search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    அசத்தல் அம்சங்களுடன் வெளியீட்டுக்கு தயாராகிறது போக்கோ F4 ஸ்மார்ட்போன்
    X

    அசத்தல் அம்சங்களுடன் வெளியீட்டுக்கு தயாராகிறது போக்கோ F4 ஸ்மார்ட்போன்

    • போக்கோ F4 மாடலின் லீக்கான இமேஜை பார்க்கும் போது இது 64MP டிரிபிள் கேமராவுடன் இருப்பதாக தெரிகிறது.
    • டைப் சி சார்ஜிங் போர்ட், ஆண்ட்ராய்டு 12, 6.69 இன்ச் டிஸ்பிளே என பல்வேறு சிறப்பம்சங்களை இந்த போன் கொண்டுள்ளது.

    போக்கோ நிறுவனம் விரைவில் தனது F சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. போக்கோ F4 எனப்படும் இந்த மாடல் ரெட்மி K40S-ன் ரீ பிராண்டாக இருக்கும் என கூறப்படுகிறது. போக்கோ F4 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் GT போன்களைப் போல் அல்லாமல் ஆல்ரவுண்ட் எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. GT போன்கள் பிரத்யேகமாக கேமிங்கிற்காக மட்டும் தயாரிக்கப்பட்டு இருந்தது.

    போக்கோ F4 ஸ்மார்ட்போன் ரெட்மி K40S மாடலின் ரீ பிராண்டாக இருக்கும் என கூறப்படுவதால், அதில் உள்ளபடியே ஸ்னாப்டிராகன் 870 புராசசர் உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் FHD+ E4 AMOLED டிஸ்பிளே இடம்பெறலாம் என்றும் 6ஜிபி ரேம் 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இது வரக்கூடும் என கூறப்படுகிறது.


    கேமராவை பொருத்தவரை ரெட்மி K40S மாடலில் 48MP டிரிபிள் கேமரா செட் அப் உடன் இருக்கும், ஆனால் போக்கோ F4 மாடலின் லீக்கான இமேஜை பார்க்கும் போது இது 64MP டிரிபிள் கேமராவுடன் இருப்பதாக தெரிகிறது. மேலும் இது 4,520mAh பேட்டரி மற்றும் 67W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டைப் சி சார்ஜிங் போர்ட், ஆண்ட்ராய்டு 12, 6.69 இன்ச் டிஸ்பிளே என பல்வேறு சிறப்பம்சங்களை இந்த போன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த போனின் விலை எவ்வளவு நிர்ணயம் செய்யப்பட உள்ளது என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

    Next Story
    ×