என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    புதிய நிறத்தில் உருவாகி இருக்கும் ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் விற்பனை விவரம் வெளியாகி உள்ளது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு 2 கோ கிரீன் வுட்ஸ் நிற மாடல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. முன்னதாக ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் புளூ ஹேஸ் மற்றும் கிரே சியெரா நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    பின் நார்டு 2 புதிய நிறம் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. அந்த வகையில் இந்த மாடல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. 

     ஒன்பிளஸ் நார்டு 2

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு 2 மாடலில் 6.43 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், 50 எம்பி பிரைமரி கேமரா, 32 எம்பி செல்பி கேமரா, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு 2 கோ கிரீன் வுட்ஸ் நிற மாடல் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 27,999 என்றும், 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல்கள் விலை முறையே ரூ. 29,999 மற்றும் ரூ. 34,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    விவோ நிறுவனத்தின் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் விற்பனைக்கு வந்தது.


    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் மற்றொரு வை சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய விவோ வை33எஸ் ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஹாலோ புல்வியூ ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 16 எம்பி செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஓ.எஸ். 11 கொண்டிருக்கும் விவோ வை33எஸ் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

     விவோ வை33எஸ்

    விவோ வை33எஸ் அம்சங்கள்

    - 6.58 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
    - 950MHz ARM மாலி-G52 2EEMC2 GPU
    - 8 ஜிபி LPDDR4x ரேம்
    - 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஓ.எஸ். 11
    - 50 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், f/1.8
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 2 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4
    - 16 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    விவோ வை33எஸ் ஸ்மார்ட்போன் மிரர் பிளாக் மற்றும் மிட்-டே டிரீம் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ, 17,990 ஆகும். 
    மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் எட்ஜ் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்கிறது.


    மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன் மாடல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி விற்பனை செய்யப்பட்டது.

     மோட்டோரோலா எட்ஜ் 20

    அறிமுக நிகழ்விலேயே மோட்டோரோலா எட்ஜ் 20 மாடல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் அறிவித்தது. எனினும், இதன் விற்பனை திட்டமிட்டப்படி துவங்காது என மோட்டோரோலா தெரிவித்து இருக்கிறது.

    எதிர்பாராத காரணங்களால் மோட்டோரோலா எட்ஜ் 20 விற்பனை திட்டமிட்டப்படி துவங்காது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விற்பனை தாமதமாக சரியான காரணம் அறிவிக்கப்படவில்லை. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சிப்செட் தட்டுப்பாடு காரணமாக விற்பனை தாமதமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. எட்ஜ் 20 மாடலின் புதிய விற்பனை தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    விவோ நிறுவனத்தின் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.


    விவோ நிறுவனத்தின் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விவோ வை21 மாடலில் 6.51 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஹாலோ புல் வியூ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ டூயல் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. பன்டச் ஒஎஸ் 11.1 மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். கொண்டிருக்கும் விவோ வை21 ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.

     விவோ வை21

    விவோ வை21 அம்சங்கள்

    - 6.51 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 LCD ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
    - IMG பவர்வி.ஆர். GE8320 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி மெமரி 
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஓ.எஸ். 11.1
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், f/2.2
    - 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்பி கேமரா, f/1.8
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப் சி 
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    விவோ வை21 ஸ்மார்ட்போன் டைமண்ட் குளோ மற்றும் மிட்நைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 15,490 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 13,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    ஒப்போ நிறுவனம் தனது ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு ஜியோவுடன் இணைந்து சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.


    ஒப்போ நிறுவனத்தின் ஏ15 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதத்தில் அறிமுகமானது. இதனிடையே ஒப்போ ஏ15 விலை குறைக்கப்பட்டு பின், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இதன் விலை உயர்த்தப்பட்டது. 

    தற்போது ஜியோவுடன் இணைந்து ஒப்போ நிறுவனம் தனது ஏ15 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து இருக்கிறது. விலை குறைப்பின்படி ஒப்போ ஏ15 (3 ஜிபி+32 ஜிபி) மாடல் விலை ரூ. 999 குறைக்கப்பட்டு ரூ. 9,991 என மாறி இருக்கிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதி மற்றும் ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள ஜியோ பலன்கள் வழங்கப்படுகிறது.

     ஒப்போ ஏ15

    அம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஏ15 மாடலில் 6.52 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 பிராஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் கைரேகை சென்சார், டூயல் சிம் 4ஜி, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கலர் ஓ.எஸ். 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 மற்றும் 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டுள்ளது.  

    சியோமியின் பட்ஜெட் ரக ரெட்மி 10 ஸ்மார்ட்போன் சீரிஸ் மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர் கொண்டிருக்கிறது.


    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரெட்மி 10 மாடலில் 6.5 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன் மற்றும் அடாப்டிவ்சின்க் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், 50 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12.5 ஓ.எஸ். கொண்டிருக்கும் ரெட்மி 10 மாடல் மேட் கார்பன் கிரே மற்றும் பெபிள் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், 22.5 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

     ரெட்மி 10

    ரெட்மி 10 அம்சங்கள்

    - 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ IPS LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர்
    - ARM மாலி-G52 2EEMC2 GPU
    - 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
    - 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12.5
    - 50 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. பிளாஷ்
    - 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
    - 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.0 
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யு.எஸ்.பி. டைப் சி 
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், 9 வாட் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்

    ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை 179 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 13,300 என துவங்குகிறது. இதன் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை 199 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14,785 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை 219 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 16,270 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் எக்ஸ்60 ஸ்மார்ட்போனினை இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்தது.


    விவோ நிறுவனம் எக்ஸ்60 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. விவோ எக்ஸ்60 சீரிஸ் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 37,990 விலையிலும், 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 41,990 விலையிலும் விற்பனைக்கு வந்தது.

     விவோ எக்ஸ்60

    தற்போது விவோ எக்ஸ்60 மாடல்களின் விலை திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பின் படி எக்ஸ்60 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 34,990 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 39,990 என்றும் மாறி இருக்கிறது. 

    விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் விற்பனையாளர்களிடம் புதிய விலையில் கிடைக்கிறது. விவோ எக்ஸ்60 ப்ரோ மற்றும் எக்ஸ்60 ப்ரோ பிளஸ் மாடல்கள் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 
    ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. புதிய தலைமுறை ஐபோன்களும் முந்தைய ஐபோன் 12 சீரிஸ் போன்றே நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. 

     ஐபோன் 12 மினி

    அதிக ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, சிறப்பான கேமரா போன்ற அம்சங்களுடன் உருவாகும் பட்சத்திலும் ஐபோன் 13 சீரிஸ் விலை உயர்த்தப்படாது என தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய ஐபோன் 12 சீரிஸ் விலையிலேயே புதிய ஐபோன் 13 மாடல்கள் விலையும் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    ஐபோன் 13 மினி விலை 699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 51,896 என துவங்கும். ஐபோன் 13 மாடல் விலை 799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 59,320, ஐபோன் 13 ப்ரோ விலை 999 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 74,169, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் விலை 1,099 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 81,594 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

    சியோமி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் வெளியீடு விரைவில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.


    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 10 விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வந்தது. தற்போது இதன் வெளியீட்டை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. சியோமியின் சர்வேதச வலைதளத்தில் ரெட்மி 10 அம்சங்கள், புகைப்படங்கள் மற்றும் இதர விவரங்கள் தவறுதாக வெளியாகி பின் நீக்கப்பட்டு விட்டது.

     சியோமி ரெட்மி 10

    அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 10 மாடலில் 6.5 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் டாட் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 50 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

    ரெட்மி 10 ஸ்மார்ட்போன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும். இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், 9 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது. வலைதளத்தில் ரெட்மி 10 விலை விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
    மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி அறிமுகமாக இருக்கின்றன. புது ஸ்மார்ட்போன்கள் 5ஜி கனெக்டிவிட்டி உள்பட பல்வேறு பிரீமியம் அம்சங்களை கொண்டிருக்கின்றன. மோட்டோ எட்ஜ் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன. 

    அந்த வகையில் இதன் அம்சங்கள் பெரும்பாலும் அம்பலமாகிவிட்டன. தற்போது இரு ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

     மோட்டோரோலா ஸ்மார்ட்போன்

    மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 21,499 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 23,999 என்றும் நிர்ணயம் செய்யப்படலாம். எட்ஜ் 20 ஸ்மா்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 29,999 வரை நிர்ணயிக்கப்படலாம்.

    இந்த விலை பிரிவில் மோட்டோ எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன் சியோமியின் எம்.ஐ. 11 லைட் மாடலுக்கும் மோட்டோ எட்ஜ் 20 மாடல் ஒன்பிளஸ் நார்டு 2 மாடலுக்கும் போட்டியாக அமைகின்றன. இரு மோட்டோ ஸ்மார்ட்போன்களின் விலை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் பிராசஸருடன் அறிமுகமாகி இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனினை எக்சைனோஸ் 850 பிராசஸருடன் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிராசஸர் தவிர கேலக்ஸி ஏ12 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    மற்ற அம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி ஏ12 மாடலில் 6.5 இன்ச் HD+ இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, பின்புறம் மேட் பினிஷ், 48 எம்பி குவாட் பிரைமரி கேமரா சென்சார்கள், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     சாம்சங் கேலக்ஸி ஏ12

    சாம்சங் கேலக்ஸி ஏ12 அம்சங்கள்

    - 6.5 இன்ச் 1560x720 பிக்சல் HD+ LCD இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
    - எக்சைனோஸ் 850 ஆக்டாகோர் பிராசஸர்
    - மாலி-G52
    - 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
    - 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யுஐ கோர் 3.1
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - 48 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், f/2.0
    - 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4 
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    புதிய சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜிபி + 128  ஜிபி மாடல் விலை ரூ. 16,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி ஸ்மார்ட்போன் இரட்டை கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் FHD+ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் வெளிப்புறம் 1.9 இன்ச் அளவில் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 8 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி வைடு ஆங்கில் கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, முன்புறம் 10 எம்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

     சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி

    சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி அம்சங்கள்

    - 6.7 இன்ச் FHD+ 2640x1080 பிக்சல் 22:9 டைனமிக் AMOLED 2X இன்பினிட்டி ப்ளெக்ஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
    - 1.9 இன்ச் 260x512 பிக்சல் கவர் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
    - 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி / 256 ஜிபி UFS 3.1 மெமரி
    - ஒரு இசிம், ஒரு நானோ சிம்
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யு.ஐ. 3.1
    - 12 எம்பி பிரைமரி வைடு ஆங்கில் கேமரா, f/1.8, 1.4μm பிக்சல்
    - 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, 1.22μm பிக்சல், எல்.இ.டி. பிளாஷ், HDR10+, OIS
    - 10 எம்பி முன்புற கேமரா, f/2.4
    - 5ஜி SA/NSA , 4ஜி, வைபை, ப்ளூடூத் 5.1 LE 
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX8)
    - யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
    - 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 15 வாட் பாஸ்ட் சார்ஜிங், 10 வாட் Qi வயர்லெஸ் சார்ஜிங், 4.5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி மாடல் கிரீம், கிரீன், லாவென்டர் மற்றும் பேண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை 999.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 74,253 என துவங்குகிறது. 
    ×