search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு பிரச்சாரம்"

    • தீபாவளி பண்டிகை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
    • மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த என்.கந்தம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் தீபாவளி பண்டிகை விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் போலி ஒத்திகை பயிற்சியினை செய்து காண்பித்தனர்.

    பின்னர் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.

    • அரசின் கல்வி சார் நலத்திட்டம் குறித்தும் வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
    • விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே அரசு பள்ளியில் மாண வர்கள் சேர்க்கை மற்றும் அரசின் கல்வி சார் நலத்திட்டம் குறித்தும் வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ராஜு தலைமை தாங்கி பிரச்சார வாகனத்தை கொடி யசைத்து தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ராதா கிருஷ்ணன், செலின்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பாரதி வரவேற் றார். பிரச்சார வாகனம் விருகாவூர், பொரசக் குறிச்சி, ஒகையூர், ஈயனூர், அசகளத்தூர், முடியனுர் வழியாக சென்று குரூரில் முடிவடைந்தது. இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் பலரும் கலந்து கொண்டு சேர்ப்போம், சேர்ப்போம், மாணவர்களை அரசு பள்ளியில் சேர்ப்போம். ஒழிப்போம், ஒழிப்போம், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம். பெண்கள் நாட்டின் இரு கண்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலம் 7 ஊராட்சிகளில் நேற்று ஒரே நாளில் 54 மாணவ- மாணவிகள் அரசு பள்ளி யில் சேர்க்கப்பட்டனர். இதில் எண்ணும் எழுத்தும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வண்ணத் தமிழன், வட்டாரவள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) அன்பழகன், இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், இல்லம் தேடி கல்வி தன்னார் வலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் போலீசாரால் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • சந்தேகப்படும் படியான நபர்கள் குறித்து அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு கூறினர்.

    விக்கிரவாண்டி, நவ.12–-

    கோவையில் காரில் குண்டு வெடித்த சம்பவம் எதிரொலியாக தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்திரவின் பேரில் தமிழகம் முழுவதும் போலீசாரால் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்திரவின் பேரில் விக்கிர வாண்டியில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான ெரயில் நிலையம், பஸ் நிலையத்தில் விழுப்புரம் மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள்  சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில், சப்-–இன்ஸ்பெக்டர் பார்த்த சாரதி , சிறப்பு சப்–-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டுகள் ராஜேஷ்கண்ணா, பாரதி, மோப்ப நாய் பயிற்சியாளர் வருண்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் வெடிமருந்து மோப்ப நாய் ராணி உதவியுடன் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். பி ன்னர் பொதுமக்களிடம் வெடிகுண்டுகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து சந்தேகப்படும் படியான நபர்கள் குறித்து அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு கூறினர்.

    • இந்தியாவில் ஆண்டுக்கு 35 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகுகின்றன.
    • 8 லட்சம் கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்

    அக்டோபர் 1 முதல் 31 ந் தேதி வரை நாடு முழுவதும் ஒரு முறைப் பயன்படுத்தும் ஒரு கோடி கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுவதற்கான இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் ஒரு முறைப் பயன்படுத்தும் 8 லட்சம் கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும் நேரு யுவகேந்திரா சங்கதன் உறுப்பினர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைப் பகுதிகள் போன்றவற்றில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியை மேற்கொள்வதோடு மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்படுவதாக கூறினார். 

    அக்டோபர் 27ந் தேதி திருநெல்வேலியிலும், அக்டோபர் 29ந் தேதி கோயம்புத்தூரிலும், அக்டோபர் 31ந் தேதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுவதோடு விழிப்புணர்வு பிரச்சாரமும் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் நாட்டு நலப்பணித் திட்டத்தில் 4 லட்சம் மாணவர்கள் உள்ளதாகவும், இவர்கள் மூலம் அக்டோபர் மாதத்தில் எட்டு லட்சம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்த திட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் செல்லையா தெரிவித்தார். கடந்த 21ந் தேதி வரை இந்த மாணவர்களைக் கொண்டு 7,50,000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ×