search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரிவாக்க பணிகள்"

    • கடைகளில் ஷட்டர்களை 10 நாட்களுக்குள் அமைக்காவிட்டால் சீல் வைக்க உத்தரவு
    • வடசேரி பஸ் நிலைய விரிவாக்க பணிகள் நடைபெறுகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் மேயர் மகேஷ் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு சில கடைகளில் நடைபாதையில் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதை உடனடியாக அகற்ற மேயர் மகேஷ் உத்தரவிட்டார்.

    பின்னர் கடைகளில் ஷட்டர்கள் இல்லாமல் சீட்டுகளால் மூடப்பட்டு இருந்தது. அதை உடனடியாக மாற்றிவிட்டு ஷட்டங்கள் அமைக்க உத்தரவிட்டார். 10 நாட்களுக்குள் ஷட்டர் அமைக்காத கடைகளை சீல் வைக்கவும் மேயர் மகேஷ் உத்தரவிட்டார். மேல் கூரை சேதமடைந்ததை சீரமைக்க வும் அறிவுறுத்தினார்.

    குடிநீர் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் இருந்தது. அந்த தொட்டியை உடனடியாக மாற்றி விட்டு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்க மேயர் மகேஷ் உத்தரவிட்டார். தாய்மார்கள் பாலூட்டும் அறையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மேல் கூரை சேதமடைந்து இருந்தது.

    அந்த மேல்கூரையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன் அங்கு இருக்கைகள் அமைக்கவும் அறிவுறுத்தினார். அந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையை இரவு 9 மணிக்கு மேல் மூடி பராமரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் கட்டண கழிப்பறையை பார்வையிட்டார்.

    கழிவறை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியிடம் மகேஷ் குறைகளை கேட்டு அறிந்தார். மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் கழிவறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த கட்டுமான பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தையொட்டியுள்ள வடசேரி கூட்டுறவு பண்டகசாலை பல்பொருள் அங்காடியை ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் தங்களுக்கு பாமாயில் வழங்கவில்லை என்றும், பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டினார்கள். பின்னர் வடசேரி பஸ்நிலையம் விரிவாக்க பணிகள் நடைபெறுவதையடுத்து வடசேரி கனக மூலம் சந்தையில் செயல்படும் கடைகளை அண்ணா பஸ்நிலையத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆய்வு செய்தார். தற்காலிக கடைகளை எந்த பகுதியில் அமைக்கலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண் டார்.

    அப்போது பஸ் நிலையத்தின் சுரங்க நடைபாதையையொட்டியுள்ள காலி இடத்தில் தற்காலக கடைகளை அமைப்பது தொடர்பாக ஆலோசிக் கப்பட்டது. பஸ் நிலை யத்திற்குள் இருந்த இருசக்கர வாகனங்களையும் உடனடியாக அப்புறப்படுத்த மேயர் மகேஷ் அறிவுறுத்தினார்.

    காமராஜர் பில்டிங்கில் செயல்பட்டு வரும் கடைகளையும் ஆய்வு செய்தார். கட்டிடத்தின் முன் பகுதியில் வேறு நபர்கள் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று கூறினார். மேலும் அண்ணா பஸ் நிலையத்தில் கட்டண பார்க்கிங் வசதி ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வின்போது என்ஜினீயர் பாலசுப்ரமணியன், நகர்நல அதிகாரி ராம்குமார், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ரோஸிட்டா, இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், மாநகராட்சி மண்டல தலைவர் செல்வ குமார் மற்றும் திருமால், தி.மு.க. நிர்வாகி சரவணன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிகள் அடுத்த மாதம் தொடங்குகிறது.
    • 2 இடங்களில் தற்காலிக நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியா குமரி, கும்பகோணம், புதுக்கோட்டை,திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்ட ங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் தினமும் இயக்கப் படுகிறது. இங்கு 6ஆயிரம் பேருக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

    பஸ் நிலைய வளாகத்தில் பஸ் நிறுத்தும் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். பஸ் நுழைவு, வெளியேறும் பகுதியில் ஆபத்தான முறையில் காய்கறி, பழங்கள் விற்கின்றனர். பஸ் நிலைய தரைத்தளம் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. பிளாட்பார கடைகளில் கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுகிறது.

    இதையடுத்து ரூ.45 கோடி மதிப்பீட்டில் பஸ் நிலையத்தை சீரமைக்கவும் சந்தை திடல் வரை விரிவு படுத்தவும் நகராட்சி திட்டமிட்டது.இதற்காக நகராட்சி நிர்வாகத்துறை முதற்கட்டமாக ரூ.20 கோடியில் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி யுள்ளது.அடுத்த மாதம் விரிவாக்க பணிகளை தொடங்க நகராட்சி முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், புதிய பஸ் நிலையம் தற்போ தைய வாகன நிறுத்துமிடம் வரை வணிக வளாகத்துடன் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த பணிகள் முதற்கட்டமாக ரூ.20 கோடியில் தொடங்க உள்ளது. தொடர்ந்து கூடுதல் நிதியை பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறோம்.

    விரிவாக்க பணிக்காக மகர் நோன்பு பொட்டல் வரை பஸ் நிலையம் வர உள்ளதாக தவறான தகவல்களை கூறுகின்றனர். அவ்வாறு இல்லை. பழைய பஸ் நிலைய பகுதி, ராம நாதபுரம்-மதுரை ரோடு பிள்ளையார் கோயில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வீட்டு வசதி வாரிய காலியிடம் என 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர், நகராட்சி மண்டல இயக்குநரிடம் அனுமதி கேட்டுள் ளோம்.

    அனுமதி வந்தபின் போக்குவரத்து அதிகாரிகள் போலீசாருடன் ஆலோசனை நடத்தி பஸ்கள் நிறுத்தப்படும். வழித்தடங்கள் மற்றும் பஸ் நிலைய இடமாற்றம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.

    • ரூ.115 கோடி மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
    • சாலை விரிவாக்க பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    பல்லடம் :

    திருப்பூர் நெடுஞ்சாலை கோட்டத்தின் சார்பில், பல்லடம் - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இருவழிச் சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், வடிகால் கட்டுதல், தடுப்புச் சுவர் கட்டுதல், உள்ளிட்ட சாலை விரிவாக்க பணிகள் ரூ.115 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டபொறியாளர் ரமேஷ் கண்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலை விரிவாக்க பணிகளை தரமாகவும், அதே நேரத்தில் விரைவாகவும், பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை பல்லடம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் தனலட்சுமி, உதவிப் பொறியாளர் பாபு, மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    ×