search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைப்பு நிதி"

    • வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
    • முகாமில் பங்கேற்பவர்கள் என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்த பின்னர் இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம்.

    மதுரை

    மதுரை மண்டல ஆணையாளர் அமியகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட 6 மாவட்டங்களில் நிதி உங்கள் அருகில் குறை தீர்க்கும் முகாம் வருகிற 27-ந் தேதி காலை 9 மணி முதல் நடைபெறுகிறது.

    வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப்.டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்புநிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    முகாமில் பங்கேற்பவர்கள் என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்த பின்னர் இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம்.

    அதன்படி முகாம்கள் மதுரை மாவட்டத்தில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திலும், தேனி மாவட்டத்தில் சின்ன மனூர் நகராட்சி கூட்ட அரங்கத்திலும், சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி பேயன்பட்டியில் உள்ள செல்லப்பன் வித்யா மந்திரிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி கோட்டைமேடு ரஹ்மானியா கார்டன் மெட்ரிகுலேசன் பள்ளியிலும், விருதுநகர் மாவட்டத்தில் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திலும், திண்டுக்கல் மாவட்டத்தில் செம்பட்டி, ஆத்துப்பட்டி பிரிவில் உள்ள ஜெயின் குரூப் ஆப் இன்ஸ்டி டியூஷன்சிலும் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2023 மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் 13.40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
    • 2022-2023 நிதியாண்டில் 1.39 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளது.

    சேலம்:

    சேலம் இரும்பாலையில் இந்திய அரசின் ெதாழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நலன்களை வழங்கும் முதன்மையான அமைப்பாகும்.

    கடந்த 20-ந் தேதியன்று வெளியிடப்பட்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தற்காலிக ஊதியத் தரவின்படி, 2023 மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் 13.40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

    மார்ச் மாதத்தில் சேர்க்கப்பட்ட 13.40 லட்சம் உறுப்பினர்களில், சுமார் 7.58 லட்சம் புதிய உறுப்பினர்கள் முதல் முறையாக ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் இணைந்துள்ளனர்.

    புதிதாக இணைந்த உறுப்பினர்களில், 2.35 லட்சம் உறுப்பினர்கள் 18-21 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். 1.94 லட்சம் உறுப்பினர்கள் 22-25 வயதுடையவர்கள் ஆவர். புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களில் 18-25 வயதுடையவர்கள் 56.60 சதவீதம் ஆவர்.

    2.57 லட்சம் பெண்கள் பதிவு

    பாலின வாரியான ஊதியத் தரவுகள்படி, 2023 மார்ச் மாதத்தில் 2.57 லட்சம் பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். உறுப்பினர் சேர்க்கையின் அடிப்படையில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய 5 மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.

    தமிழ்நாடு 2-வது இடம்

    மொத்த உறுப்பினர்களில் இந்த மாநிலங்கள் 58.68 சதவீதம் பங்கு வகிக்கின்றன. இதில் மகாராஷ்டிரா 20.63 சதவீதம் உறுப்பினர்களுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு மாநிலம் 10.83 சதவீதம் உறுப்பினர்களுடன் 2-ம் இடத்திலும் உள்ளது.

    2022-2023 நிதியாண்டில் 1.39 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளது. முந்தைய நிதியாண்டான 2021-2022 உடன் ஒப்பிடும்போது 13.22 சதவீதம் உறுப்பினர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

    • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    மதுரை

    மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மதுரை அதன் மண்டலத் துக்கு உட்பட்ட 6 மாவட்டங்களில் "நிதி உங்கள் அருகில்" குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் 27-ந்தேதி நடைபெறுகிறது.

    அதன்படி இந்த மாதம் வருகிற 27-ந்தேதி காலை 9 மணி முதல் நடைபெறுகிறது. இதுகுறித்து மதுரை மண்டல ஆணையாளர் அமியகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் பதிவுபெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப்.டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது.

    முகாமில் பங்கேற்பவர்கள் t.ly/nPTtஎன்ற இணைய தள முகவரியில் தங்கள் விவரங்களை பதிவு செய்த பின்னரே இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம்.

    மதுரை மாவட்டத்துக்கு திருமங்கலம் பி.கே.என். மேல்நிலைப் பள்ளியிலும், தேனி மாவட்டத்துக்கு கம்பம் ஸ்ரீசக்தி விநாயகா மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், சிவகங்கை மாவட்டத்துக்கு தேவகோட்டை ஆர்ச் அருகில் வீரா மருத்துவ மனையிலும், விருதுநகர் மாவட்டத்துக்கு விருதுநகர் பழைய பஸ் நிலையத்தின்பின்புறம் கே.வி.எஸ்.நடுநிலைப் பள்ளியிலும், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பரமக்குடி கணபதி செட்டியார் வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல் நிலைப்பள்ளியிலும், திண்டுக்கல் மாவட்டத்துக்கு கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்திலும் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை மதுரை வருங்கால வைப்பு நிதி அலுவலக மண்டல ஆணையாளர் பி.சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

    • போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தீர்வு காண வேண்டும்
    • பணிக்கொடை, விடுப்பு தொகை உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன்கள் இரண்டு வருட காலமாக நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யூ.சி. ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாக குழு கூட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது.

    இதற்கு சங்கத் தலைவர் மல்லி ஜி.தியாகராஜன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் சந்திரமோகன் வரவேற்றுப் பேசினார். பொதுச்செயலாளர் அப்பாதுரை நடைபெற்ற பணியில் குறித்து பேசினார். போக்குவரத்து தொழிலாளர் ஓய்வு பெற்றோர் சம்மேளனத்தின் மாநிலத் துணைத் தலைவர் துரை.மதிவாணன் ஓய்வூதியர்களின் நீண்ட கால தீர்க்கப்படாத கோரிக்கை நிலை குறித்தும், தீர்வு காண வேண்டிய அவசியம் குறித்தும் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு தொகையை 11ஆம் தேதி நடைபெறும் 14-வது போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையில் தீர்வு காண வேண்டும், கடந்த 2020 மே மாதம் முதல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை , விடுப்பு தொகை உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன்கள் இரண்டு வருட காலமாக நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும், அரசு ஓய்வூதியர்களுக்கு நடைமுறை உள்ளது போன்ற மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், சங்க நிர்வாகிகள் சுந்தரபாண்டியன், மாணிக்கம், இருதயராஜ், சுப்பிரமணியன், ஞானசேகரன், நிர்வாக குழு உறுப்பினர்கள்கலியமூர்த்தி, குணசேகரன், தங்கராசு , ரெஜினால்டு ரவீந்திரன், கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    ×