என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asus ROG Phone 6"

    • அசுஸ் ரோக் 6 மாடல் பேண்டம் பிளாக் மற்றும் ஸ்டார்ம் ஒயிட் ஆகிய இரு நிறங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
    • அதேபோல் ரோக் 6 ப்ரோ மாடல் ஸ்டார்ம் ஒயிட் நிறத்தில் மட்டும் அறிமுகமாகி உள்ளது.

    அசுஸ் நிறுவனத்தின் ரோக் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமானது. இதில் அசுஸ் ரோக் 6 மற்றும் அசுஸ் ரோக் 6 ப்ரோ ஆகிய இரு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த இரண்டு மாடல்களுக்கும் சிறிய வித்தியாசம் தான். அதுவும் பேக் கவர் டிஸ்ப்ளே பேனல் மற்றும் ரேம் ஸ்டோரேஜ் ஆகியவை மட்டும் தான் மாறுமாம், மற்றபடி இரண்டும் ஒரே அம்சங்களை கொண்டுள்ளது.

    இது 6.78 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி பிக்சல் ஒர்க்ஸ் ஐ6 புராசஸரும் இதில் இடம்பெற்று உள்ளது. இதன் ஸ்கிரீன் 165 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இதுதவிர இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஏர் டிரிகர் 6-க்கான அல்ட்ராசோனிக் சென்சார், கிரிப் பிரெஸ் டிடெக்‌ஷன், ஸ்கிரீனை பாதுகாக்கும் 2.5டி கொரில்லா கிளாஸ் என எண்ணற்ற அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.


    அசுஸ் ரோக் 6 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆகிய இரு மெமரி வேரியண்ட்களில் வருகிறது. அதேபோல் அசுஸ் ரோக் 6 ப்ரோ 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 18ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி வேரியண்டை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு 3,000 எம்.ஏ.ஹெச் பேட்டரிகள் இடம்பெற்றுள்ளன. ட்ரிபிள் கேமரா செட் அப் உடன் வந்துள்ளது.

    அசுஸ் ரோக் 6 மாடல் பேண்டம் பிளாக் மற்றும் ஸ்டார்ம் ஒயிட் ஆகிய இரு நிறங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்ட் விலை ரூ.71 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் ரோக் 6 ப்ரோ மாடல் ஸ்டார்ம் ஒயிட் நிறத்தில் மட்டும் அறிமுகமாகி உள்ளது. இதன் 18ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.89 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ×