என் மலர்
மொபைல்ஸ்
- ஒன்பிளஸ் நிறுவனம் லேப்ஸ் கம்யூனிட்டி ரிவ்யூ விண்ணப்ப முறையை சமீபத்தில் துவங்கியது.
- ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2R மாடல் ஜூலை 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது அடுத்த நார்டு ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு பட்ஸ் 2R மாடல் ஜூலை 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருந்தது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் வகையில் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
டீசரில் ஸ்மார்ட்போனின் பெயர் மற்றும் வெளியீட்டு தேதி பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. டீசரில் ஃபாஸ்ட் அன்ட் ஸ்மூத் (Fast and Smooth) எனும் வாசகம் மட்டும் இடம்பெற்று இருக்கிறது. சமீபத்தில் தான் ஒன்பிளஸ் நிறுவனம் லேப்ஸ் கம்யூனிட்டி ரிவ்யூ விண்ணப்ப முறையை துவங்கியது. இதில் தேர்வு செய்யப்படுவோர் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனினை பயன்படுத்தி, அதனை ரிவ்யூ செய்ய முடியும்.

இதுதவிர ஒன்பிளஸ் வலைதளத்தில் பிரத்யேக போட்டிகள் நடத்தப்படுகின்றன. நேற்று (ஜூன் 23) துவங்கிய சிறப்பு போட்டிகள் ஜூலை 5-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அந்த வகையில் புதிய நார்டு பட்ஸ் 2R மாடல் அறிமுகமாகும் ஜூலை 5-ம் தேதியே புதிய நார்டு 3 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம்.
டீசர்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் அலர்ட் ஸ்லைடர் வழங்கப்படும் என்றும் கிரீன் நிறத்தில் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே வெளியான ரென்டர்களில் இந்த ஸ்மார்ட்போன் கிரே நிறம் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுதவிர புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் அம்சங்கள் ஒன்பிளஸ் ஏஸ் 2V மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஏஸ் 2V ஸ்மார்ட்போன் மாடலை சமீபத்தில் தான் சீன சந்தையில் அறிமுகம் செய்தது.
மற்ற ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே, இந்த மாடலும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதுதவிர ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.
- சாம்சங் நிறுவனம் புதிய கேல்கஸி M சீரிஸ் ஸ்மார்ட்போன் டீசரை வெளியிட்டது.
- புதிய கேலக்ஸி M34 5ஜி மாடல் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M34 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசரை சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. டீசரில் புதிய ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் வால்யூம் ராக்கர்களின் கீழ்புறமாக கைரேகை சென்சார் இருப்பது காணப்படுகிறது.
இதே போன்ற செட்டப் கேலக்ஸி M33 5ஜி மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய சாம்சங் M34 5ஜி மாடலில் 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.

டீசர்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதன் அருகிலேயே ஃபிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் சாம்சங் இந்தியா சப்போர்ட் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது.
அதன்படி இந்த ஸ்மார்ட்போன் SM-M346B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இது தவிர சாம்சங் நிறுவனம் கேலக்ஸி F34 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பிஐஎஸ் லிஸ்டிங்கில் அம்பலமானது. இந்த மாடல் SM-E346B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேல்கஸி M34 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இத்துடன் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது. இதன் வெளியீடு ஜூலை மாத வாக்கில் நடைபெறும் என்றும் விலை ரூ. 20 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
- விவோ நிறுவனத்தின் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒஎஸ் கொண்டுள்ளது.
- விவோ Y36 மாடலில் 50MP பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய விவோ Y36 ஸ்மார்ட்போனில் 6.64 இன்ச் FHD+ 90Hz டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ட் பேக் டிசைன், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

விவோ Y36 அம்சங்கள்:
6.64 இன்ச் 2388x1080 பிக்சல் Full HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
அட்ரினோ 610 GPU
8 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிலாஷ்
2MP டெப்த் கேமரா
16MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ
IP54 தர வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விவரங்கள்:
விவோ Y36 ஸ்மார்ட்போன் வைப்ரன்ட் கோல்டு மற்றும் மீடியோர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை விவோ இந்தியா இ ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் ரிடெயில் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.
- சாம்சங் கேல்கஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் தற்போது நான்கு நிறங்ளில் கிடைக்கிறது.
- கேலக்ஸி S23 அல்ட்ரா புதிய நிற வேரியண்ட்கள் சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட பிளாக்ஷிப் மாடல் முதன் முதலில் ஃபேன்டம் பிளாக், கிரீன் மற்றும் கிரீம் நிற ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் ரெட் மற்றும் லைட் புளூ என இரண்டு நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் புதிய நிற வேரியண்ட்களின் விலையும் அதன் மற்ற நிறங்களை போன்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் புதிய லைட் புளூ மற்றும் ரெட் நிற வேரியண்ட்கள் சாம்சங் வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் இதர ஸ்டோர்களில் கேலக்ஸி S23 அல்ட்ரா ஃபேன்டம் பிளாக், கிரீன் மற்றும் கிரீம் என மூன்று நிற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும். கேலக்ஸி S23 அல்ட்ரா 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி மாடல்கள் விலை முறையே ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா அம்சங்கள்:
6.8 இன்ச் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே
120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்
அட்ரினோ GPU
அதிகபட்சம் 12 ஜிபி ரேம்
அதிகபட்சம் 1 டிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5.1
IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
200MP பிரைமரி கேமரா
12MP அல்ட்ரா வைடு கேமரா
10MP டெலிபோட்டோ லென்ஸ்
10MP டெலிபோட்டோ லென்ஸ்
12MP செல்ஃபி கேமரா
5000 எம்ஏஹெச் பேட்டரி
45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி போர்ட்
- முதல் நாள் விற்பனையில் ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் 60 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானது.
- ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலின் விலை ரூ. 27 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்குகிறது.
ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சில தினங்களுக்கு முன் இதன் விற்பனை துவங்கிய நிலையில், முதல் நாளிலேயே 60 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டதாக ரியல்மி அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், விற்பனை துவங்கிய முதல் ஐந்து நாட்களில் ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல்கள் 2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக ரியல்மி அறிவித்துள்ளது. அறிமுகமானதில் இருந்தே ரியல்மி 11 சீரிஸ் மாடல்கள் அதிக பிரபலம் அடைந்து வருகிறது.

இதன் காரணமாக ரியல்மி ஏற்கனவே படைத்த சாதனங்களை அந்நிறுவனம் தற்போது முறியடித்து வருகிறது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல் ப்ளிப்கார்ட், ரியல்மி வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இதன் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல் கேமரா மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் தவிர அனைத்து அம்சங்களும் ரியல்மி 11 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் ரியல்மி 11 ப்ரோ மாடலின் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது.
ரியல்மி 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனையும் ப்ளிப்கார்ட், ரியல்மி வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.
- சர்வதேச சந்தையில் நத்திங் போன் 2 மாடல் அடுத்த மாதம் அறிமுகமாகிறது.
- நத்திங் போன் 2 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படுகிறது.
நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் ஜூலை 11-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய நத்திங் போன் 2 மாடலின் சிப்செட், டிஸ்ப்ளே அளவு மற்றும் பேட்டரி திறன் போன்ற விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், நத்திங் போன் 2 மாடலின் யுஎஸ்பி டைப் சி கேபிள் எப்படி காட்சியளிக்கும் என்பதை விளக்கும் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி நத்திங் போன் 2 மாடலுடன் வழங்கப்படும் யுஎஸ்பி டைப் சி கேபிள், நத்திங் போன் 1 உடன் வழங்கப்பட்டதை விட முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. நத்திங் போன் 2 உடன் வழங்கப்படும் யுஎஸ்பி டைப் சி கேபிள், சில்வர் நிற ஃபினிஷ் செய்யப்பட்டு, வெளிப்புறம் டிரான்ஸ்பேரன்ட் டிசைன் கொண்டிருக்கிறது.

டைப் சி கேபிள் நத்திங் பிரான்டிங் கொண்டிருக்கிறது. கேபிள் நிறம் வெள்ளை நிறத்தில் உள்ளது. நத்திங் போன் 2 மாடலுடன் சார்ஜர் வழங்கப்படாது என்று தெரிகிறது. நத்திங் நிறுவனம் 45 வாட் சார்ஜரை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்கிறது.
நத்திங் போன் 1 மாடலில் அதிகபட்சம் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்-க்கான சப்போர்ட் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் நத்திங் போன் மாடலில் எவ்வளவு சார்ஜிங் வேகம் வழங்கப்படும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை புதிய நத்திங் போன் 2 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் டாப் எண்ட் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, Full HD+ ரெசல்யூஷன், OLED பேனல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
நத்திங் போன் 2 மாடலுக்கு மூன்று ஆண்டுகள் முக்கிய ஆண்ட்ராய்டு ஒஎஸ் அப்கிரேடுகள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி பேட்ச் வழங்கப்படும் என்று நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் புதிய நத்திங் ஒஎஸ் பயனர்களுக்கு அதிவேக அனுபவம் மற்றும் புதிய அம்சங்களை வழங்கும் என்று தெரிவித்து இருக்கிறது.
- விவோ நிறுவனத்தின் X100 சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
- விவோ X100 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. பிரபல டிப்ஸ்டரான ஃபோக்கஸ் டிஜிட்டல் விவோ X100 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் ரென்டரை வெளியிட்டு உள்ளார். ஸ்மார்ட்போன் டிசைன் பற்றி வெளியாகி இருக்கும் தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த ரென்டர் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ரென்டர்களின் படி விவோ X100 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யுல் இடதுபுறமாக பொருத்தப்பட்டு உள்ளது. கேமரா மாட்யுலை சுற்றி செவ்வக வடிவம் கொண்ட மேட்ரிக்ஸ் பகுதி காணப்படுகிறது. தோற்றத்தில் புதிய ஸ்மார்ட்போன் விவோ X80 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில், விவோ X80 சீரிசை தொடர்ந்து விவோ X90 சீரிசை தவிர்த்து நேரடியாக விவோ X100 சீரிசை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

மற்றொரு டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், விவோ X100 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் லோயர் எண்ட் வேரியண்ட்கள் விவோ X100 ப்ரோ மற்றும் விவோ X100 எனும் பெயர்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
விவோ X100 மற்றும் விவோ X100 ப்ரோ மாடல்களில் மீடியாடெக் டிமென்சிட்டி 9300 சிப்செட், X100 ப்ரோ பிளஸ் மாடலில் அதிநவீன குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. விவோ X100 மாடலில் 50MP பிரைமரி கேமரா சென்சார், 32MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது.
- ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 11 ப்ரோ சீரிசில், ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல்கள் உள்ளன.
- இந்தியாவில் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது.
ரியல்மி நிறுவனம் தனது ரிய்லமி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ரியல்மி 11 ப்ரோ பிளஸ் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளத்தில் துவங்கியது. சில நாட்களுக்கு முன் விற்பனை துவங்கிய நிலையில், ரியல்மி நிறுவனம் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக அறிவித்து இருக்கிறது.
விற்பனை துவங்கிய முதல் நாளில் மட்டும் சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானதாக ரியல்மி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மேலும் ரூ. 25 ஆயிரத்திற்கும் அதிக விலை கொண்ட பிரிவில் அதிவேக விற்பனை இது என்றும் ரியல்மி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதுதவிர ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் விலை பிரிவில் முதல் நாளில் அதிக யூனிட்கள் விற்பனையை பதிவு செய்து இருப்பதாக ரியல்மி தெரிவித்துள்ளது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்திய சந்தையில் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலின் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது.
புதிய ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 2 ஆயிரம் வரை வங்கி சலுகை, எக்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் வாங்கும் போது, ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் வாங்கும் போது 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இந்த சலுகை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் வழங்கப்படுகிறது.
சற்றே குறைந்த விலையில் கிடைக்கும் ரியல்மி 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனை நேற்று (ஜூன் 16) துவங்கியது. இதன் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு வங்கி சலுகைகளின் படி ரூ. 1500 தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகையில் ரூ. 1500 தள்ளுபடி, ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் அதிகபட்சம் ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
- ஸ்மார்ட்போனின் முன்பதிவு, விற்பனை குறித்து எந்த தகவலும் இல்லை.
- கேலக்ஸி M34 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்படலாம்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M34 5ஜி ஸ்மார்ட்போனின் சப்போர்ட் பேஜ் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் லீக் ஆகி இருந்த நிலையில், தற்போது இதன் வெளியீடு விரைவில் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது. புதிய கேலக்ஸி M34 5ஜி ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி M33 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
சாம்சங் இந்தியா வலைதளத்தில் இடம்பெற்று இருப்பதன் மூலம் கேலக்ஸி M34 5ஜி மாடல் உருவாகி இருப்பது உறுதியாகிவிட்டது. இவை தவிர இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு மற்றும் விற்பனை குறித்து வலைதளத்தில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. சப்போர்ட் பேஜில் கேலக்ஸி M34 5ஜி ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் மட்டும் இடம்பெற்று இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி M34 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
சாம்சங் கேலக்ஸி M34 5ஜி ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், வாட்டர் டிராப் நாட்ச், மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், அதிகபட்சம் 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5 ஒஎஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது.
புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5MP மேக்ரோ சென்சார் மற்றும் 13MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் சார்ஜிங் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
- ஐகூ நியோ 7 ப்ரோ 5ஜி மாடல் ஐகூ நியோ 7 ரேசிங் எடிஷனின் ரிபிரான்டு செய்யப்பட்ட மாடலாக இருக்கலாம்.
- ஐகூ நியோ 7 ப்ரோ 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படலாம்.
ஐகூ நிறுவனம் தனது புதிய ஐகூ நியோ 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஜூலை 4-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முதல் டீசரில் போனின் பின்புறம் லெதர் போன்ற ஃபினிஷ் கொண்டிருக்கும் என்றும் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
முன்னதாக வெளியான தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ஐகூ நியோ 7 ரேசிங் எடிஷனின் ரிபிரான்டு செய்யப்பட்ட வேரியண்ட் ஆக இருக்கும் என்று கூறப்பட்டது. ஐகூ நியோ 7 ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஐகூ நியோ 7 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் FHD+ சாம்சங் E5 AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும். ஐகூ நியோ 7 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 8200 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்படுகிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. ஐகூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் மற்றும் ஐகூ ஆன்லைன் ஸ்டோரில் நடைபெற இருக்கிறது. இது பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
- இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் கொண்டுள்ளது.
- இதில் 108MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 16MP செல்ஃபி கேமரா உள்ளது.
இன்பின்க்ஸ் நிறுவனத்தின் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.78 இன்ச் FHD+ 120Hz எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர், 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க இந்த மாடலில் 108MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி அம்சங்கள்:
6.78 இன்ச் FHD+ 120Hz எல்சிடி ஸ்கிரீன்
NEG கிலாஸ் பாதுகாப்பு
மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர்
மாலி G57 MC2 GPU
4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 13
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
108MP பிரைமரி கேமரா
2MP டெப்த் சென்சார்
16MP செல்ஃபி கேமரா
5000 எம்ஏஹெச் பேட்டரி
45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி டைப் சி போர்ட்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போன் மேஜிக் பிளாக், இன்டர்ஸ்டெல்லார் புளூ மற்றும் சன்செட் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஜூன் 22-ம் தேதி துவங்குகிறது.
- நத்திங் போன் (2) மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது.
- இந்திய நேரப்படி ஜூலை 11-ம் தேதி இரவு 8.30 மணிக்கு அறிமுக நிகழ்வு துவங்க இருக்கிறது.
நத்திங் நிறுவனம் தனது போன் (2) மாடலின் வெளியீடு ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது நத்திங் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட்போன் ஆகும். கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி நத்திங் போன் (1) மாடல் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெளியீட்டு தேதி அடங்கிய டீசரில், "Come to the bright side" வாசகமும், எல்இடி லைட்கள், ஆக்டோபஸ் படமும் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் போக்கிமானில் உள்ள அல்காசம் என்ற குறியீட்டு பெயர் இடம்பெற்றுள்ளது.
நத்திங் போன் (2) மாடலில் வளைந்த டிசைன், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்து விட்டது. முந்தைய நத்திங் போன் (1) மாடலில் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

நத்திங் போன் (2) மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவரை சந்தையில் அறிமுகமாகி இருக்கும் மாடல்களை விட சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மாடலாக இருக்கும் என்று நத்திங் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் உற்பத்திக்கான கார்பன் வெளியீடு அதன் முந்தைய மாடலை விட 8.6 சதவீதம் குறைவு ஆகும்.
சர்வதேச வெளியீட்டின் போதே நத்திங் போன் (2) மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்திய நேரப்படி ஜூலை 11-ம் தேதி இரவு 8.30 மணிக்கு அறிமுக நிகழ்வு துவங்க இருக்கிறது. முந்தைய வழக்கப்படி நத்திங் போன் (2) மாடலின் விற்பனை அறிமுக நிகழ்வை தொடர்ந்து ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்க இருக்கிறது.
Photo Courtesy: Onleaks | Smartprix






