என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் உங்களின் மாடலும் இடம்பெற்றுள்ளதா என பாருங்கள்.


    ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி நிறுவனங்களின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களாக ஒன்பிளஸ் 10 ப்ரோ மற்றும் ரியல்மி GT 2 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. இரு ஸ்மார்ட்போன்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இவற்றில் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கஸ்டம் ஓ.எஸ். ஸ்கின் வழங்கப்பட்டு உள்ளது. 

    இந்த நிலையில், இந்தியாவில் ஆண்ட்ராய்டு 13 ஓ.எஸ். பெறும் முதற்கட்ட ஸ்மார்ட்போன் மாடல்களாக ஒன்பிளஸ் 10 ப்ரோ மற்றும் ரியல்மி GT 2 ப்ரோ இருக்கின்றன. ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்குவதை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதனை பயனர்கள் ஒன்பிளஸ் ஃபோரம் தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். 

     ரியல்மி GT 2 ப்ரோ

    இது முதற்கட்ட பீட்டா வெர்ஷன் என்பதால் மிக முக்கிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆண்ட்ராய்டு 13 ஓ.எஸ்.- முதற்கட்டமாக ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் சோதனை செய்யப்பட இருக்கிறது. வரும் மாதங்களில் ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 13 ஸ்கின் வெளியிடப்படும்.

    ரியல்மி GT 2 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கும் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் முதற்கட்ட பீட்டா வெர்ஷன் ஆகும். ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு 13 ஓ.எஸ். சார்ந்த ரியல்மி யு.ஐ. 4 ஸ்கின் வரும் நாட்களில் வெளியாகும் என தெரிகிறது. ரியல்மி GT 2 ப்ரோ மாடலை தொடர்ந்து ரியல்மி GT, ரியல்மி GT நியோ 3, ரிய்மி 9 ப்ரோ பிளஸ் மற்றும் பல்வேறு இதர மாடல்களுக்கும் இந்த அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
    கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 6a ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு, இந்திய வெளியீடும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    கூகுள் நிறுவனம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே புதிய பிக்சல் 6a ஸ்மார்ட்போனினை I/O நிகழ்வில் அறிமுகம் செய்தது. இதில் 6.1 இன்ச் FHD+OLED டிஸ்ப்ளே, கூகுள் டென்சார் சிப்செட், டைட்டன் M2 செக்யூரிட்டி சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., மூன்று ஆண்டுகள் ஓ.எஸ். அப்டேட், ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 12.2MP பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 4306mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

     கூகுள் பிக்சல் 6a

    கூகுள் பிக்சல் 6a அம்சங்கள்:

    - 6.1 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ OLED HDR டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
    - கூகுள் டென்சார் பிராசஸர் 
    - 848MHz மாலி G78 MP20 GPU
    - டைட்டன் M2 செக்யூரிட்டி சிப்
    - 6GB LPDDR5 ரேம்
    - 128GB (UFS 3.1) மெமரி
    - ஆண்ட்ராய்டு 12
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12.2MP பிரைமரி கேமரா, f/1.7, LED ஃபிளாஷ், OIS
    - 12MP 107° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, PDAF
    - 8MP செல்பி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.0
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67)
    - யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 2 மைக்ரோபோன்கள்
    - 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை 6E 802.11ax (2.4/5 GHz), ப்ளூடூத் 5.2 LE, GPS
    - யு.எஸ்.பி டைப் சி 3.1
    - 4,306 பேட்டரி
    - 18W பாஸ்ட் சார்ஜிங் 

    கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் சார்கோல், சால்க் மற்றும் சேஜ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 449 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 34 ஆயிரத்து 745 ஆகும். அமெரிக்காவில் இதன் விற்பனை ஜூலை 28 ஆம் தேதி தொடங்குகிறது. விரைவில் இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    பிக்சல் 6a மட்டுமின்றி கூகுள் நிறுவனம் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ மாடல்களுக்கான டீசரையும் கூகுள் I/O நிகழ்வில் வெளியிட்டது. இரு ஸ்மார்ட்போன்களின் டிசைனை வெளிப்படுத்தும் டீசர்கள் வெளியிடப்பட்டன. இவற்றில் புதிய தலைமுறை கூகுள் டென்சார் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓ.எஸ். வழங்கப்பட இருக்கின்றன.
    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் மீண்டும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருப்பதாக புது தகவல் வெளியாகி உள்ளது.
     

    கூகுள் நிறுவனம் விரைவில் தனது பிக்சல் 6a ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகிவிட்டது. பிக்சல் 6a பற்றிய ரெண்டர்கள் மற்றும் புகைப்படங்கள் என பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தான், தற்போது பிக்சல் 6a மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக புது தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து டிப்ஸ்டரான முகுல் ஷர்மா வெளியிட்டு இருக்கும் தகவல்களில், புதிய கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படுவதாக தெரிவித்து இருக்கிறார். இந்த ஸ்மார்ட்போன் பிக்சல் 6a மாடல் தான் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும்,  மே மாத வாக்கில் கூகுள் நிறுவனம் எப்போதும் பிக்சல் a சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறது. 

     கூகுள் பிக்சல் 6

    அந்த வகையில், இந்தியாவில் சோதனை செய்யப்படுவது பிக்சல் 6a மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் கூகுள் நிறுவனம் நேரடியாக வெளியிட்ட ஸ்மார்ட்போனாக பிக்சல் 4a இருக்கிறது. கூகுள் தரத்தில் அசத்தலான வெளியான பிக்சல் 4a மாடல் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்று இருந்தது. அதீத வரவேற்பு காரணமாக முன்னணி வலைதளங்களில் பிக்சல் 4a விற்பனை துவங்கிய போதெல்லாம், அடிக்கடி விற்றுத் தீர்ந்து கொண்டே இருந்தது. 

    இந்தியாவில் பிக்சல் 6a மாடலை வெளியிடுவது பற்றி கூகுள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதமே அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கூகுள் நிறுவனத்தின் 2022 I/O நிகழ்வு மே 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்விலேயே புதிய பிக்சல் 6a சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் இதன் இந்திய வெளியீட்டு விவரங்களையும் இதே நிகழ்வில் எதிர்பார்க்க முடியும். 

    விவோ நிறுவனம் இந்தியாவில் புது Y சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    விவோ நிறுவனம் தனது Y75 4ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் மே 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது. ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதோடு புது விவோ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. 

    அம்சங்களை பொருத்தவரை விவோ Y75 4ஜி மாடலில் 6.44 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ G96 பிராசஸர், 8GB ரேம், 128GB மெமரி, 50MP பிரைமரி கேமரா, 8MP இரண்டாவது கேமரா, 2MP மூன்றாவது கேமரா மற்றும் 44MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    விவோ  Y75

    விவோ Y75 4ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    - 6.44 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச்
    - மீடியாடெக் ஹீலியோ G96 பிராசஸர்
    - 8GB ரேம்
    - 128GB மெமரி
    - 50MP பிரைமரி கேமரா
    - 8MP இரண்டாவது கேமரா
    - 2MP மூன்றாவது கேமரா
    - 44MP செல்பி கேமரா 
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 4020mAh பேட்டரி
    - 44W பாஸ்ட் சார்ஜிங் வசதி

    இந்தியாவில் விவோ Y75 5ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்குகிறது.  அதன்படி புதிய விவோ Y75  4ஜி வேரியண்ட் விலை அதை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இந்தியாவில் விவோ Y75 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இதன் 4ஜி மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 
    விவோ நிறுவனத்தின் புதிய V23e 5ஜி ஸ்மார்ட்போனிற்கு இந்தியாவில் அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    விவோ நிறுவனத்தின் V23e 5ஜி ஸ்மார்ட்போனிற்கு இந்தியாவில் தற்காலிக விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. சம்மர் ஸ்பெஷல் ஆஃபரின் கீழ் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி விவோ V23e 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. 

    விவோ V23e 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB +128GB மெமரி மாடல் ரூ. 25 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் புளூ மற்றும் சன்ஷைன் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. தற்போது நடைபெற்று வரும் சம்மர் ஸ்பெஷல் ஆஃபர் மே 10 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. அதுவரை  V23e 5ஜி ஸ்மார்ட்போனை ரூ. 20 ஆயிரத்து 990 விலையில் வாங்கிட முடியும். 

    விவோ V23e 5ஜி

    விவோ V23e 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவோர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.எப்.சி. வங்கி, ஒன் கார்டு மற்றும் எஸ்.பி.ஐ. வங்கி கார்டுகளை பயன்படுத்தி ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் பெற முடியும். கேஷ்பேக் சலுகை  ஆப்லைன் விற்பனை மையங்கள் மற்றும் விவோ இந்தியா இ ஸ்டோரில் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விவோ V23e 5ஜி ஸ்மார்ட்போனில் AMOLED பேனல், ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 44MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4050mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 44W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
    நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி பற்றிய விவரங்களை அதன் நிறுவனர் தனது டுவிட்டர் பதில் ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.


    நத்திங் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போன் மாடலான நத்திங் போன் 1 இந்த ஆண்டின் கோடை காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என மார்ச் மாதம் வாக்கில் அறிவித்து இருந்தது. அப்போதே, புதிய நத்திங் ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் பிராசஸரை மற்றும் நத்திங் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான நத்திங் ஓ.எஸ். கொண்டிருக்கும் என தெரிவித்து இருந்தது. 

    “144 மில்லியன் டாலர்களை முதலீடாக ஈட்டி இருக்கிறோம். 300-க்கும் அதிகமானோர் கொண்ட குழுவை உருவாக்கி இருக்கிறோம். குவால்காம் டெக்னாலஜீஸ் போன்ற நம்பத்தகுந்த நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம். உறங்கி கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் போன் 1 மாடலை அறிமுகம் செய்ய தயாராகி விட்டோம்,” என கார்ல் பெய் தெரிவித்து இருந்தார்.



    இந்த நிலையில், புதிய நத்திங் போன் 1 மாடலுக்கான வெளியீட்டு தேதியை கார்ல் பெய் அறிவித்து இருக்கிறார். நத்திங் நிறுவனர் கார்ல் பெய் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஜூன் 9 ஆம் தேதி மாலை 4.20 மணிக்கு நத்திங் போன் 1 மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார். 

    முன்னதாக நத்திங் நிறுவனம் நத்திங் லான்ச்சர் பீட்டா வெர்ஷனை உலகளவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வெளியிட்டு இருந்தது. நத்திங் லான்ச்சர் பீட்டா நத்திங் ஓ.எஸ். இண்டர்பேஸ் போன் 1 மாடலில் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நத்திங் லான்ச்சர் பீட்டாவில் பெரிய ஐகான்கள், போல்டர்கள், பிஸ்போக் கடிகாரம், வானிலை விட்ஜெட், நத்திங் தீம் கொண்ட வால்பேப்ர்கள், மூன்று ஒரிஜினல் ரிங்டோன்கள் இடம்பெற்றுள்ளன.

    நத்திங் ஓ.எஸ். பீட்டா வெர்ஷன் சாம்சங் கேலக்ஸி S21, சாம்சங் கேலக்ஸி S22, கூகுள் பிக்சல் 5 மற்றும் உயர் ரக ஸ்மார்ட்போன் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.  விரைவில் இந்த லான்ச்சர் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. 
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 11T சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு பற்றிய புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    ரெட்மி நோட் 11T மற்றும் நோட் 11T  ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சீன வெளியீடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், இதைத் தொடர்ந்து ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. சியோமியின் ரெட்மி பிராண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அதற்கு முந்தைய வெர்ஷன்களை விட அதிகளவு சிறப்பான செயல்திறன் கொண்டிருக்கும் என தெரிவித்து இருக்கிறது. 

     ரெட்மி நோட் 11

    மே மாதம் இந்த மாடல்களின் வெளியீடு நடைபெற இருப்பதை அடுத்து, ரெட்மி நோட் 11T மற்றும் நோட் 11T ப்ரோ மாடல்கள் பற்றிய புது தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகலாம். ரெட்மி நோட் 11T மற்றும் நோட் 11T ப்ரோ மாடல்களின் வெளியீடு பற்றி சியோமி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வெய்போ அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறது. வெளியீடு மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவற்றின் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    எனினும், புதிய ரெட்மி நோட் 11T சீரிஸ் மாடல்களில் மீடியாடெக் சிப்செட் வழங்கப்படும் என்றும் இவற்றின் விலை CNY 1599 இல் இருந்து CNY 2500, இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரத்து 400-இல் இருந்து ரூ. 29 ஆயிரத்து 700 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இரு மாடல்களில் ரெட்மி நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போனில் 144Hz LCD ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது.

    விவோ நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் T சீரிசின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    விவோ நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய  T சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்கள் விவோ T1 ப்ரோ 5ஜி மற்றும் விவோ T1 44W என அழைக்கப்படுகிறது. இரண்டு புதிய விவோ ஸ்மார்ட்போன்களிலும் 6.44 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

    விவோ T1 44W  மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், விவோ T1 ப்ரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G பிராசஸர், அதிகபட்சம் 8GB பேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க விவோ T1 44W மாடலில் 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 5000mAh பேட்டரி, 44W சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது. விவோ T1 ப்ரோ மாடலில் 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 4700mAh பேட்டரி மற்றும் 66QW சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.

     விவோ T1 ப்ரோ 5ஜி

    விவோ T1 ப்ரோ 5ஜி அம்சங்கள்:

    - 6.44 இன்ச் 2404x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
    - ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G 6nm பிராசஸர்
    - அட்ரினோ 642L GPU
    - 6GB / 8GB ரேம்
    - 128GB மெமரி
    - ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 12
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 64MP பிரைமரி கேமரா, f/1.79, LED ஃபிளாஷ்
    - 8MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 2MP மேக்ரோ கேமரா, f/2.4
    - 16MP செல்ஃபி கேமரா, f/2.0
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ax (2.4Hz + 5Hz), ப்ளூடூத் 5.2
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 4700mAh பேட்டரி
    - 66W ஃபாஸ்ட் சார்ஜிங்

     விவோ T1 44W

    விவோ T1 44W அம்சங்கள்

    - 6.44 இன்ச் 2404x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 6nm பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 4GB ரேம், 64GB மெமரி
    - 8GB ரேம், 128GB மெமரி
    - ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 12
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 50MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
    - 2MP டெப்த் கேமரா
    - 2MP மேக்ரோ கேமரா, f/2.4
    - 16MP செல்ஃபி கேமரா, f/2.0
    - 3.5mm ஆடியோ ஜாக்
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ax (2.4Hz + 5Hz), ப்ளூடூத் 5.0
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5000mAh பேட்டரி
    - 44W ஃபாஸ்ட் சார்ஜிங்

    புதிய விவோ T1 ப்ரோ ஸ்மார்ட்போன் டர்போ பிளாக் மற்றும் டர்போ சியான் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6GB + 128GB மெமரி மாடல் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் 8GB + 128GB மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது.

    விவோ T1 44W ஸ்மார்ட்போன் மிட்நைட் கேலக்ஸி, ஸ்டேரி ஸ்கை மற்றும் ஐஸ் டான் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 499 என்றும் 6GB + 128GB மெமரி மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என்றும் 8GB + 128GB மெமரி மாடல் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் மே 8 ஆம் தேதி தொடங்குகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் தனது நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த இருக்கிறது. ஒன்பிளஸ் நார்டு 2T மற்றும் நார்டு 3 ஸ்மார்ட்போன் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களில் ஒன்பிளஸ் நார்டு 2T இந்த மாதமே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

    புதிய ஒன்பிளஸ் நார்டு 2T மாடல் NBTC சான்று பெற்று இருப்பதை அடுத்து இந்த தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் TDRA சான்று பெற்று இருந்த நிலையில் தற்போது NBTC சான்றையும் பெற்று  இருக்கிறது. இரு சான்றுகளிலும் ஒன்பிளஸ் நார்டு 2T ஸ்மார்ட்போன் CPH2399 எனும் மாடல் நம்பரை கொண்டுள்ளது. புதிய ஒன்பிளஸ் நார்டு 2T மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நார்டு 2 ஸ்மார்ட்போனின் மைனர் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் என தெரிகிறது.

    எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    ஒன்பிளஸ் நார்டு 2T மாடலில் 6.43 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 1300 பிராசஸர், 8GB/12GB LPDDR4x ரேம் மற்றும் 128GB/256GB UFS 2.2 மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும். இத்துடன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 12 வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4500mAh பேட்டரி, 80 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருக்கிறது.

    மேலும் 5ஜி, 4ஜி எல்.டி.இ., டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.1, ஜி.பி.எஸ். மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட், அலர்ட் ஸ்லைடர், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்படுகின்றன. புகைப்படங்களை எடுக்க நார்டு 2T மாடலில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மோனோகுரோம் லென்ஸ் மற்றும் 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. 

    அமேசான் வலைதளத்தில் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனிற்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    அமேசான் இந்தியா வலைதளத்தில் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் விலை ரூ. 12 ஆயிரத்து 999 எனி நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதுவரை இதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அமேசான் சம்மர் சேல் பெயரில் நடைபெற்று வரும் சிறப்பு விற்பனையில் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனிற்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி அமேசான் தளத்தில் புதிய ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு ரூ. 1,250 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது மேலும் ரூ. 1000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் 4GB + 64GB மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் தள்ளுபடி கூப்பனை சேர்க்கும் போது போனின் விலை ரூ. 11 ஆயிரத்து 749 ஆக குறைந்து விடும். மேலும், இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரெட்மி நோட் 11 விலை ரூ. 10 ஆயிரத்து 749 ஆக குறைந்து விடுகிறது. இந்த சலுகை நான்கு நாட்கள் அதாவது மே 6 ஆம் தேதி வரை வழங்கப்படும்.

    ரெட்மி நோட் 11

    ரெட்மி நோட் 11 அம்சங்கள்:

    - 6.43 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
    - ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 4GB LPDDR4X ரேம், 64GB மெமரி
    - 6GB LPDDR4X ரேம், 128GB UFS 2.2 மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆணட்ராய்டு 11 மற்றும் MIUI 13
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 50MP பிரைமரி கேமரா, f/1.8
    - 8MP 118° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
    - 2MP டெப்த் கேமரா
    - 2MP மேக்ரோ கேமரா
    - 13MP செல்பி கேமரா, f/2.4
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
    - 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ 
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP53)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, பைவை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி
    - 5000mAh பேட்டரி
    - 33W ப்ரோ பாஸ்ட் சார்ஜிங் 

    ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்கள் உற்பத்தியின் போது எதிர்கொள்ளும் வழிமுறைகளை அந்நிறுவனம் விரிவாக விளக்கி இருக்கிறது.


    ஒப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்கள் உற்பத்தியின் போது எந்தளவு பரிசோதனைகளை எதிர்கொள்கின்றன என்பதை விரிவாக விவரித்து இருக்கிறது. நுகர்வோர் விசுவாசத்தை வெளிப்படுத்த சிறந்த வழிமுறை உயர் ரக பொருட்களை உற்பத்தி செய்வது தான் என ஒப்போ நிறுவனம் அறிவித்து உள்ளது. 

    இதன் காரணமாக ஒப்போ நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியின் அனைத்து பிரிவுகளிலும் மிக கடுமையான வழிமுறைகளை பின்பற்றி வருகிறது. இதற்காக சில ஆண்டுகளுக்கு முன் ஒப்போ நிறுவனம் இந்தியாவில் QE ரிலயபிலிட்டி ஆய்வகத்தை திறந்தது. 

     ஒப்போ

    தொடர்ச்சியான ஆய்வு, திட்டமிடல் மற்றும் வளர்ச்சி மூலம் மிக எளிமையான யோசனைகள் பிறக்கும். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிளாக்‌ஷிப் மாடல்களான ஒப்போ F21 ப்ரோ உள்ளிட்டவை ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான மணி நேர மனித உழைப்பின் பலனாக உருவாக்கப்பட்டன. 

    இதனை எப்படி உற்பத்தி செய்வது என்பதை திட்டமிடவே நீண்ட காலம் ஆகிவிட்டது. ஒவ்வொரு புதிய ஒப்போ சாதனமும் இதுபோன்று பிரத்யேக வழிமுறைகளை கடந்தே உற்பத்தி நிலையை எட்டுகின்றன. மேலும் ஸ்மார்ட்போன்களின் தரம் மற்றும் உறுதியை நிலைநாட்ட பலக்கட்ட பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இது போன்ற பரிசோதனைகள் ஒப்போ நிறுவனத்தின் ரிலையபிலிட்டி ஆய்வகத்தில் நடத்தப்படுகிறது.
    போக்கோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய போக்கோ M4 5ஜி ஸ்மாரட்போனினை அறிமுகம் செய்தது.


    போக்கோ நிறுவனம் தனது M4 5ஜி மிட்-ரேனஅஜ் 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.58 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 6GB ரேம், 2GB விர்ச்சுவல் ரேம், அதிகபட்சமாக ஏழு 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் வசதி, ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13 போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    போக்கோ M4 5ஜி

    போக்கோ M4 5ஜி அம்சங்கள்:

    - 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
    - ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 7nm பிராசஸர்
    - மாலி-G57 MC2 GPU
    - 4GB LPDDR4x ரேம், 64GB (UFS 2.2) மெமரி
    - 6GB LPDDR4x ரேம், 128GB (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13
    - 50MP பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
    - 2MP போர்டிரெயிட் கேமரா, f/2.4
    - 8MP செல்பி கேமரா, f/2.45
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
    - டஸட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட், வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.1
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5000mAh பேட்டரி
    - 18W பாஸ்ட் சார்ஜிங்

    போக்கோ M4 5ஜி ஸ்மார்ட்போன் கூல் புளூ, பவர் பிளாக் மற்றும் போக்கோ எல்லோ என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB + 64GB மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் 6GB + 128GB மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 5 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

    ×