என் மலர்
செய்திகள்
- மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா.
- ஸ்ரீவைகுண்டபம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-30 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : ஏகாதசி இரவு 7.43 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : அனுஷம் மறுநாள் விடியற்காலை 4.55 மணி வரை பிறகு கேட்டை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று போகி பண்டிகை, சர்வ ஏகாதசி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை
இன்று சர்வ ஏகாதசி. போகிப் பண்டிகை. சபரிமலையில் மகர ஜோதி தரிசனம். மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா. மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள், திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவில்களில் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், திருவல்லிக்கேணி, ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதி ருப்பதி திருப்புளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர் ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சன சேவை.
மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு, விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீ திருமறைக்காடர் ஆகிய கோவில்களில் காலையில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. கரூரில் அமராவதி நதி வடகரையில் உத்தான சயனத்தில் அபய பிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு, ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவகோட்டை ஸ்ரீ அரங்கநாதர், ஸ்ரீவைகுண்டபம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-லாபம்
ரிஷபம்-அன்பு
மிதுனம்-நிம்மதி
கடகம்-பக்தி
சிம்மம்-ஆதாயம்
கன்னி-தனம்
துலாம்- விவேகம்
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- பணிவு
மகரம்-தெளிவு
கும்பம்-நன்மை
மீனம்-பயணம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழில் ரீதியாக மறைமுகப் போட்டிகள் ஏற்படலாம். வாகன வழியில் செலவுகள் உண்டு.
ரிஷபம்
வளர்ச்சி கூடும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவை பெறுவீர்கள்.
மிதுனம்
இனிய செய்திகள் இல்லம் தேடி வரும் நாள். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பெற்றோர் வழியில் பிரியம் கூடும்.
கடகம்
பக்குவமாகப் பேசி பாராட்டு பெறும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியம் நடைபெறும்.
சிம்மம்
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். தகுந்த நபர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். கல்யாண கனவுகள் நனவாகும்.
கன்னி
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடை பெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சகோதரர்களால் நன்மை உண்டு.
துலாம்
தடைகள் விலகும் நாள். தன வரவு திருப்தி தரும். கல்யாணம் பற்றிய சந்தோஷ தகவல் வந்து சேரும். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் கிட்டும்.
விருச்சிகம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
தனுசு
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பயணத்தால் பிரியமானவர்களின் சந்திப்பு கிட்டும்.
மகரம்
லட்சியங்கள் நிறைவேறும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோக மாற்றம் உண்டு.
கும்பம்
எதிர்பார்த்த தகவல் இல்லம் தேடி வரும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.
மீனம்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.
- பாகிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் போலீஸ் உள்பட 6 பேர் பலியாகினர்.
- பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தலிபான் TTP அமைப்பு பொறுப்பேற்றது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி அங்கு தாக்குதல் நடைபெறுவது வழக்கம். எனவே அங்குள்ள டேங்க் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோமல் பஜார் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியது. இதில் போலீஸ் சூப்பிரண்டு உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனையடுத்து, அந்தப் பகுதி ராணுவம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உள்துறை மந்திரி மோஷின் நக்வி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் TTP தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கத்தால் அவர்கள் அடைக்கலம் பெற்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. இதனால் சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
- வதோதராவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம் ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.
அகமதாபாத்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடந்தது .இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற உள்ளது. இன்று மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
சுப்மன் கில் தலைமை யிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது.
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயத்தால் இந்த தொடரில் இருந்து விலகி யுள்ளார். அவருக்கு பதிலாக பதோனி தேர்வு பெற்றுள்ளார்.
சீனியர் வீரரான விராட் கோலி பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். சர்வதேச போட் டியில் விராட் கோலி தொடர்ந்து 5 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்து முத்திரை பதித்தார். இன்றைய ஆட்டத்திலும் விராட் கோலி மீதான எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதேபோல ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், கேப்டன் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.
பிரேஸ்வெல் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நெருக்கடி உள்ளது. தோற்றால் அந்த அணி தொடரை இழந்து விடும்.
ஒருநாள் போட்டிகளில் இதுவரை இந்தியா, நியூசிலாந்து அணிகள் 121 போட்டிகளில் நேருக்கு நேர் மோதின. இதில் 63ல் இந்தியாவும், 50ல் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்தது. 7 போட்டி கைவிடப்பட்டது.
- அமெரிக்காவில் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
- இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர் மார்க் ருப்பலோ பங்கேற்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த 11-ம் தேதி கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர் மார்க் ருப்பலோ பங்கேற்றார்.
மினியாபோலிஸ் நகரில் ரெனி நிக்கோல் குட் என்ற பெண் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரும் மற்ற நடிகர்களும் 'பீ குட்' என்ற வாசகம் அடங்கிய பேட்ச் அணிந்து வந்திருந்தனர்.
வெனிசுலா மீது அமெரிக்கா எடுத்து வரும் போர் நடவடிக்கை மற்றும் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக 'நோ கிங்ஸ்' என்ற இயக்கத்தின் மூலம் ருப்பலோ தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் பேசிய மார்க் ருப்பலோ, டொனால்ட் டிரம்ப் உலகின் மிக மோசமான மனிதர் ஆவார். உலகின் மிக சக்திவாய்ந்த நாட்டின் அதிகாரத்தை இவரைப் போன்ற ஒருவரிடம் ஒப்படைத்திருப்பது ஆபத்தானது. இவர் பாலியல் பலாத்கார குற்றவாளி மற்றும் தண்டனை பெற்ற நபர் ஆவார். வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது என காட்டமாக விமர்சித்தார்.
- சீன கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர்.
- சீனக்குழுவினர் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபாலேவை சந்தித்துப் பேசினர்.
புதுடெல்லி:
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழுவின் சர்வதேச துறையின் துணை மந்திரி சன் ஹையன் தலைமையிலான குழு டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்குச் சென்றது. அங்கு பா.ஜ.க. பொதுச் செயலாளர் அருண்சிங் தலைமையிலான குழுவுடன் ஆலோசனை நடத்தியது. மேலும் சீன குழுவினர் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபாலேவையும் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கேரா கூறியதாவது:
சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பா.ஜ.க, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு இடையே மூடிய அறைக்குள் நடந்த சந்திப்பின் போது பேசப்பட்டது என்ன என்பது குறித்து பகிரங்கமாக வெளியிட வேண்டும்.
மத்திய அரசு சாராத ஆர்எஸ்எஸ் அமைப்பை அரசு கொள்கையைக் கட்டுப்படுத்த அனுமதிக்கப்படக் கூடாது.
எந்தவொரு அரசியல் கட்சியும் வேறொரு நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல் கட்சியுடன் சந்திப்பதில் அல்லது உரையாடலில் ஈடுபடுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
பல ஆண்டுகளாக, சீனாவுடன் காங்கிரஸ் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக பாஜ கூச்சலிட்டு வந்தது. இப்போது அவர்களே மூடிய அறைக்குள் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற கூட்டங்களின்போது மீண்டும் மீண்டும் சீன மீறல்கள் குறித்த பிரச்சனையை பா.ஜ.க. எழுப்புகிறதா? லடாக் எல்லையிலும், எல்லை கட்டுப்பாட்டு பகுதியிலும் 2020க்கு முந்தைய நிலையை மீட்டெடுப்பது பற்றி அவர்கள் பேசுகிறார்களா? எல்லைக் கட்டுப்பாடு அருகே சீன ராணுவ கட்டுமானம் மற்றும் கிராமங்களை கட்டுவது அதிகரித்து வருகிறதே?
உண்மையில், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாஜவின் 'லால் சலாம்' ஆகிவிட்டன. மோடி அரசில் நமது பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை கடுமையாக சமரசம் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் தேசிய நலன்களை சேதப்படுத்துவது பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கையின் சாராம்சமாகிவிட்டது.
சீன வெளியுறவு மந்திரி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை போலவே, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த அவர்கள் தலையிட்டதாகக் கூறினார். ஆனால் இந்த விவகாரத்தில் மோடி முழுமையான மவுனத்தைக் கடைப்பிடித்து வருகிறார்.
மோடி சீன கம்யூனிஸ்ட் குழுவை பா.ஜ.க. அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். பா.ஜ.க, சீன கம்யூனிஸ்ட் குழுவுடன் தொடர்ச்சியான உறவைப் பேணி வருகிறது என தெரிவித்தார்.
- அமெரிக்கா மற்றும் கனடா உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது.
- கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஒட்டாவா:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் வர்த்தகப் போர் மற்றும் நாடுகளைக் கைப்பற்றும் அச்சுறுத்தல் ஆகியவற்றால் அமெரிக்கா, கனடா உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீனா செல்லும் கார்னி வரும் 16-ம் தேதி அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதுதொடர்பாக மார்க் கார்னி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய வர்த்தகக் குழப்பம் நிலவும் இந்த நேரத்தில் கனடா ஒரு போட்டித்தன்மை வாய்ந்த, நிலையான மற்றும் சுதந்திரமான பொருளாதாரத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. ஒரே வர்த்தகப் பங்காளியைச் சார்ந்திருந்த நமது பொருளாதாரத்தை மாற்றுவதற்காக நாங்கள் உலகம் முழுவதும் புதிய கூட்டாண்மைகளை உருவாக்கி வருகிறோம் என தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் மாதம் தென் கொரியாவில் நடந்த ஆசியா-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை மார்க் கார்னி சந்தித்தார். அப்போது சீனா வருமாறு அவர் விடுத்த அழைப்பை ஏற்று அங்கு செல்ல கார்னி ஒப்புக் கொண்டார்.
கனடா பிரதமரின் சீன பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 192 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 193 ரன்கள் எடுத்து வென்றது.
நவி மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில் குஜராத்-மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது.
கனிகா அஜா 35 ரன்னும், பெத் மூனி 33 ரன்னும் எடுத்தனர். ஜார்ஜியா வேரம் 43 ரன்னும், பார்தி புல்மாலி 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. அமன்ஜோத் கவுர் அதிரடியாக ஆடி 26 பந்தில் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
4வது விக்கெட்டுக்கு ஹர்மன்பிரீத் கவுருடன் நிகோலா கேரி இணைந்து பொறுப்புடன் ஆடி ரன்களைக் குவித்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார்.
இறுதியில், மும்பை அணி 19.3 ஓவரில் 193 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி 2வது வெற்றியைப் பதிவு செய்தது. ஹர்மன்பிரீத் கவுர் 71 ரன்னும், நிகோலா கேரி 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- அண்ணன் - தம்பி பொங்கல் கனவு பலிக்கவில்லை
- 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படத்திற்காக பேசப்பட்ட ரூ.15 கோடி சம்பளத்தில், ரூ.4 கோடியை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இன்னும் வழங்கவில்லை
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளப் படம் ஜன நாயகன். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன.9 அன்றே வெளியாக இருந்தநிலையில், தணிக்கை பிரச்சனையால் தற்போதுவரை வெளியாகவில்லை. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறிமாறி விசாரணை தொடர்வதால் தற்போது வரை மாற்று ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவில்லை.
மறுபுறம் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படம் சொன்னவாறே ஜன.10 திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதற்கு முன்னதாக பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்த சிவகார்த்திகேயன், "தொடக்கத்தில் பராசக்தி படத்தை தீபாவளி அல்லது அக்டோபரில் வெளியிடத்தான் திட்டமிடப்பட்டது. ஆனால், விஜய்யின் படமும் அதே நேரத்தில் வெளியாகும் என்று ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்தோம். இதனைத் தொடர்ந்து, ஜன நாயகன் வெளியீட்டை பொங்கல் திருநாளுக்கு மாற்றியிருப்பதாக அறிவிப்பு வெளியானது.
ஜன. 9-ல் ஜன நாயகனை கொண்டாடுங்கள். 33 ஆண்டுகளாக திரைத் துறையில் நம்மை மகிழ்வித்தவரின் கடைசிப் படம். அதற்கு அடுத்த நாளான ஜன.10-ல் பராசக்தியை கொண்டாடுங்கள். இந்தப் பொங்கல் -அண்ணன் தம்பி பொங்கல்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஜன நாயகன் குறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சிவகார்த்திகேயனை பெயர் குறிப்பிடாமல் தாக்கி பேசியுள்ளார். "ஜன நாயகன் வெளிவராதது மிகப்பெரிய வருத்தம். இந்த நேரத்தில் நாமும் சப்போர்ட்டாக இருந்து உதவி செய்திருக்கவேண்டும். மேடையில் அழுதுவிட்டு, எனக்கு அண்ணன்மாதிரி, தம்பிமாதிரி அப்டி இப்டினு அழுவிட்டு, பின்சென்று நடுரோட்டில் விட்டுவிடுவார்கள்." என பேசியுள்ளார்.
முன்னதாக 2019-ல் வெளியான 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படத்திற்காக பேசப்பட்ட ரூ.15 கோடி சம்பளத்தில், ரூ.4 கோடியை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இன்னும் வழங்கவில்லை என்று சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும், அதற்கு ஞானவேல்ராஜா பதில் மனு தாக்கல் செய்ததும், இந்த வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.
- பைசன் படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.
இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர். இந்நிலையில், சர்வதேச திரைப்பட விமர்சன தளமான Letterboxd தளத்தில் இந்தாண்டிற்கான Top 10 Action / Adventure திரைப்பட தரவரிசைப் பட்டியலில் ஒரே தமிழ் படமாக 'பைசன் காளமாடன்' இடம்பெற்றுள்ளது
இந்த பட்டியலில் 7வது இடத்தை லோகா, 8வது இடத்தை துரந்தர் ஆகிய இந்திய படங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் இடத்தை டீகாப்ரியோ நடிப்பில் வெளியான 'One Battle After Another' படம் முதலிடம் பிடித்துள்ளது.
- 45 வயதான நிதின் நபின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
- ஐந்து முறை எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாஜக-வின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா இருந்து வருகிறார். இவரது பதிவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் மாற்று தலைவர் தேர்வு செய்யப்படாமல் உள்ளது. பீகார் மாநிலத்தில் இருந்து 5 முறை எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் நபி கடந்த ஆண்டு பாஜக-வின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அக்கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 19-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால், ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். இல்லை என்றால், பாஜக தலைமையகத்தில் தேர்தல் நடைபெறும்.
நிதின் நபி (வயது 45), மறைந்த முன்னாள் பாஜக தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நபின் கிஷோர் பிரசாத் சின்ஹா மகன் ஆவார். நிதின் நபின், சித்தாந்த ரீதியாக ஆழமான வேரூன்றியவரும், அமைப்புக்கு முழுமையாக அர்ப்பணிப்பு கொண்டவருமான ஒரு ஆற்றல்மிக்க தலைவர் என்று பாஜக கருதுகிறது. மேலும், இவர் ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வந்தவர்.
ஜே.பி. நட்டா 2019-ம் ஆண்டு பாஜக-வின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். அமித் ஷாவின் தேசிய தலைவர் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், 2020 ஜனவரியில் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
- டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்கள் கொலை செய்யப்பட்டால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால், டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பெரும் போர் வெடிக்கும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி, "ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும். பெரும் போர் வெடிக்கும். தூதரக ரீதியிலான அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்






