search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை - இந்தியா, பெல்ஜியம் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது
    X

    ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை - இந்தியா, பெல்ஜியம் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது

    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் ஹாக்கி சாம்பியஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற இந்தியா, பெல்ஜியம் இடையேயான லீக் ஆட்டம் 1-1 என டிரா ஆனது. #IndiaKaGame #INDvBEL #BELvIND #HCT2018

    பிரிடா:

    37-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள பிரிடா நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது. 

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பாதிநேர ஆட்டத்தின் 15-வது நிமிடத்திற்குள் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். ஆனால் பெல்ஜியம் அணி முதல் பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.



    தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் பெல்ஜியம் அணியினர் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். ஆனால் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு பெல்ஜியம் அணியினரை கோல் போட விடாமல் தடுத்தனர். ஆட்டத்தில் இறுதி கட்டத்தில் 59-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் லாயில் லைய்பேர்ட் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.

    அதன்பின் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. முன்னதாக நடந்த மற்றொரு லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 4-1 என அர்ஜெண்டினாவை வீழ்த்தியது. #IndiaKaGame #INDvBEL #BELvIND #HCT2018
    Next Story
    ×