search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெஸ்ட் இண்டீஸ் தொடர்"

    • டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது.
    • சூர்யகுமார் யாதவ் அதிரடியால் இந்தியா 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    கயானா:

    வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய இந்தியா சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், வெற்றிக்குப் பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியதாவது:

    இந்தப் போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதுபோன்ற நெருக்கடியான ஆட்டத்தில் நாங்கள் யார் என்பதை காட்ட வேண்டும். அதனால் இந்த ஆட்டத்தை நாங்கள் எதிர்நோக்கி இருந்தோம்.

    இந்த டி20 தொடரில் 7 பேட்ஸ்மேன்கள் போதும் என்ற முடிவுடன் தான் நாங்கள் களமிறங்கினோம். இதன்மூலம் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என நினைத்தோம்.

    ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடினாலே பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் ஒரு பேட்ஸ்மேன் வேண்டும் என்ற நிலை இருக்காது.

    சூரியகுமார் யாதவும் திலக் வர்மாவும் ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடுகிறார்கள்.அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து விளையாடக் கூடியவர்கள்.

    சூரியகுமார் யாதவ் போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது நிச்சயம் நல்லது தான். ஏனென்றால் அவர்கள் பொறுப்பை எடுத்துக் கொண்டு விளையாடுவார்கள். இதன்மூலம் மற்ற வீரர்களுக்கு அவர்கள் எடுத்துக்காட்டாக இருப்பார்கள் என தெரிவித்தார்.

    பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என பாண்ட்யா கடந்த போட்டியில் கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

    • இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
    • முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12-ந் தேதியும் 2-வது டெஸ்ட் 20-ம் தேதியும் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. இதனால் இந்தியா மீது மோசமான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 தொடருக்கான முதல் டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் உடன் இந்திய அணி தொடங்க உள்ளது. இதற்காக வரும் ஜூலை 12-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ந் தேதி வரை இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

    இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12-ந் தேதியும் 2-வது டெஸ்ட் 20-ம் தேதியும் நடைபெற உள்ளது. ஜூலை 27, 29, ஆகஸ்ட் 1-ம் தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது.ஆகஸ்ட் 3, 6, 8, 12, 13 ஆகிய தேதிகளில் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சில ஆட்டங்களில் (டெஸ்ட் தொடர் அல்லது வெள்ளைப்பந்து தொடர்) இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

    கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருவதால் அவருக்கு ஓய்வு தேவைப்படலாம் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சில ஆட்டங்களில் அவர் ஓய்வு எடுக்க அறிவுத்தப்படலாம் எனவும் தகவல்கல் வெளியாகி உள்ளன.

    ×