search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    அதிகபட்சம் 8 ஜிபி ரேம் கொண்ட இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி - பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்!
    X

    அதிகபட்சம் 8 ஜிபி ரேம் கொண்ட இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி - பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்!

    • இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் கொண்டுள்ளது.
    • இதில் 108MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 16MP செல்ஃபி கேமரா உள்ளது.

    இன்பின்க்ஸ் நிறுவனத்தின் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.78 இன்ச் FHD+ 120Hz எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர், 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க இந்த மாடலில் 108MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி அம்சங்கள்:

    6.78 இன்ச் FHD+ 120Hz எல்சிடி ஸ்கிரீன்

    NEG கிலாஸ் பாதுகாப்பு

    மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர்

    மாலி G57 MC2 GPU

    4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 13

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    108MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் சென்சார்

    16MP செல்ஃபி கேமரா

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

    யுஎஸ்பி டைப் சி போர்ட்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போன் மேஜிக் பிளாக், இன்டர்ஸ்டெல்லார் புளூ மற்றும் சன்செட் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஜூன் 22-ம் தேதி துவங்குகிறது.

    Next Story
    ×