search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    சார்ஜர் இன்றி விற்பனைக்கு வருகிறது நத்திங் போன்
    X

    சார்ஜர் இன்றி விற்பனைக்கு வருகிறது நத்திங் போன்

    • நத்திங் போனை முன்பதிவு செய்ய ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும்.
    • இந்தியாவில் இந்த போன் பிளிப்கார்ட் தளம் மூலம் விற்பனைக்கு வர உள்ளது.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை வருகிற ஜூலை 12-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள ஈவண்ட்டில் வெளியிட உள்ளது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால், அந்த போன் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் இந்தியாவில் இந்த போன் பிளிப்கார்ட் தளம் மூலம் விற்பனைக்கு வர உள்ளது. இந்த போனுக்கான முன்பதிவு கடந்த வாரம் பிளிப்கார்ட் தளத்தில் தொடங்கப்பட்டது. முன்பதிவு செய்பவர்களுக்கு ஒரு பாஸ் ஒன்று வழங்கப்படும் அது இருந்தால் மட்டுமே நத்திங் போனை வாங்க முடியும்.

    இந்த போனை முன்பதிவு செய்ய ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும், அந்த தொகையை செலுத்தினால் தான் பாஸ் வழங்கப்படும். இந்த 2 ஆயிரம் ரூபாய் முன்பதிவு தொகை, போன் வாங்கும்போது அதன் மொத்த விலையில் கழித்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நத்திங் போன் பற்றிய மேலும் ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நத்திங் போனின் ரீ-டெயில் பாக்ஸ் எப்படி இருக்கும் என்பது குறித்து வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. அதன்மூலம் நத்திங் போன் (1) மாடலுக்கு சார்ஜர் வழங்கப்பட மாட்டது என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ரீ-டெயில் பாக்ஸ் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.

    Next Story
    ×