search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹாக்கி சாம்பியஸ் கோப்பை"

    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் ஹாக்கி சாம்பியஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற இந்தியா, நெதர்லாந்து இடையேயான லீக் ஆட்டம் 1-1 என டிரா ஆனது. #IndiaKaGame #INDvNED #NEDvIND #HCT2018

    பிரிடா:

    37-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள பிரிடா நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. இது கடைசி லீக் போட்டியாகும். இந்த போட்டியை டிரா செய்தாலே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெரும். நெதர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கியது.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினருன் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதனால் முதல் பாதிநேர ஆட்டம் கோல் அடிக்கப்படாமல் சமனில் இருந்தது.



    தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 47-வது நிமிடத்தில் இந்திய வீரர் மந்தீப் சிங் கோல் அடித்து இந்திய அணிக்கு முன்னிலை கொடுத்தார். அதன்பின் 55-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் பிரிங்மேன் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.

    அதன்பின் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. இதன்மூலம் 8 புள்ளிகள் பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. இந்தியா இறுதிப்போட்டியில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. #IndiaKaGame #INDvNED #NEDvIND #HCT2018
    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் ஹாக்கி சாம்பியஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற இந்தியா, பெல்ஜியம் இடையேயான லீக் ஆட்டம் 1-1 என டிரா ஆனது. #IndiaKaGame #INDvBEL #BELvIND #HCT2018

    பிரிடா:

    37-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள பிரிடா நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது. 

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பாதிநேர ஆட்டத்தின் 15-வது நிமிடத்திற்குள் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். ஆனால் பெல்ஜியம் அணி முதல் பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.



    தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் பெல்ஜியம் அணியினர் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். ஆனால் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு பெல்ஜியம் அணியினரை கோல் போட விடாமல் தடுத்தனர். ஆட்டத்தில் இறுதி கட்டத்தில் 59-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் லாயில் லைய்பேர்ட் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.

    அதன்பின் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. முன்னதாக நடந்த மற்றொரு லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 4-1 என அர்ஜெண்டினாவை வீழ்த்தியது. #IndiaKaGame #INDvBEL #BELvIND #HCT2018
    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் ஹாக்கி சாம்பியஸ் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணியிடம் 3-2 என தோல்வியடைந்தது. #HCT2018 #INDvAUS #AUSvIND

    பிரிடா:

    37-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள பிரிடா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, நடப்பு சாம்பியனும், உலக சாம்பியனுமான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. 

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் லாச்லன் ஷார்ப் (ஆஸ்திரேலியா), 10-வது நிமிடத்தில் வருண்குமார் (இந்தியா)15-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கிரேக் டாம் (ஆஸ்திரேலியா) ஆகியோர் கோல் அடித்தனர். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை வகித்தது.



    தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் மிட்டென் டிரென்ட் கோல் அடித்தார். அதன்பின் 58-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் இந்திய அணியின் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இது ஆஸ்திரேலிய அணி பெற்ற 2-வது வெற்றியாகும். 

    இந்திய அணி இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது. #HCT2018 #INDvAUS #AUSvIND
    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் ஹாக்கி சாம்பியஸ் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா, அர்ஜெண்டினாவை 2-1 என வீழ்த்தியது. #HCT2018 #INDvARG #ARGvIND

    ப்ரீடா:

    சாம்பியஸ் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து நாட்டின் ப்ரீடா நகரில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய ஆறு அணிகள் கலந்துகொண்டுள்ளன. நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, அர்ஜெண்டினாவை எதிர்கொண்டது.

    இப்போட்டி தொடங்கியதில் இருந்தே இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டினர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் இந்திய அணிக்காக முதல் கோல் அடித்தார். அதன்பின் 28-வது நிமிடத்தில் இந்திய வீரர் மந்தீப் சிங் கோல் அடித்தார்.



    அதைத்தொடர்ந்து 29-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியினர் கோல் அடித்தனர். இதனால் முதல் பாதிநேர ஆட்ட முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை வகித்தது.

    அதைத்தொடர்ந்து இரண்டாவது பாதிநேர ஆட்டம் நடைபெற்றது. அதன் முதல் கால் பகுதிநேர ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாகவே அமைந்தது. இதனால் கடைசி 15 நிமிட ஆட்டத்தில் இரு அணியினரும் அதிரடியாக விளையாடினர். 

    இருப்பினும் இறுதிவரை யாரும் கோல் அடிக்காததால், இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. வருகிற 27-ம் தேதி நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. #HCT2018 #INDvARG #ARGvIND
    நெதர்லாந்து நாட்டில் இன்று தொடங்கிய ஹாக்கி சாம்பியஸ் கோப்பை தொடரின் அறிமுக ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானை 4-0 என வீழ்த்தியது. #HCT2018 #INDvPAK #PAKvIND

    ப்ரீடா:

    சாம்பியஸ் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து நாட்டின் ப்ரீடா நகரில் இன்று தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய ஆறு அணிகள் கலந்துகொண்டுள்ளன. இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும் இந்தியா, 13-வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.

    இப்போட்டி தொடங்கியதில் இருந்தே இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டினர். இரண்டாவது கால் பகுதிநேர ஆட்டத்தில் இந்திய வீரர் ரமந்தீப் சிங் இந்திய அணிக்காக முதல் கோல் அடித்தார். பாகிஸ்தான் அணியினர் முதல் பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 1-0 என முன்னிலை வகித்தது.



    அதைத்தொடர்ந்து இரண்டாவது பாதிநேர ஆட்டம் நடைபெற்றது. அதன் முதல் கால் பகுதிநேர ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாகவே அமைந்தது. இதனால் கடைசி 15 நிமிட ஆட்டத்தில் இந்திய அணியினர் அதிரடியாக விளையாடினர். 

    கடைசி நேர ஆட்டத்தின்போது இந்திய வீரர் தில்பிரீத் சிறப்பான முறையில் ஒரு கோல் அடித்தார். சிறிது நேரத்தில் மந்தீப் இந்தியாவுக்காக அடுத்த கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது. இறுதிநிமிட ஆட்டத்தில் ரமந்தீப் ஒரு கோல் அடித்தார். பாகிஸ்தான் அணியினர் இறுதி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது. 

    இந்தியா நாளை நடைபெறும் ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை எதிர்கொள்கிறது. #HCT2018 #INDvPAK #PAKvIND
    ×