search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Infinix 180W Thunder Charge"

    • சூப்பர் பாஸ்ட் 180W தண்டர் சார்ஜ் டெக்னாலஜியை இன்பினிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
    • விரைவில் அறிமுகமாக உள்ள இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் போன்களில் இந்த சார்ஜிங் அம்சம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன்களும் ஒரு அங்கமாக மாறிவிட்டது. காலை முதல் இரவு தூங்கும் வரை யாராலும் அதனை பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்கிற நிலை தான் தற்போது உள்ளது. ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பெரும் தலைவழியாக இருப்பது அதில் உள்ள பேட்டரி தான். அதிகம் பயன்படுத்தினால் சூடாகிவிடும், அதுமட்டுமின்றி சார்ஜும் வேகமாக குறைந்துவிடும்.

    இத்தகைய பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காணும் விதமாக இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் புதிய ஃபிளாக்‌ஷிப் போன்களில் அசத்தல் அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி சூப்பர் பாஸ்ட் 180W தண்டர் சார்ஜ் டெக்னாலஜியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்மூலம் இன்பினிக்ஸின் புதிய ஃபிளாக்‌ஷிப் போன்கள் 4 நிமிடத்தில் 50 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


    இவ்வளவு வேகமாக சார்ஜ் செய்யப்படுவதனால் அதில் சில ஆபத்துகளும் நேர வாய்ப்பு இருக்கும் என நீங்கள் எண்ணலாம், ஆனால் அப்படி நேர வாய்ப்பே இல்லை என அந்நிறுவனம் கூறுகிறது. இதில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் உள்ளதாம். இவ்வளவு வேகமாக சார்ஜ் ஏறினாலும் இதன் பேட்டரி சூடாகாதாம். சூடாவதை தடுக்க யுஎஸ்பி போர்ட், சார்ஜிங் சிப், பேட்டரி உள்பட 10 இடங்களில் டெம்பரேச்சர் சென்சார் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. விரைவில் அறிமுகமாக உள்ள இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் போன்களில் இந்த சார்ஜிங் அம்சம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×