search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "single use plastic"

    • இந்தியாவில் ஆண்டுக்கு 35 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகுகின்றன.
    • 8 லட்சம் கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்

    அக்டோபர் 1 முதல் 31 ந் தேதி வரை நாடு முழுவதும் ஒரு முறைப் பயன்படுத்தும் ஒரு கோடி கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுவதற்கான இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் ஒரு முறைப் பயன்படுத்தும் 8 லட்சம் கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும் நேரு யுவகேந்திரா சங்கதன் உறுப்பினர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைப் பகுதிகள் போன்றவற்றில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியை மேற்கொள்வதோடு மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்படுவதாக கூறினார். 

    அக்டோபர் 27ந் தேதி திருநெல்வேலியிலும், அக்டோபர் 29ந் தேதி கோயம்புத்தூரிலும், அக்டோபர் 31ந் தேதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுவதோடு விழிப்புணர்வு பிரச்சாரமும் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் நாட்டு நலப்பணித் திட்டத்தில் 4 லட்சம் மாணவர்கள் உள்ளதாகவும், இவர்கள் மூலம் அக்டோபர் மாதத்தில் எட்டு லட்சம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்த திட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் செல்லையா தெரிவித்தார். கடந்த 21ந் தேதி வரை இந்த மாணவர்களைக் கொண்டு 7,50,000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • ஜூலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
    • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

    ஓஸ்லோ:

    ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது. 100 மைக்ரோனுக்கு குறைவான பிவிசி அல்லது பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

    சுற்றுச்சூழலுக்கும், கடற்சார் பகுதிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் போன்றவை ஜூலை 1-ம் தேதி முதல் தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனையை மற்றும் பயன்பாட்டை தடுக்க மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகளை அமைத்து தடை செய்யப்பட்ட பொருள்கள் மாநிலங்களுக்கு இடையே எடுத்துச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பை நார்வே அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பேசிய நார்வே தூதர்(பொறுப்பு) மார்ட்டின் ஆம்டால் போத்தேம் கூறுகையில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தத்தக்க பிளாஸ்டிக்கை தடை செய்த இந்திய அரசின் நடவடிக்கையை நார்வே வரவேற்கிறது. இந்த முக்கியமான நடவடிக்கையை எடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள். எங்கள் தூதரக வளாகத்தில் இந்த பிளாஸ்டிக் தடை நடவடிக்கையை மிகத் தீவிரமாக கடைபிடிப்போம். நார்வேயில் கடந்த ஆண்டே பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் உள்ள நகராட்சிகளுடன் பிளாஸ்டிக் குப்பைகளை எப்படி கையாள்வது என்பதை பகிர்ந்து கொண்டோம் என தெரிவித்தார்.

    • ஜூலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
    • இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியது.

    புதுடெல்லி:

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை செய்யப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

    ஒருமுறை பயன்படுத்தக் கூடிய குறைவான பயன்பாடு கொண்ட அதிக குப்பையை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருளின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்தும் நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • அனைத்து மாநிலங்களுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
    • நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவை குறைக்க வேண்டும்

    மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஒருமுறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நாட்டை உருவாக்குவதையும், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்குவதையும் ஒரு இயக்கமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நடவும், தூய்மையைப் பராமரிக்கவும் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி, கடந்த மே மாதம் 29ந் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார்.

    பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க சிறப்பு முயற்சிகளை எடுப்பதோடு, பெருமளவில் மரக்கன்று நடுவதை, அனைத்து குடிமக்கள் – மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், உள்ளூர் தொண்டு நிறுவனங்கள், சமூக சேவை அமைப்புகள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படையினர், பெருந் தொழில் நிறுவனங்களின் பங்கேற்புடன் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், தூய்மை இந்தியா இயக்கம் 2.0-ன்படி, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும், குப்பை சேகரிக்கப்படும் இடத்திலேயே 100% அளவிற்கு அவற்றை தரம் பிரிப்பதுடன், பிளாஸ்டிக் உள்ளிட்ட உலர் கழிவுகளை பிரிப்பதற்கான வசதிகளையும் மேற்கொள்வது அவசியம்.

    அத்துடன், தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் மூலம், குப்பைக்கிடங்குகள் அல்லது நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவையும் குறைக்க வேண்டும்.

    2,591 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஒருமுறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

    எஞ்சிய 2,100-க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளும், இந்த மாதம் 30ந் தேதிக்குள் ஒருமுறை மட்டும் உபயோகிக்கக் கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    இதற்கேற்ப மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு உரிய ஆதரவை வழங்குவதுடன், சிறப்பு நடவடிக்கைக் குழுக்களை அமைப்பது, திடீர் சோதனை நடத்துதல் மற்றும் தடை உத்தரவை மீறுவோருக்கு அதிக அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாகவோ, அல்லது சாலை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தும் வகையிலோ, அனைத்து மாநில அரசுகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், தங்களுக்கு அருகிலுள்ள சிமென்ட் ஆலைகள் மற்றும் பிற தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

    மாநகராட்சி மேயர்கள், வார்டு கவுன்சிலர்கள், தன்னார்வ நிறுவனங்கள், உள்ளூர் தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் சங்கங்கள், சந்தை அமைப்புகள் , சுய உதவிக் குழுவினர், மாணவர்கள், இளைஞர் குழுக்களின் பங்கேற்புடன் கூடியதாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இப்பணிகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஆவணப்படுத்துவதுடன், உயர்மட்ட அளவில் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×