search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாக்கி சாம்பியஸ் கோப்பை - லீக் போட்டியில் அர்ஜெண்டினாவை வீழ்த்தியது இந்தியா
    X

    ஹாக்கி சாம்பியஸ் கோப்பை - லீக் போட்டியில் அர்ஜெண்டினாவை வீழ்த்தியது இந்தியா

    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் ஹாக்கி சாம்பியஸ் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா, அர்ஜெண்டினாவை 2-1 என வீழ்த்தியது. #HCT2018 #INDvARG #ARGvIND

    ப்ரீடா:

    சாம்பியஸ் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து நாட்டின் ப்ரீடா நகரில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய ஆறு அணிகள் கலந்துகொண்டுள்ளன. நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, அர்ஜெண்டினாவை எதிர்கொண்டது.

    இப்போட்டி தொடங்கியதில் இருந்தே இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டினர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் இந்திய அணிக்காக முதல் கோல் அடித்தார். அதன்பின் 28-வது நிமிடத்தில் இந்திய வீரர் மந்தீப் சிங் கோல் அடித்தார்.



    அதைத்தொடர்ந்து 29-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியினர் கோல் அடித்தனர். இதனால் முதல் பாதிநேர ஆட்ட முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை வகித்தது.

    அதைத்தொடர்ந்து இரண்டாவது பாதிநேர ஆட்டம் நடைபெற்றது. அதன் முதல் கால் பகுதிநேர ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாகவே அமைந்தது. இதனால் கடைசி 15 நிமிட ஆட்டத்தில் இரு அணியினரும் அதிரடியாக விளையாடினர். 

    இருப்பினும் இறுதிவரை யாரும் கோல் அடிக்காததால், இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. வருகிற 27-ம் தேதி நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. #HCT2018 #INDvARG #ARGvIND
    Next Story
    ×