என் மலர்
புதிய கேஜெட்டுகள்
நோக்கியா 215 4ஜி, நோக்கியா 225 4ஜி மொபைல் போன் மாடல்கள் 4ஜி வசதியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளன. இரு மாடல்களில் 4ஜி மட்டுமின்றி வயர்லெஸ் எப்எம் ரேடியோ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இரு மாடல்களிலும் 2.4 இன்ச் QVGA LCD ஸ்கிரீன், பாலிகார்பனைட் பாடி, வெப் பிரவுசர், ப்ளூடூத் வசதி, டார்ச், வயர்லெஸ் எப்எம் ரேடியோ, மியூசிக் பிளேயர், ஸ்னேக் கேம் உள்ளிட்டவை அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. நோக்கியா 225 4ஜி மாடலில் விஜிஏ கேமராவும் வழங்கப்பட்டு உள்ளது.

நோக்கியா 215 மற்றும் 225 4ஜி சிறப்பம்சங்கள்
- 2.4 இன்ச் 320x240 பிக்சல் QVGA LCD ஸ்கிரீன்
- பீச்சர் ஒஎஸ்
- 1 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் பிராசஸர்
- 64 எம்பி ரேம்
- 128 எம்பி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- வயர்லெஸ் எப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர்
- விஜிஏ கேமரா ( நோக்கியா 225 4ஜி)
- ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி
- 1200 எம்ஏஹெச் பேட்டரி
நோக்கியா 215 4ஜி மாடல் சியான் கிரீன் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2949 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நோக்கியா 225 4ஜி மாடல் கிளாசிக் புளூ, பிளாக் மற்றும் மெட்டாலிக் சேண்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நிலவின் மேற்பரப்பில் 4ஜி நெட்வொர்க்கை கட்டமைக்க நோக்கியா நிறுவனத்தை நாசா தேர்வு செய்து உள்ளது.
நிலவில் 4ஜி செல்லுலார் நெட்வொர்க் வசதியை கட்டமைக்க நாசா நோக்கியா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் இதற்கான பணிகளை துவங்க நோக்கியா நிறுவனத்திற்கு நாசா சார்பில் 1.4 கோடி அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
நிலவில் 4ஜி நெட்வொர்க் கட்டமைக்க மொத்தத்தில் 37 கோடி அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் நிலவின் மேற்பரப்பில் முதல் முறையாக எல்டிஇ \ 4ஜி செல்லுலார் வசதி கட்டமைக்கப்பட இருக்கிறது.
இதற்காக நோக்கியா சார்பில் உருவாக்கப்படும் தொழில்நுட்பம், நிலவின் மேற்பரப்பில் தொலைதூர தகவல் பரிமாற்றங்களை அதிவேகமாக மேற்கொள்ள வழி செய்யும். இதுதவிர தற்சமயம் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை விட சீரான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளவும் வழி செய்யும்.

நாசா இலக்கின் படி 2028 ஆம் ஆண்டு வாக்கில் நிலவின் மேற்பரப்பில் விண்வெளி வீரர்கள் பணிகளை மேற்கொள்ள செய்யும் திட்டத்தை நிறைவேற்ற விரைவில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என நாசா அதிகாரி ஜிம் பிரைட்ஸ்டைன் தெரிவித்து இருக்கிறார்.
நோக்கியாவின் ஆராய்ச்சி பிரிவான பெல் லேப்ஸ், லூனார் ரோவர்களை வயர்லெஸ் முறையில் இயக்குவது, நேவிகேஷன் மற்றும் வீடியோ ஸ்டிரீமிங் உள்ளிட்ட வசதிகளை வழங்க பணியாற்றி வருவதாக தெரிவித்து உள்ளது.
நாசாவின் திட்டத்தின் படி நோக்கியா மட்டுமின்றி பல்வேறு இதர தனியார் நிறுவனங்களும் இதுபோன்ற பணிகளை துவங்க இருக்கின்றன. இது தொடர்பான தகவல்கள் தொடர்ந்து அறிவிக்கப்படும் என தெரிகிறது.
ஒப்போ நிறுவனம் தனது எப்17 ப்ரோ ஸ்மார்ட்போனின் தீபாவளி எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஒப்போ எப்17 ப்ரோ தீபாவளி எடிஷன் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் மேட் கோல்டு பினிஷ் மற்றும் அதற்கேற்ற வால்பேப்பர் வழங்கப்படுகிறது.
இதுதவிர தீபாவளி எடிஷன் ஸ்மார்ட்போனுடன் 10,000 எம்ஏஹெச் 18வாட் ஒப்போ பவர் பேங்க் 2 மற்றும் பிரத்யேக பேக் கவர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதுவரை ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மேஜிக் புளூ, மேட் பிளாக் மற்றும் மெட்டாலிக் வைட் போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ எப்17 ப்ரோ மாடலில் 6.43 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், டூயல் பன்ச் ஹோல் அமைப்பில் 16 எம்பி + 2 எம்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.
இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த கலர் ஒஎஸ் 7.2 ஒஎஸ், 4015 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 30 வாட் வூக் 4.0 பிளாஷ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 மாடல்களின் சொல்லப்படாத தகவல் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 பேட்டரி விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இவை பிரேசில் நாட்டு டெலிகாம் நிறுவனமான அனடெல் மூலம் தெரியவந்து இருக்கிறது. பேட்டரி விவரங்கள் மட்டுமின்றி இவற்றின் உற்பத்தி தகவல்களும் வெளியாகி உள்ளன.
அந்த வகையில் ஐபோன் 12 மினி மாடலில் 2227 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது ஐபோன் எஸ்இ 2020 மாடலல் வழங்கப்பட்ட 1821 எம்ஏஹெச் பேட்டரியை விட அதிகம் ஆகும். ஐபோன் 12 மாடலில் 2815 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களின் பேட்டரி திறனை எப்போதும் அறிவிக்காது. எனினும், ஆப்பிள் வலைதளத்தில் ஐபோன் 12 கிட்டத்தட்ட 15 மணி நேர வீடியோ பிளேபேக் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 12 மற்றும் 12 ப்ரோ மாடல்கள் 17 மணி நேர பிளேபேக் வழங்குகின்றன.
உற்பத்தியை பொருத்தவரை ஐபோன் 12 ப்ரோ மாடல் இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஐபோன் 12 மாடல் உற்பத்தி பணிகள் இந்தியாவில் உள்ள விஸ்ட்ரன் உற்பத்தி ஆலையில் 2021 வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது.
அந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் இத்தனை பேட்டரிகள் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் டியர்டவுன் வீடியோவை பிரபல யூடியூபர் வெளியிட்டிருந்தர். வீடியோவில் ஒன்பிளஸ் 8டி மாடலில் வழங்கப்பட்டுள்ள பாகங்கள் ஒவ்வொன்றாக கழற்றப்படுகிறது.
அந்த வகையில், டியர்டவுன் செய்த போது ஒன்பிளஸ் 8டி மாடலில் இரண்டு பேட்டரிகள் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இரண்டு பேட்டரிகள் தனித்தனியே இருந்த போதும், ஒன்றாக சேர்த்து ஒட்டப்பட்டு உள்ளது.

இரண்டு பேட்டரிகளும் முறையே 2250 எம்ஏஹெச் பேட்டரி திறன் கொண்டுள்ளன. இத்துடன் டூயல் பேட்டரியுடன் 65 வாட் வார்ப் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஒன்பிளஸ் 8 மாடலில் 4300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் வார்ப் சார்ஜ் 30டி சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஒன்பிளஸ் 8டி மாடலின் ஸ்பீக்கரில் வாட்டர் ப்ரூபிங் செய்யப்படவில்லை.
மூன்று பிரைமரி கேமரா மற்றும் வாட்டர் டிராப் டிஸ்ப்ளேவுடன் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் ஏ15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 சார்ந்த கலர் ஒஎஸ் 7.2, 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 3டி வளைந்த பாடி, பின்புறம் கைரேகை சென்சார், 4230 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒப்போ ஏ15 சிறப்பம்சங்கள்
- 6.55 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
- IMG பவர்விஆர் GE8320 GPU
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 5 எம்பி செல்பி கேமரா
- டூயல் சிம்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- மைக்ரோ யுஎஸ்பி
- 4230 எம்ஏஹெச் பேட்டரி
புதிய ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் டைனமிக் பிளாக் மற்றும் மிஸ்ட்ரி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் வயர்லெஸ் பட்ஸ் இசட் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனுடன் வயர்லெஸ் பட்ஸ் இசட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பட்ஸ் இசட் மாடல் 10 எம்எம் டைனமிக் டிரைவர், பாஸ் பூஸ்ட், டைனமிக் 3டி ஸ்டீரியோ கூடிய டால்பி அட்மோஸ் அம்சங்களை கொண்டிருக்கிறது.
இத்துடன் அனைவரின் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் மூன்றுவித அளவுகளில் சிலிகான் டிப் வழங்கப்பட்டு உள்ளது. புதிய பட்ஸ் இசட் சார்ஜிங் கேஸ் வித்தியாச தோற்றம் கொண்டுள்ளது. இது முந்தைய ஒன்பிளஸ் பட்ஸ் கேசை விட அகலமாக காட்சியளிக்கிறது.

புதிய பட்ஸ் இசட் இயர்பட் 40 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது. இதன் சார்ஜிங் கேசில் 450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5 வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது ஐபி55 தர ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இதுதவிர பாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு ஆடியோ பிளேபேக் கிடைக்கிறது.
இந்தியாவில் ஒன்பிளஸ் பட்ஸ் இசட் வைட் மற்றும் கிரே என இரண்டுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3190 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நவம்பர் 2 ஆம் தேதி துவங்குகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் FHD+ புளூயிட் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், எக்ஸ்55 5ஜி மோடெம் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 11, 48 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி மோனோகுரோம் லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் வார்ப் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.

ஒன்பிளஸ் 8டி சிறப்பம்சங்கள்
- 6.55 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 402 ppi 20:9 புளூயிட் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- 2.84GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
- 12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 11
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.7, OIS
- 16 எம்பி 116° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 5 எம்பி மேக்ரோ கேமரா
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 16 எம்பி செல்பி கேமரா, f/2.45, EIS
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப் சி, டால்பி அட்மோஸ்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 65 வாட் வார்ப் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் அக்வாமரைன் கிரீன் மற்றும் லூனார் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 42,999 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 45,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் மேக்சேப் சார்ஜிங் பேட் மற்றும் பல்வேறு இதர அக்சஸரீக்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களை சார்ஜ் செய்யும் மேக்சேப் சார்ஜிங் பேட் மற்றும் மேக்சேப் டுயோ போல்டபில் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்டவைகளின் பின்புறம் வயர்லெஸ் சார்ஜர்களை சப்போர்ட் செய்யும் காந்தங்களை கொண்டிருக்கிறது. விரைவில் பெல்கின் போன்ற மூன்றாம் தரப்பு பிராண்டுகளும் தங்களின் மேக்சேப் அக்சஸரீக்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன.

மேக்சேப் சார்ஜர்கள் கியூஐ தர வசதி கொண்டு அதிகபட்சம் 15 வாட் திறன் வழங்குகின்றன. இவை மற்ற கியூஐ சாதனங்களுடன் இயங்கும் என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது. புதிய மேக்சேப் சார்ஜர் விலை 39 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 4500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 சீரிஸ் டாப் எண்ட் மாடலை அசத்தல் அப்டேட்களுடன் அறிமுகம் செய்து இருக்கிறது.
ஸ்மார்ட்போன் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 12 சீரிஸ் மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்துவிட்டது. புதிய ஐபோன் 12 சீரிசில் டாப் எண்ட் மாடலான ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் பல்வேறு அசத்தல் அப்டேட்களை பெற்று இருக்கிறது.
அந்த வகையில் இதன் முழு சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:
- 6.7 இன்ச் 2778×1284 பிக்சல் OLED 458ppi சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே
- 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி
- ஐஒஎஸ் 14
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி வைடு ஆங்கில் கேமரா, f/1.6, 7P லென்ஸ், 1.7μm பிக்சல்
- 12 எம்பி 120° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5P லென்ஸ்
- 12 எம்பி டெலிபோட்டோ கேமரா, f/2.2
- லிடார் ஸ்கேனர்
- 12 எம்பி ட்ரூடெப்த் செல்பி கேமரா, f/2.2
- 5ஜி (sub‑6 GHz), ஜிகாபிட் கிளாஸ் எல்டிஇ, 802.11ax வைபை 6, ப்ளூடூத் 5
- லித்தியம் அயன் பேட்டரி
- மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங்
- பாஸ்ட் சார்ஜிங் வசதி
இந்திய சந்தையில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி மாடல் விலை ரூ. 129900 என்றும் 256 ஜிபி மாடல் ரூ. 139900 என்றும் 512 ஜிபி மாடல் விலை ரூ. 159900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நவம்பர் 13 ஆம் தேதி துவங்குகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 ப்ரோ சீரிஸ் மாடல்களை தலைசிறந்த கேமரா மற்றும் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து உள்ளது. இரு மாடல்களிலும் தலைசிறந்த கேமரா மற்றும் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐபோன் 12 ப்ரோ மாடலில் 6.1 இன்ச் மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்பி வைடு கேமரா மற்றும் 12 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இது குறைந்த வெளிச்சத்திலும் தெளிவான புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் ட்ரூ டெப்த் செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் புதிய ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் லிடார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது கேமரா மற்றும் ஆக்மென்ட்டெட் தொழில்நுட்பங்களை மிக சீராக இயக்க வழி செய்கிறது. இந்த மாடல்களிலும் ஆப்பிள் ஏ14 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் நான்குவித நிறங்களில் கிடைக்கிறது. ஐபோன் 12 ப்ரோ மாடல் விலை 999 டாலர்கள் என்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல் விலை 1099 டாலர்கள் முதல் துவங்குகிறது.
64 எம்பி குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
டிரான்சிஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இந்தியாவில் டெக்னோ கேமான் 16 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 6.8 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட்-இன் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, குவாட் கேமரா சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 16 எம்பி செல்பி கேமரா, கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கேமரா சென்சார்களுடன் பல்வேறு ஆப்ஷன்களில் புகைப்படங்களை அழகாக்கும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

டெக்னோ கேமான் 16 சிறப்பம்சங்கள்
- 6.8 இன்ச் 1640x720 பிக்சல் HD+ 20.5:9 டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்
- ஏஆர்எம் மாலி-ஜி52 2EEMC2 ஜிபியு
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஹைஒஎஸ் 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 64 எம்பி, f/1.79 பிரைமரி கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 2 எம்பி டெப்த் கேமரா
- ஏஐ லென்ஸ்
- 16 எம்பி செல்பி கேமரா
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
டெக்னோ கேமான் 16 ஸ்மார்ட்போன் கிளவுட் வைட் மற்றும் பியூரிஸ்ட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி துவங்குகிறது.






