என் மலர்
நீங்கள் தேடியது "Tecno Spark 8P"
- ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 6.6இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்ப்ளே உடன் வருகிறது.
- 4ஜிபி ரேம் உடன் வரும் இந்த போனில் 7ஜிபி வரை மெமரியை நீட்டித்துக்கொள்ளும் மெமரி ஃபியூசன் அம்சம் உள்ளது.
டெக்னோ நிறுவனத்தின் ஸ்பார்க் 8P ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா செட் அப் உடன் வந்துள்ளது. இது ஆக்டாகோர் மீடியாடெக் புராசஸரை கொண்டுள்ளது. 5,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

விலையை பொருத்தவரை டெக்னோ ஸ்பார்க் 8P ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.10 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அட்லாண்டிக் ப்ளூ, ஐரிஸ் பர்பிள், டஹிடி கோல்டு மற்றும் டர்குயிஸ் சியன் ஆகிய நிறங்களில் வருகிறது.
ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 6.6இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்ப்ளே உடன் வருகிறது. 4ஜிபி ரேம் உடன் வரும் இந்த போனில் 7ஜிபி வரை மெமரியை நீட்டித்துக்கொள்ளும் மெமரி ஃபியூசன் அம்சம் உள்ளது. இதன் பிரதான கேமரா 50மெகாபிக்சல் உடனும், செல்ஃபி கேமரா 8 மெகாபிக்சல் உடனும் வருகிறது.






