களை பெற்று அந்த சாதனையை முறியடித்துள்ளது.

    இந்நிலையில் விசில் போடு பாடல்  யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளை தற்பொழுது கடந்துள்ளது. தென்னிந்திய சினிமா பாடலுக்கு இவ்வளவு பார்வைகளை பெற்றுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதுக்குறித்து படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவரது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். 

    • பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக நடந்தது.
    • அதைத் தொடர்ந்து விழாவில் ஷங்கர் மற்றும் குடும்பத்தினர் சிறப்பு போட்டோ சூட் நடத்தியுள்ளனர்.

    பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக நடந்தது. விழாவில் இந்திய திரை உலக பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவையொட்டி நடந்த இசை நிகழ்ச்சியில் பிரபல இந்தி நடிகரும் தீபிகா படுகோனே கணவருமான ரன்வீர் சிங், இயக்குனர் அட்லி, ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் மற்றும் மகன் ஆகியோர் குத்து நடனம் ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். அவர்கள் ஆடிய நடனத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் உள்ள பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் விழாவில் கலந்துக் கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து விழாவில் ஷங்கர் மற்றும் குடும்பத்தினர் சிறப்பு போட்டோ சூட் நடத்தியுள்ளனர். இந்தப் புகைப்படங்களை அதிதி ஷங்கர் நேற்று தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். அதில் ஒரு புகைப்படத்தில் நடிகர் விஜய் மகன் சஞ்சய்யும் இருக்கிறார். இந்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில் சஞ்சய் இயக்கும் படத்தில் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டு இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    • அதைத் தொடர்ந்து பிரபுதேவா இன்னும் தலைப்பிடப்படாத ARRPD6 என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    இந்தியன் மைக்கில் ஜேக்சன் என்று அழைக்கப்படும் பிரபு தேவா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிணாமத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.

    காதலன், லவ் பர்ட்ஸ், மின்சார கனவு , காதலா காதலா போன்ற பல ஹிட்டான படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு தெலுங்கு திரைத்துறையில் பல திரைப்படங்களை இயக்கினார். அதைத்தொடர்ந்து பல பாலிவுட் திரைப்படங்களை இயக்கி பாலிவுட்டில் முக்கிய இயக்குனரானார்.

    தற்பொழுது மீண்டும் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டு இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    அதைத் தொடர்ந்து பிரபுதேவா இன்னும் தலைப்பிடப்படாத ARRPD6 என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான மனோஜ் என்.எஸ் இயக்குவுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை பிஹைண்ட்வுட்ஸ் தயாரிக்கவுள்ளது. பிரபுதேவா நடிக்கும் படத்திற்கு 6 வது முறை ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் பிரபுதேவாவுடன், யோகி பாபு, அஜு வர்கீஸ், மொட்டை ராஜேந்திரன், ரெண்டின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. அதனை ஏ.ஆர் ரகுமான் அவரது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். அப்போஸ்டரில் ஏ.ஆர் ரகுமானும் பிரபு தேவாவும் கருப்பி நிற கோட் சூட்டில் காட்சி அளிக்கின்றனர். லாஃப், சிங் & டான்ஸ் அலாங் என்ற வாக்கியம் இடம் பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் முறையில் இன்று (மே 1 ) அஜித்குமார் பிறந்த நாளில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட்டது
    • சென்னை காசி தியேட்டரில் தீனா படத்தின் ரீரிலீஸை பேனர் வைத்து கொண்டாடிய அஜித் ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள்

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2001-ல் வெளிவந்த படம் 'தீனா'.இப்படத்தில் அஜித்குமார், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இணைந்து நடித்தனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்தார். இந்த படத்திற்கு பின் அஜித்திற்கு 'தல' என்ற பட்டம் பிரபலமானது.

    இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் முறையில் இன்று (மே 1 ) அஜித்குமார் பிறந்த நாளில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று 'தீனா' படம் ஓடிக்கொண்டு இருந்தது.

    அப்போது ரசிகர்கள் மத்தாப்பு மற்றும் சரவெடி பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியில் துள்ளல் ஆட்டம் போட்டனர். இதனால் தியேட்டரில் பட்டாசு தீப்பொறி புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    அதே போல், சென்னை காசி தியேட்டரில் தீனா படத்தின் ரீரிலீஸை பேனர் வைத்து கொண்டாடிய அஜித் ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள். அஜித் ரசிகர் ஒருவர் அதே தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த கில்லி படத்தின் பேனரை கிழித்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.

    இந்நிலையில், கில்லி பட பேனரைக் கிழித்த அஜித் ரசிகர் எபினேஷ் என்பவரை போலீஸ் கைது செய்துள்ளது. பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மே தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • உழைப்பாளர்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட உறுதியேற்போம்!

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று, தொழிலாளர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம். இது மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் பங்களிப்புகள் இந்த நாளில் நினைவு கூரப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

    இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மே தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த "மே தின" நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை மனதில் கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட உறுதியேற்போம்! என கூறியுள்ளார்.

    ×