என் மலர்
மொபைல்ஸ்
- மிகவும் மெலிதான வடிவமைப்பு மற்றும் ஸ்ட்ரெய்ட் எட்ஜ் டிசைன் ஆகியவற்றை கொண்டுள்ளது.
- அதிக அளவு பேட்டரி திறன் கொண்ட மெலிதான 5ஜி ஸ்மார்ட்போனாக ஒபோ K10 5ஜி இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓபோ நிறுவனத்தின் K10 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட K10 இன் 4ஜி மாடல் முதல் 15 நாட்களில் 1,00,000 யூனிட்கள் விற்பனை ஆனதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட K10 5ஜி மாடலிலிருந்து இது வேறுபட்டதாக உள்ளது.
இது மிகவும் மெலிதான வடிவமைப்பு மற்றும் ஸ்ட்ரெய்ட் எட்ஜ் டிசைன் ஆகியவற்றை கொண்டது. மேலும் பின்புறத்தில் கைரேகை மற்றும் கீறல்-எதிர்ப்பு திறன் கொண்ட பின்புற வடிவமைப்பை இந்த ஃபோன் கொண்டிருக்கிறது. அதிக அளவு பேட்டரி திறன் கொண்ட மெலிதான 5ஜி ஸ்மார்ட்போனாக ஒபோ K10 5ஜி இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

6.56 இன்ச் HD+ IPS LCD திரை, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி யுஎஃப்எஸ் 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், டூயல் எல்இடி ப்ளாஷ், 8 மெகாபிக்சல் முன் கேமரா, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், 3.5 மிமீ இயர்போன் ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 7.9 மிமீ தடிமன், 190 கிராம் எடை, 33W வேகமான சார்ஜிங்குடன் கூடிய 5000mAh பேட்டரி ஆகியவை இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றிருக்கிறது.
ஓபோ K10 5ஜி ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் ஓசன் புளூ ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.17,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிளிப்கார்ட், ஓபோ ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் வருகிற ஜூன் 15ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- மோட்டோ g82 5ஜி ஸ்மார்ட்போன் மீட்டியோரைட் கிரே மற்றும் ஒயிட் லில்லி ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கிறது.
- பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் மூலமாக வருகிற ஜூன் 14-ந் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வர இருக்கிறது.
மோட்டோ g82 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அந்த போன் ஜூன் 7-ந் தேதி இந்தியாவில் சில மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. குறைந்த விலையில் 50MP கேமரா வசதியுடன் அறிமுகமாகியுள்ள முதல் போன் இதுவாகும். உலகளவில் AMOLED டிஸ்பிளே உடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போன் இந்தியாவில் pOLED டிஸ்பிளே உடன் விற்பனைக்கு வர உள்ளது.
இது 13 5ஜி பேண்ட் ஆதவுடன் இயங்கும் திறன் கொண்டதாகும். 6ஜிபி ரேம் கொண்ட ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 695 SoC, ஆண்ட்ராய்டு 12, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், OIS உடன் 50 மெகா பிக்சல் பின்பக்க கேமரா, 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் + டெப்த் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை இந்த போனில் உள்ளன. மேலும் 30W டர்போ சார்ஜிங் வசதியுடன் 5000 mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

மோட்டோ g82 5ஜி ஸ்மார்ட்போன் மீட்டியோரைட் கிரே மற்றும் ஒயிட் லில்லி ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் மூலமாக வருகிற ஜூன் 14-ந் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இண்டர்னல் மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.21,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இண்டர்னல் மெமரியுடன் கூடிய மாடலின் விலை ரூ.22,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக ஆஃபராக SBI கிரெடிட் கார்டு மூலம் ரூ.1500 இன்ஸ்டண்ட் டிஸ்கவுண்ட் பெற முடியும்.
- போக்கோ F4 மாடலின் லீக்கான இமேஜை பார்க்கும் போது இது 64MP டிரிபிள் கேமராவுடன் இருப்பதாக தெரிகிறது.
- டைப் சி சார்ஜிங் போர்ட், ஆண்ட்ராய்டு 12, 6.69 இன்ச் டிஸ்பிளே என பல்வேறு சிறப்பம்சங்களை இந்த போன் கொண்டுள்ளது.
போக்கோ நிறுவனம் விரைவில் தனது F சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. போக்கோ F4 எனப்படும் இந்த மாடல் ரெட்மி K40S-ன் ரீ பிராண்டாக இருக்கும் என கூறப்படுகிறது. போக்கோ F4 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் GT போன்களைப் போல் அல்லாமல் ஆல்ரவுண்ட் எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. GT போன்கள் பிரத்யேகமாக கேமிங்கிற்காக மட்டும் தயாரிக்கப்பட்டு இருந்தது.
போக்கோ F4 ஸ்மார்ட்போன் ரெட்மி K40S மாடலின் ரீ பிராண்டாக இருக்கும் என கூறப்படுவதால், அதில் உள்ளபடியே ஸ்னாப்டிராகன் 870 புராசசர் உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் FHD+ E4 AMOLED டிஸ்பிளே இடம்பெறலாம் என்றும் 6ஜிபி ரேம் 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இது வரக்கூடும் என கூறப்படுகிறது.

கேமராவை பொருத்தவரை ரெட்மி K40S மாடலில் 48MP டிரிபிள் கேமரா செட் அப் உடன் இருக்கும், ஆனால் போக்கோ F4 மாடலின் லீக்கான இமேஜை பார்க்கும் போது இது 64MP டிரிபிள் கேமராவுடன் இருப்பதாக தெரிகிறது. மேலும் இது 4,520mAh பேட்டரி மற்றும் 67W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டைப் சி சார்ஜிங் போர்ட், ஆண்ட்ராய்டு 12, 6.69 இன்ச் டிஸ்பிளே என பல்வேறு சிறப்பம்சங்களை இந்த போன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த போனின் விலை எவ்வளவு நிர்ணயம் செய்யப்பட உள்ளது என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
- போக்கோ C40 எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் என்பதால், இதில் ஸ்னாப்டிராகன் அல்லது மீடியாடெக் எண்ட்ரி லெவல் பிராசஸர் மற்றும் LCD பேனல் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
போக்கோ நிறுவனம் வெளியிட உள்ள புது C சீரிஸ் ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அந்நிறுவனம் C40 என்கிற மாடலை வெளியிட உள்ளதாம். இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூன் 16ம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது.
போக்கோ C40 ஸ்மார்ட்போன் ரீ பிராண்ட் செய்யப்பட்ட ரெட்மி போனாக இருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி ரெட்மி 10C மாடலை போல் போக்கோ C40 மாடலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிசைன் எக்ஸ்கிளூசிவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த போன் அந்நிறுவனத்தின் சிக்னேச்சர் கலரான மஞ்சள் நிறத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6000 mAH பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என்றும் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 11 இயங்குதளத்துடன் வரும் என கூறப்படுகிறது. மேலும் இது எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் என்பதால், இதில் ஸ்னாப்டிராகன் அல்லது மீடியாடெக் எண்ட்ரி லெவல் பிராசஸர் மற்றும் LCD பேனல் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
ரெட்மி 10C ஸ்மார்ட் போன் 6.7 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 13MP செல்பி கேமரா, 3GB ரேம், 32GB இண்டர்னல் மெமரி, 4GB ரேம், 64GB இண்டர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும், ஆதலால் போக்கோ C40 ஸ்மார்ட்போனிலும் இந்த அம்சங்களை எதிர்பார்க்கலாம்.













