search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேன் கவிழ்ந்து"

    • ரோட்டில் நடுவில் இருந்த தடுப்பு மீது மோதி கவிழ்ந்தது.
    • போலீசார் டிரைவர் கார்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு திண்டல் வள்ளி புரத்தான் பாளையத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளி வேனில் வழக்கம் போல் இன்று காலை பவானி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தது. ேவனை ஈரோடு கருங்க ல்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்தி ஓட்டி வந்துள்ளார். இந்த வேனில் உதவியாளர் சசிகலா மற்றும் 14 மாணவர்கள் இருந்தனர்.

    தொடர்ந்து பள்ளி வேன் பவானி- அந்தியூர் ரோட்டில் வந்து கொண்டு இருந்தது. வேன் அந்தியூர் பிரிவு பகுதியில் வரும் போது எதிர்பாராத விதமாக திடீரென ரோட்டில் நடுவில் இருந்த தடுப்பு மீது மோதி கவிழ்ந்தது. இதையடுத்து வேனில் இருந்த பள்ளி மாணவர்கள் அலறினர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பவானி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதை யடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேனில் இருந்த மாணவ, மாணவிகளை பத்திரமாக மீட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    இந்த விபத்தில் பவானி, வர்ண புரம் 5-வது வீதியை சேர்ந்த மாணவி அனுஸ்ரீ (13), பவானி பழனிபுரம் பகுதி யை சேர்ந்த மாணவி தக்க்ஷாநிதி (11), வாய்க்கால் பாளையம் பகுதியை சேர்ந்த சிறுவன் ஆகவா (4) ஆகிய 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் 3 பேரும் பவானி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து பவானி போலீசார் டிரைவர் கார்த்தி யிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பள்ளிக் குழந்தைகளை ஏற்றுக் கொண்டு வந்த பள்ளி வேன் ரோட்டின் பக்கவாட்டுச் சுவரில் மோதி கவிந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பவானி பகுதியில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் அருகே வளைகாப்பு கோஷ்டி வேன் கவிழ்ந்து 16 பேர் காயம் அடைந்தனர்.
    • கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்ைட அருகே ஒல்லியான்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வளைகாப்புக்கான ஒரு வேனில் கடலூர் அருகே அரிராஜாபுரம் கிராமத்துக்கு இன்று காலை சென்றனர்.

    கடலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்ைட அருகே ஒல்லியான்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வளைகாப்புக்கான ஒரு வேனில் கடலூர் அருகே அரிராஜாபுரம் கிராமத்துக்கு இன்று காலை சென்றனர். ஆலப்பாக்கம் பகுதியில் சென்ற போது வேனின் டயர் வெடித்தது.

    இதில் தறிகெட்டு ஓடிய அந்த வேன் சாலை ஓரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் சென்ற தங்கமணி (வயது 35), செல்வி (40), முத்தமிழ் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். வலியால் துடித்த அவர்களை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • 7 பேர் படுகாயம் அடைந்தனர்
    • கேரள மாநிலம் வயநாட்டுக்கு சுற்றுலா வந்தனர்

    ஊட்டி:

    சென்னையைச் சேர்ந்த 15 பேர் ஒரு வேனில் கேரள மாநிலம் வயநாட்டுக்கு சுற்றுலா வந்தனர். அவர்களுடன் வேன் டிரைவர்கள் 2 பேரும் இருந்தனர். அவர்கள் வயநாட்டில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று இரவு வேனில் சென்னைக்கு புறப்பட்டனர். ஊட்டியை கடந்து அவர்களது வேன் மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

    அதிகாலை 4 மணிக்கு 4-வது கொண்டை ஊசி வளைவில் வந்தது. அப்போது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் நடுரோட்டில் வேன் கவிழ்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் வேனில் இருந்தவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அவர்கள் வேன் கவிழ்ந்ததும் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதில் 7 பேர் படுகாயம் அடைந்திருந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் ஏராளமான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தற்போது சீசன் நேரம் என்பதால் நூற்று க்கணக்கான வாகனங்கள் அந்த வளைவுகளை கடந்து செல்கின்றன.

    புதிதாக வரும் வாகன ஓட்டிகள் இவ்வாறு வளைவில் திரும்ப முடியாமல் விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். இதற்காக ஊட்டியின் முக்கிய இடங்களில் போலீசார் நின்று வாகனங்களை மெதுவாக இயக்குமாறு கூறி துண்டுபிரசுரங்கள் வழங்கி வருகிறார்கள். இருந்தாலும் எதிர்பாராதவிதமாக விபத்துகள் நடந்து விடுகின்றன. 

    ×