என் மலர்
மொபைல்ஸ்
- போக்கோ F4 ஸ்மார்ட்போன் 67W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- போக்கோ F4 மாடல் 64MP டிரிபிள் கேமராவுடன் வர இருக்கிறது.
போக்கோ நிறுவனம் தனது அடுத்த F சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி உள்ளது. போக்கோ F4 எனப்படும் இந்த மாடல் ரெட்மி K40S-ன் ரீ பிராண்டாக தயாராகி இருக்கிறது. போக்கோ F4 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த போன் வருகிற ஜூன் 23-ந் தேதி நடைபெற உள்ள லான்ச் ஈவண்ட்டில் வெளியிடப்பட உள்ளது.
போக்கோ F4 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் GT போன்களைப் போல் அல்லாமல் ஆல்ரவுண்ட் எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. GT போன்கள் பிரத்யேகமாக கேமிங்கிற்காக மட்டும் தயாரிக்கப்பட்டு இருந்தது. போக்கோ F4 ஸ்மார்ட்போன் ரெட்மி K40S மாடலின் ரீ பிராண்டாக இருக்கும் என கூறப்படுவதால், அதில் உள்ளபடியே ஸ்னாப்டிராகன் 870 புராசசர் உடன் வர உள்ளது. அதேபோல் FHD+ E4 AMOLED டிஸ்ப்ளே இதில் இடம்பெற்றுள்ளது.

கேமராவை பொருத்தவரை ரெட்மி K40S மாடலில் 48MP டிரிபிள் கேமரா செட் அப் உடன் இருக்கும், ஆனால் போக்கோ F4 மாடல் 64MP டிரிபிள் கேமராவுடன் வர இருக்கிறது. மேலும் இது 4,520mAh பேட்டரி மற்றும் 67W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டைப் சி சார்ஜிங் போர்ட், ஆண்ட்ராய்டு 12, 6.69 இன்ச் டிஸ்பிளே, என பல்வேறு சிறப்பம்சங்களை இந்த போன் கொண்டுள்ளது. ஜூன் 23-ந் தேதி இந்த போன் வெளியிடப்பட உள்ள நிலையில் அதன் விலை விவரம் தற்போது இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அதன்படி போக்கோ F4 மாடலின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.39 ஆயிரமாக இருக்கும் என்றும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.42,650ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- ரியல்மி C30 மாடல் ஸ்மார்ட்போன் பேம்பூ கிரீன், லேக் புளூ மற்றும் டெனிம் பிளாக் ஆகிய மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 8MP பிரைமரி கேமரா மற்றும் 5MP செல்பி கேமரா உடன் வருகிறது.
ரியல்மி நிறுவனம் அதன் புதிய C30 ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்டதைப் போல், புதிய ரியல்மி C30 ஸ்மார்ட்போனில் 6.5 இனச் ஹெச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே, 60Hz புதுப்பிப்பு வீதம், 120Hz டச் சேம்ப்லிங் ரேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. புராசஸரை பொருத்தவரை C30 மாடல் ஸ்மார்ட்போன் யுனிசாக் T612 பிராசஸரைக் கொண்டுள்ளது.
இதில் அதிகபட்சம் 3GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி UI கோ எடிஷன் இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 8MP பிரைமரி கேமரா மற்றும் 5MP செல்பி கேமரா உடன் வருகிறது. ரியல்மி C30 ஸ்மார்ட்போனில் வெர்டிகல் ஸ்டிரைப் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் 5000mAh பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

ரியல்மி C30 மாடல் ஸ்மார்ட்போன் பேம்பூ கிரீன், லேக் புளூ மற்றும் டெனிம் பிளாக் ஆகிய மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2GB ரேம், 32GB மெமரி கொண்ட மாடலின் விலை ரூ. 7 ஆயிரத்து 499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் 3GB ரேம், 32GB மெமரி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ. 8 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி, பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களிலும், ஆப்லைன் ஸ்டோர்களிலும் வருகிற ஜூன் 27 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கிரீன் ஆகிய இரு நிறங்களில் வர உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் 5,000 mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது.
ரியல்மி நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. ரியல்மி நார்ஸோ 50i பிரைம் எனும் பெயர்கொண்ட அந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூன் 22-ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மலிவு விலை ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுவதால் இதன் விலை ரூ.8 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கிரீன் ஆகிய இரு நிறங்களில் வர உள்ளது. இதன் பின்புறம் சிங்கிள் கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் லைட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5,000 mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது. இந்த போனின் வலது பக்கத்தில் வால்யூம் பட்டன் மற்றும் பவர் பட்டன் இடம்பெற்று உள்ளது.

அதேபோல் இடதுபக்கத்தில் சிம் டிரே இருக்கும் என கூறப்படுகிறது. டூயல் சிம் சப்போர்ட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் BLP877 என்கிற மாடல் நம்பரை கொண்டுள்ளது. வருகிற ஜூன் 22-ந் தேதி ரியல்மி நார்ஸோ 50i பிரைம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் வெளியீட்டுக்கு பின்னரே உண்மையான விலை நிலவரம் தெரியவரும்.
- டிசைனைப் பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி M13 மாடலைப் போன்றே தற்போது வெளியாக உள்ள F13 மாடலும் உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் பிங்க், புளூ, கிரீன்ஆகிய மூன்று நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.
சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் வெளியிட தயாராகி உள்ளது. சாம்சங் கேலக்ஸி F13 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரம், அதில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் கலர் ஆகியவற்றை சாம்சங் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி சாம்சங் கேலக்ஸி F13 ஸ்மார்ட்போன் வருகிற ஜூன் 22ந் தேதி மதியம் 12 மணி முதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர பிளிப்கார்ட் மற்றும் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் வாயிலாக ஆன்லைன் மூலமும் அன்றைய தினம் விற்பனை தொடங்கப்பட உள்ளது.

டிசைனைப் பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி M13 மாடலைப் போன்றே தற்போது வெளியாக உள்ள F13 மாடலும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிங்க், புளூ, கிரீன்ஆகிய மூன்று நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. சாம்சங் கேலக்ஸி F13 முழு ஹெச்டி + எல்சிடி பேனலுடன் கூடிய 6.6-இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது 15W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது. இது 8ஜிபி ரேமைக் கொண்டுள்ளது. கேமராவை பொருத்தவரை பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பும், முன்புறத்தில் வாட்டர் டிராப் நாட்ச் செல்ஃபி கேமராவும் உள்ளது. சாம்சங் எக்சினாஸ் 850 புராசசருடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.15 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- போக்கோவின் GT போன்கள் பிரத்யேகமாக கேமிங்கிற்காக மட்டும் தயாரிக்கப்பட்டு இருந்தது.
- போக்கோ F4 மாடல் 64MP டிரிபிள் கேமராவுடன் வர இருக்கிறது.
போக்கோ நிறுவனம் தனது அடுத்த F சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி உள்ளது. போக்கோ F4 எனப்படும் இந்த மாடல் ரெட்மி K40S-ன் ரீ பிராண்டாக தயாராகி இருக்கிறது. இந்நிலையில், போக்கோ F4 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த போன் வருகிற ஜூன் 23-ந் தேதி நடைபெற உள்ள லான்ச் ஈவண்ட்டில் வெளியிடப்பட உள்ளது.
போக்கோ F4 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் GT போன்களைப் போல் அல்லாமல் ஆல்ரவுண்ட் எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. GT போன்கள் பிரத்யேகமாக கேமிங்கிற்காக மட்டும் தயாரிக்கப்பட்டு இருந்தது. போக்கோ F4 ஸ்மார்ட்போன் ரெட்மி K40S மாடலின் ரீ பிராண்டாக இருக்கும் என கூறப்படுவதால், அதில் உள்ளபடியே ஸ்னாப்டிராகன் 870 புராசசர் உடன் வர உள்ளது. அதேபோல் FHD+ E4 AMOLED டிஸ்ப்ளே இதில் இடம்பெற்றுள்ளது.

கேமராவை பொருத்தவரை ரெட்மி K40S மாடலில் 48MP டிரிபிள் கேமரா செட் அப் உடன் இருக்கும், ஆனால் போக்கோ F4 மாடல் 64MP டிரிபிள் கேமராவுடன் வர இருக்கிறது. மேலும் இது 4,520mAh பேட்டரி மற்றும் 67W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டைப் சி சார்ஜிங் போர்ட், ஆண்ட்ராய்டு 12, 6.69 இன்ச் டிஸ்பிளே, 12ஜிபி ரேம் 256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் என பல்வேறு சிறப்பம்சங்களை இந்த போன் கொண்டுள்ளது. ஜூன் 23-ந் தேதி தான் இதன் விலை என்ன என்பது தெரியவரும்.
- சாம்சங் கேலக்ஸி Z Fold 4 ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 7.6-இன்ச் இன்டர்னல் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
- சாம்சங் கேலக்ஸி Z Fold 4 ஆனது பின்புறத்தில் மூன்று கேமராக்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய போன்களான கேலக்ஸி Z Fold 4 மற்றும் கேலக்ஸி Z Flip 4 ஆகிய மாடல்கள் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ள அன்பேக்டு ஈவண்டில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மாத இறுதியில் விற்பனைக்கு வரவும் வாய்ப்புள்ளது. கேலக்ஸி Z Fold 3 மற்றும் Flip 3 மாடல்களை போன்றே Z Fold 4 மற்றும் கேலக்ஸி Z Flip 4 ஆகியவற்றின் டிசைன் இருக்கும் என்றும், ஹார்டுவேரில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி Z Fold 4 போன் ஜீக்பெஞ்சில் SM-F936U என்கிற மாடல் நம்பருடன் தோன்றி உள்ளது. இதில் உள்ள F என்பது மடிக்கக்கூடியது என்பதை குறிக்கிறது. இதன்மூலம் அந்த போன்களின் ஆண்ட்ராய்டு வெர்ஷன், ரேம் சிப்செட் போன்றவற்றின் விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் வருகிறது. மேலும் 12 ஜிபி ரேம்மையும், குவால்காம் ஸ்நாப்டிராகன் 8+ Gen1 சிப்செட்டையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி Z Fold 4 ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 7.6-இன்ச் இன்டர்னல் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அவை 120Hz புதுப்பிப்பு வீதம், HDR10+, டால்பி விஷன் மற்றும் செல்ஃபிக்களுக்கான இன்-ஸ்கிரீன் கேமரா சென்சார் ஆகியவற்றுடன் வரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்குடன் 4,400mAh பேட்டரியைக் கொண்டிருக்குமாம்.
பிரீமியம் ஃபோனுக்கு 25W மிகவும் மெதுவாக இருப்பதால், சாம்சங் ஃபோல்ட் 4 இல் சார்ஜிங் வேகத்தை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி Z Fold 4 ஆனது பின்புறத்தில் மூன்று கேமராக்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, இதில் 50MP முதன்மை கேமரா, 12MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 3X ஜூம் கொண்ட 12MP டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும்.
- 3 கேமரா செட் அப் உடன் இந்த போன் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.
- ஜூன் மாத இறுதியில் லாவா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லாவா நிறுவனம் அக்னி என்கிற தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனை கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. அதன்பின்னர் அந்நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில், அந்நிறுவனம் தற்போது தனது அடுத்த ஸ்மார்ட்போனை வெளியிட தயாராகி உள்ளது.
அதன்படி அந்நிறுவனம் மலிவு விலையில் பின்பகுதியில் கிளாஸ் பேனல் உடன் கூடிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10 ஆயிரத்திற்கும் கீழ் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பின்பகுதியில் 3 கேமரா செட் அப் உடன் அந்த போன் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் UniSoc சிப்செட் உடன் வர வாய்ப்புள்ளது. இந்த மாத இறுதியில் லாவா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்பகுதியில் கிளாஸ் பேனல் உள்ளதே இதன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த போனுக்கு சந்தையில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஐபோனின் SE, ஐபோன் 11, ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் மினி மற்றும் ஐபோன் SE 3 ஆகிய மாடல்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளன.
- ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு அசத்தல் டிஸ்கவுண்ட்டும் வழங்கப்படுகின்றன.
பிளிப்கார்ட்டில் எண்ட் ஆஃப் சீசன் சேல் தற்போது போடப்பட்டுள்ளது. ஜூன் 17-ந் தேதி வரை உள்ள இந்த சேலில் ஏராளமான ஆஃபர்களும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஐபோனின் SE, ஐபோன் 11, ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் மினி மற்றும் ஐபோன் SE 3 ஆகிய மாடல்களின் விலைகளும் அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளன.
ஐபோன் SE என்பது ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் குறைவான விலை கொண்ட போன் ஆகும். இதன் 64 ஜிபி வெர்ஷன் ரூ.29,999-க்கும், 128 ஜிபி வெர்ஷன் ரூ.34,900-க்கும், 256 ஜிபி வெர்ஷன் ரூ.44,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போதைய ஆஃபர் படி ரூ.999 மதிப்புள்ள பைஜுஸ் 3 லைவ் வகுப்புகள், 3 மாதத்திற்கான கானா பிளஸ் சப்ஸ்கிரிப்ஷன், ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஆக்சிஸ் பேங்க் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக ரூ.12,500 எக்ஸ்சேன்ஞ் டிஸ்கவுண்ட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் ஐபோன் 11 மாடலின் 64 ஜிபி வெர்ஷன் 49,999-ல் இருந்து 41,999 ஆகவும், 128 ஜிபி வெர்ஷன் 54,900ல் இருந்து 46,999 ஆகவும் விலை குறைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களது பழைய போனுக்கு ரூ.12,500 எக்ஸ்சேஞ் ஆஃபர் பெறுவதோடு கூடுதலாக ரூ.2,250 இன்ஸ்டண்ட் டிஸ்கவுண்டும் பெற முடியும்.
இதுதவிர ஐபோன் 12 மாடல்கள் ரூ.12 ஆயிரம் வரையிலும், ஐபோன் 13 மாடல்களுக்கு ரூ.10 ஆயிரம் வரையிலும், ஐபோன் 13 மினி மாடலுக்கு ரூ. 6 ஆயிரம் வரையிலும், ஐபோன் SE 3 மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் வரையிலும் விலைகுறைப்பு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு அசத்தல் டிஸ்கவுண்ட்டும் வழங்கப்படுகின்றன.
- போக்கோ நிறுவனத்தின் புது 5ஜி போன் விரைவில் வெளியாக இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் லீக் ஆகி உள்ளது.
போக்கோ நிறுவனம் விரைவில் புதிய போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. புது போக்கோ போன் இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் அறிமுகமாக இருக்கிறது. போக்கோ F4 5ஜி வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இதன் வெளியீடு இம்மாத இறுதியில் நடைபெறும் என கூறப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிபிசெட் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த ஸ்மார்ட்போன் மாடலின் சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், இதன் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

அதன் படி போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போன் 12GB LPDDR5 ரேம், 256GB UFS3.1 மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படலாம். இந்த பிரிவில் கிடைக்கும் அதிவேக ஸ்மார்ட்போன் மாடலாக போக்கோ F4 5ஜி இருக்கும் என தெரிகிறது. சர்வதேச சந்தையில் போக்கோ F4 ஒற்றை வேரியண்டில் அறிமுகமாக இருக்கிறது.
அதன்படி போக்கோ F4 5ஜி மாடல் விலை 459 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 35 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்திய சந்தையில் புதிய போக்கோ F4 5ஜி மாடலின் விலை வங்கி சலுகைகளை சேர்த்து ரூ. 26 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.
- ரெட்மி K சீரிஸ் ஸ்மார்ட்போன் ஒன்று விரைவில் இந்தியாவுக்கு வருகிறது.
- இது ரெட்மி நோட் 11 ப்ரோ மாடலின் ரீ பிராண்டட் வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.
ரெட்மியின் K சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் உலகளவில் 3 மாடல்களுக்கு மேல் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் K20 என்கிற ஒரு மாடல் மட்டுமே வெளியிடப்பட்டது. இந்தியாவில் K சீரிஸ் போன்கள் அதிகளவில் வெளியிடப்படாததற்கு முக்கிய காரணம் அதன் விலை அதிகமாக இருப்பது தான்.

இந்நிலையில் தற்போது மீண்டும் K சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில் ரெட்மி K50i 5ஜி என்கிற ஸ்மார்ட்போன் தான் விரைவில் இந்தியாவுக்கு வருகிறது. இது ரெட்மி நோட் 11 புரோ மாடலின் ரீ பிராண்டட் வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், பின்புறம் டிரிபிள் கேமரா செட் அப், 5080 mAh பேட்டரி, 67W பாஸ்ட் சார்ஜிங் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- வருகிற ஆகஸ்ட் மாதம் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- புரோ வெர்ஷனுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
சியோமி நிறுவனம் அதன் ரெட்மி நோட் 10S மாடலை கடந்த 2021ம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்தியது. ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10 புரோ ஆகிய மாடல்களுக்கு இடையே இந்த நோட் 10S ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. அந்த போன் வெளியாகி ஓராண்டு ஆகும் நிலையில் தற்போது அதனை போக்கோ பிராண்ட் மூலம் மறு வெளியீடு செய்யப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது புரோ வெர்ஷனுடன் அறிமுகமாக உள்ளதாம். இந்த ஸ்மார்ட்போனில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் இதன் நார்மல் வெர்ஷன் மாடலான நோட் 10S-ல் உள்ள அம்சங்களை கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 10S மாடல் ஆனது 6.43-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹிலியோ G96 SoC, 64MP (அகலம்) + 8MP (அல்ட்ரா-வைட்) + 2MP (மேக்ரோ) + 2MP (ஆழம்) என பின்புறத்தில் 4 கேமராக்களை கொண்டுள்ளது. இதுதவிர 13 MP செல்ஃபி கேமராவும் உள்ளது.
இது டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், IP53 மதிப்பீடு, 5,000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகியவற்றுடன் வருகிறது.
- ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.30 ஆயிரத்திற்கும் கீழ் நிர்ணயம் செய்யப்படலாம்.
- இந்த ஸ்மார்ட்போன் கிரே ஷேடோ மற்றும் ஜேடு ஃபாக் கலர் ஆகிய இரு நிறங்களில் வருகிறது.
ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி இந்த மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் கசிந்துள்ளது. ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் 'T' மாடலாக கடந்த மாதம் பல்வேறு சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.43-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, மேலும் இது மீடியா டெக் டைமென்சிட்டி 1300 SoC மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சாரும் இதில் உள்ளது.

ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.30 ஆயிரத்திற்கும் கீழ் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற நாடுகளில் கடந்த மே மாதம் வெளியான இந்த ஸ்மார்போனின் 8ஜிபி ரேம் 128ஜிபி இண்டர்னல் மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.33,400 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் 12ஜிபி ரேம் 256ஜிபி இண்டர்னல் மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.41,600 ஆக இருந்தது.
இந்த ஸ்மார்ட்போன் கிரே ஷேடோ மற்றும் ஜேடு ஃபாக் கலர் ஆகிய இரு நிறங்களில் வருகிறது. உலகளவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி மாடல் அதே அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகுமா அல்லது அதில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படுமா என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை.






